எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 டிசம்பர், 2015

கூடு

ஆரத் தழுவி
அநேக நாட்களிருக்கும்
தினம் நூறு முட்டையிட்ட கூடு
சிதிலமடைந்திருக்கிறது
சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன
முத்தப் பறவைகள்.
குஞ்சுகளின் கீச்சொலியும்
வாய் வாசமும் பதுங்கிக்கிடக்கின்றன
சலசலக்கும் இலைகளில்.
உதிரும் ஒவ்வொரு வைக்கோலிலும்
ஊட்டப்பட்ட துணுக்கைப் போல
அன்பும் சிதறுகிறது.
குஞ்சுகளுக்குக் கால் முளைத்ததும்
எங்கே காணாமல் போயின
தந்தைதாய்ப் பறவைகளுமென
யோசித்துக் கொண்டிருக்கிறது மரம்.

டிஸ்கி :- இந்தக் கவிதை 29. 3 2015 புது திண்ணையில் வெளியானது


6 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்.சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...