எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2015

பாபா சாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்காரின் 125 ஆவது பிறந்தநாளில் 22 உறுதிமொழிகள் பதாகை திறப்பு.

அம்பேத்காரின் 125 ஆவது பிறந்த நாளில் சென்னையில் உள்ள நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் ( தம்ம கிரந்தி யாத்ரா என்று நினைக்கிறேன் - மகாராஷ்டிரா -  நாக்பூரின் தீக்ஷா பூமியில்) 1956 இல் மேற்கொள்ளப்பட்ட சமத்துவமான சமுகத்தை உருவாக்கிடத் தேவையான 22 உறுதிமொழிகள் கொண்ட பதாகை திறக்கப்படுகிறது என்று  ஈ மெயில்  - PRESS INVITATION என்று தலைப்பிடப்பட்டு எனக்கு வந்திருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதை, சமநீதி, அரசியல் பொருளாதார சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, வர்க்க பேதம் நீக்குதல், பெண் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தியவர் என்று அம்பேத்காரின் மேல் அபிமானம் உண்டு. (சாஸ்த்ரி பவன் பெண்கள்/ தலித் பெண்கள் நலச்சங்கத் தலைவி சென்ற இரு வருடங்களுக்கு முன்னால் அம்பேத்கார் பிறந்த தினத்தில் அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் உரையாற்ற அழைத்திருந்தார். ) இந்த ஈமெயில் அழைப்பைப் பார்த்ததும் அந்த ஞாபகங்கள் அலைமோதின. 
இந்தப் பதாகைகள் செலக்ட் செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு வால் ஹேங்கிங் ஆக வழங்கப்படவும் இருக்கின்றனவாம். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் வசந்தி தேவி இந்தப் பதாகையைத் திறந்து வைக்கிறார்கள். சென்னை டி நகரில் உள்ள பள்ளி என்பதால் வாய்ப்பு இருக்கும் வலைப்பதிவர் கலந்து கொண்டு விபரங்களை எழுதுங்கள். மனித நேயத்தை விரும்பும் அனைவரும் செல்லலாம். :)

சிறப்பான காரியத்தை முன்னெடுத்துச் சென்று அம்பேத்காரின் உறுதிமொழிகளைப் பதாகையாக்கி வழங்கி மனிதநேயத்தைப் பரப்பும் சென்னை நவபாரத் பதின் நிலைப்பள்ளிக்கு வாழ்த்துகள். !



பத்ரிக்கையாளர்களையும் அழைத்திருக்கிறார்கள் , இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்ச்சியைப் பதிவு செய்ய. பதிவர்களுக்கும் அழைப்பு வந்திருக்கலாம் எனக்கு வந்ததைப் போல. (சென்னையில் இருந்தால் சென்றிருப்பேன். ஹைதையில் இருப்பதால் செல்ல இயலவில்லை )


The Programme :  Unveiling the Plaque with 22 vows that was             
                           administered by Dr. B.R. Ambedkar.

Date                     :  14.04.2015 ( Tuesday)

Time                    :   09.30 am to 11.30 am

Venue                  :   Navabharath Matriculation School
                                14-A, Solaiappan Street, T. Nagar, Chennai 600017.


Welcome Address         :  Ms. B. Lalitha Devi M. Com., M. Ed.,
                                         Principal, Navabharath Matriculation School, Ch-17.

Presided by                    : Dr. S.S.Rajagopalan, Senior Educationist.

Opening of the Plaque     : Dr. V. Vasanthi Devi , Former Vice - Chancellor

Felicitation                     :   Mr. S. Arumainathan, President, Tamil Nadu                                                               Students'- Parents' Welfare Association
                                   :   Mr. P.B.Suresh Babu, Advocate, High Court, Madras,
                                           Trustee, Advocate P.Balagopal Foundation

Vote of Thanks                :  P.B. Prince Gajendra Babu   
                                         Correspondent, Navabharath Matric. School, Ch-17

டிஸ்கி:- இதையும் பாருங்க.

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம்- அட்சயா ஃபவுண்டேஷன் -- அரும்பாக்கம் மிடில் ஸ்கூல்


5 கருத்துகள்:

  1. அன்பு சகோதரி
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. விழா சிறக்க வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி யாதவன் நம்பி சகோ. அழகான மனம்நிறைந்த வாழ்த்துக் கவிதை.

    வாழ்த்துக்கு நன்றி யாதவன் நம்பி சகோ

    மிக்க நன்றி தனபாலன் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நான் போகவில்லை விழாவுக்கு. புகைப்படங்கள் வந்துவிட்டன எனக்கு :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...