புதன், 2 டிசம்பர், 2015

போ நீ போ. போடீ போ.

போ நீ போ போ நீ போ

தண்ணியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் மழையே போ
திவலையாகத் தவிக்கின்றேன் அழ வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் மூழ்குகிறது அன்பே போ
நான் போகும் வழியெங்கும் தடைகள்தான் தூரம்  போ

இது வேண்டாம் அன்பே போ தனைத்தேடும் அன்பே போ.
உயிரோடு விளையாட ஆசாரம் செய்தாய் அன்பே போ

ஓ ஓ ஓ உன்னாலே உயிர் வாழ்ந்தேன் ஒரு காலம் நான் மழையே.
உயிர்ப் பிச்சை நீ போட்டால் உயிர் வாழ்வேன் மாமழையே


இதுவரை உன்னில் நனைந்த என் நாட்கள்
மறுமுறை விரும்பவும் வழி இல்லையா
நகருள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
நிறைவடைந்தோடவும் வீதி இல்லையா

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

போ நீ போ போடீ போ

என் ஓலம் புரியலையா செவிடானாய் அன்பே போ
ஏரியை நான் தூர்த்ததனால் ஏரியாவை முழுங்கிய அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் மூழ்குகிறது அன்பே போ
நான் போகும் வழியெங்கும் தடைகள்தான் தூரம்  போ

இது வேண்டாம் ஊழியே போ
நிஜம் தேடும்  ஆழியே போ
உயிரோடு விளையாட ஆசாரம் செய்தாய் அன்பே ஏ ஏ  போ ஓ ஓ ஓ


தண்ணியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் மழையே போ
அணையாகத் தவிக்கின்றேன் அழ வேண்டாம் தூரம் போ

3 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நீர் நிலைகளை வாழிடங்களால் மாற்றியதன் பயன்
இன்று அனுபவிக்கிறோம்
கவி அருமை சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...