எனது பதிமூன்று நூல்கள்

வியாழன், 4 டிசம்பர், 2014

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்.

”மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் , நீ சொன்னால் காவியம்.” என்ற திரையிசைப் பாடலைக் கேட்டிருக்கலாம்.  புள்ளிகள் கோடுகள் கோலங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும் அந்தப் ஒரு பாடல் மனதில் ஓடியது. நிச்சயம் இந்தப் புத்தகம் ஒரு காலகட்டத்தின் காவியம்தான்.

நாடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் சாதனை நாட்டிய பாரதி மணி சாரின் ”பல நேரங்களில் பல மனிதர்கள்” இவரது இலக்கியப் பயணத்தில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். புள்ளிகள் கோடுகள் கோலங்களை அதன் அடுத்த ரீச்சிங் பாயிண்ட் என்று சொல்லலாம்.


நகைச்சுவையாக ஒருவர் பேசலாம். நகைச்சுவையோடேயும் அளவற்ற தன்னம்பிக்கையோடும் ஒருவர் வாழ முடியுமா என்றால் முடியும் அவர்தான் மணி சார். நல்ல மனிதநேயமிக்க மனிதர். பல்துறை வித்தகர். இசைத்துறை பற்றியும் நுண்பார்வை உடையவர்.

நல்ல க்ரிட்டிக். வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான். அதிலும் தான் காணும் நிகழ்வுகளை அடுத்தவர் புண்படாவண்ணம் கண்ணியமான நகைச்சுவையில் பகிர்ந்து செல்வது அவருக்கே கைவந்த கலை. சின்னக் கேலி சுடர்விடும் மொழி அவருடையது. சிரித்துவிட்டு நகர்ந்து விடலாம். சிலருடைய எழுத்தைப் போலக் குத்திக் காயப்படுத்தாது. :) தனிமனித துவேஷம் அறவே  அற்றவர். அதனாலேயே அவரைச் சுற்றிலும் அலைபோல் நண்பர்கள்.

 தன்னுடைய காலகட்டத்தை விருப்பு வெறுப்பற்றுப் பகிர்வதும் தன்னையும் இன்னொரு மனிதராக எட்டி நின்று பார்த்து கிண்டலோடு பகிர்ந்துகொள்வதும் இவருக்கே வாய்த்த கலை.

அதிகாலையில் எழுந்ததும் ஒரு வீட்டை அழகுபடுத்த கோலமிடுவோம். அதேபோல புள்ளிகள் ( தான் சந்தித்த பெரும்புள்ளிகளைப் பற்றியும் , தன்னைப்பற்றி பிற புள்ளிகள் கூறியது பற்றியும் ) அன்புக் கோடுகளால் பிணைத்து அருமையான கோலங்களாக உருவாக்கி இருக்கிறார் மணி சார். 

நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் இலக்கியத்துறையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தொய்வற்ற உழைப்பை இவரிடம் கண்டு வியந்திருக்கிறேன். இவருடைய அனுபவங்களின் ( சிறந்த கட்டுரைகள் & முகநூல் பகிர்வுகள் ) முழுத்தொகுப்பு  "புள்ளிகள் கோடுகள் கோலங்கள்"வம்சி புக்ஸ் கொண்டுவராங்க! 560 பக்கம். விலை 550/-

40 க்கும் மேல் சிறந்த சுவாரசியமான/சர்ச்சைக்குள்ளாகப் போகும் ( ! ) கட்டுரைகள், பிரபலங்களின் வாழ்த்துகள், வண்ணதாசன் முன்னுரை, ஜெயமோகன், நாஞ்சில்நாடன் வாழ்த்துரைகள், வண்ணநிலவன், பொன்னீலன், தமிழச்சி, ஷைலஜா ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றுள்ளன. 

 மாபெரும் மனிதரின் சரித்திரத்தைப் புத்தகமாகக் கொண்டுவரும் வம்சி ஷைலஜா, பவா செல்லத்துரை ஆகியோருக்கும் வம்சிக்கும் பாராட்டுகள்.  மனிதநேயமிக்க மாமனிதரின் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகள்.

டிஸ்கி :- அசடன் புத்தகத்தில் சுசீலாம்மா ” குற்றமும் தண்டனையும் “ நூலுக்கு நான் அனுப்பிய விமர்சனக்   கடிதத்தை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள். அதேபோல சூரியக் கதிருக்காக பாரதி மணி சாரை நான் எடுத்த நேர்காணலும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இந்த கௌரவத்தை எனக்களித்த மணி சாருக்கும் வம்சி பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். :) 
 

4 கருத்துகள்:

 1. anrs63gmail.com Sadguru1# உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் ம...":

  இந்த சின்ன வயதில் இவளவு ஆழமா// என்னை வியக்க வைக்கும் சில மனிதர்களில் இவரும் ஒன்று.. பல விஷியங்களில் கருத்து வேறுபாடு வந்தாலும் அதனை அழகாக எடுத்து உரைப்பதில் நிகரே கிடையாது ....

  இதற்க்கு மேல் மீண்டு வருவேன் ..


  ஆ.நா.ர.ச.  ---- தவறுதலாக இந்தக் கருத்தை வெளியிடும்போது நீக்கு பட்டனில் கர்ஸர் பட்டுவிட்டது. எனவே நானே இங்கே பேஸ்ட் செய்கிறேன். :) நன்றி ரவிசங்கர் ஏ நாகராஜன் :)

  பதிலளிநீக்கு
 2. ஆஹா...'ஒன் புக் வொண்டர்' என்றதிலிருந்து விடுபட்டுட்டாரா!!!!

  பழகுவதற்கு எவ்ளோ இனிய மனிதர் இவர்! பத்து நிமிசம் பேசிக்கிட்டு இருந்தால் கூட வெளிவந்து விழும் சமாச்சாரங்கள் எல்லாம்...'ஹைய்யோ! லட்டு போல எழுதலாமே'ன்னு தோணிப்போகும்.

  இனிய தகவலுக்கு நன்றி தேனே!

  பாரதி மணி ஐயாவுக்கு எங்கள் மனம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...