வியாழன், 31 டிசம்பர், 2015

சீசாக்கள்..

முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது மழை .
பாதி நிறைந்த சீசாக்கள்
அங்கங்கே கிடக்கின்றன.
உருளும் அவற்றின் இதழ்களை
கலங்கலாகச் சுவைத்து 
அலமலங்கக் கிடத்தி இருக்கிறது வெள்ளம்.

பெரு நெருப்பாய் வீழும் துளிகளில்
தன் கண்ணீரையும் கண்ணாடித் துகள்களாய்
கரைத்தபடி உருண்டு போகின்றன
இருப்பை இழந்த சீசாக்கள்
கட்டிடங்களையும் மரங்களையும் பெயர்த்த மழை
எண்ணற்ற சீசாக்களை உருசிதை மாற்றத்தால்
ஐக்கியமாக்குகிறது ஒரு கொள்ளிடத்தில்.


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...