சனி, 19 டிசம்பர், 2015

நம்முடனே.

அவை நம்முடனே மரிக்கட்டும்
மறுதலிக்கப்பட்ட பொழுதுகள்
அவமானங்கள் காயங்கள் 
சின்ன சின்னக் கீழிறக்கங்கள்.
பழகிக் கொள்வோம்.

நம்மைப் பற்றிய நம் பிம்பங்கள்
நம்மைப் பற்றிய பிறர் பிம்பங்கள்
நம்மைப் பற்றிய நாமும் பிறரும் அறியா பிம்பங்கள்
நம்மைப் பற்றிய உண்மைகள்
நம்மைப் பற்றிய உன்னதங்கள்
நம்மின் கடைப்பட்ட குணங்கள்
அவை நம்முடனே ரகசியமாக இருக்கட்டும்மெல்ல மெல்லப் பாகலைப் போல ருசிப்போம்.
அவமானம் நல்லது.
அவை யார் வாய்க்கும் அவலாய் இல்லாதவரை.

மெல்லக் கொடுக்க வேண்டாம்
மெல்லவே மென்று மென்று கடந்து செல்லுங்கள்
அதுவும் கடந்து போகுமென..

ரகசியமாகவே வைத்திருங்கள்.
அவை நினைவிலிருந்து மரிக்காவிட்டாலும்
மறந்து போகும் வரை
அல்லது நாம் இறந்து போகும்வரை.

6 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

நல்ல கருத்துகள் பொதிந்த கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//நம்மைப் பற்றிய நம் பிம்பங்கள்
நம்மைப் பற்றிய பிறர் பிம்பங்கள்
நம்மைப் பற்றிய நாமும் பிறரும் அறியா பிம்பங்கள்
நம்மைப் பற்றிய உண்மைகள்
நம்மைப் பற்றிய உன்னதங்கள்
நம்மின் கடைப்பட்ட குணங்கள்
அவை நம்முடனே ரகசியமாக இருக்கட்டும்//

ஓக்கே, நீங்க சொன்னால் சரி. :)

அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்ன ஒரு கருத்து சகோ!! அருமை...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி கோபால் சார்

நன்றி துளசி சகோ

நன்றி ஜீவலிங்கம் யாழ்பாவண்ணன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...