வியாழன், 11 டிசம்பர், 2014

மலைகள் எத்தனை வகைகள்.. ( MOUNTAIN DAY )

மரம் செடி கொடிகள் , மற்ற மலை வாழ் உயிரினங்கள் வாழும் இடத்தை நாம் ப்ளாஸ்டிக் மலைகளால் மூடி வருகிறோம். பத்தாதுக்கு ப்ரபஞ்ச ரகசியத்தை அறிகிறோம் என்று மலையைக் குடைந்து ஒரு அணு ஆய்வுக்கூடம் ( நியூட்ரினோ ) கட்ட முயற்சி நடந்து வருது.  மான்களும் முயல்களும், யானைகளும் காட்டெருதுகளும் , புலிகளும் உலவும் மலையையே துண்டு துண்டாக வெட்டி  கூறு போட்டு தின்னத் தெரியும் நமக்கு. நம்மால் உருவாக்க முடியாத பொருள்களில் மலையும் ஒன்று. நிலத் திட்டுகள் நகர்ந்து மலையை உருவாக்குகின்றன. இவை குஜராத்,  ஆந்திரா, கேரளா,  கர்நாடகா, மலேஷியா, ஓம்காரேஷ்வர், (சேலம், பழனி, கோவை), தமிழ்நாட்டில்  நான் பயணம் செய்தபோது புகைப்படம் எடுத்த மலைகள்.

 குவாலியரிலிருந்து போபாலுக்கு வரும் வழியில் விந்தியா சத்புரா மலைகள்.

ஆந்திராவில் ஹைதைக்கு அருகே உள்ள மலைகளை ஒரு ரயில் ப்ரயாணத்தின்போதே  எடுத்தேன்.


கேரளா பொன்முடி.

பெங்களூர் டூ ஹோசூர்.

மலேஷியா பத்துப்பஹாட் ( பத்துமலை )

ஓம்காரேஷ்வர், குஜராத்.

சேலம் சேர்வராயன் ஹில்ஸ்.

பழனி மலை.
மருதமலை
ஆதிவாசிகளை விரட்டி விடலாம். ஆனால் ஒரு சாமியை அந்த மலையில் உக்கார வைத்துக் கோயில் கட்டி விட்டால்தான் அந்த மலையை எந்த ஆசாமியும் தொட முடியாது போல. அதேபோல கோட்டைகள் கட்டப்பட்டு சரித்திரச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும் மலைகளையும் சிதைக்க முடியாது இனி. ஏற்கனவே கோட்டைகளால் சிதைக்கப்பட்ட மலைகள் இன்னொரு தொடரில் சொல்வேன். ( பிதார், குவாலியர், குல்பர்கா )

மண், கல், பாறைகளால் ஆன மலைகள். கனிமங்கள், மூலிகைகள் மரங்கள்,உயிரினங்கள்,  இவை பொதிந்த  மிச்ச சொச்ச மலைகளையாவது பாதுகாப்போம்.


6 கருத்துகள் :

priyasaki சொன்னது…

அழகா மலைகளை புகைப்படம் எடுத்திருக்கிறீங்க. 2வது மலை,பழனிமலையும் அழகு. //ஆதிவாசிகளை விரட்டி விடலாம். ஆனால் ஒரு சாமியை அந்த மலையில் உக்கார வைத்துக் கோயில் கட்டி விட்டால்தான் அந்த மலையை எந்த ஆசாமியும் தொட முடியாது போல.//செம!!
-நன்றி-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகோ அழகு...

வல்லிசிம்ஹன் சொன்னது…

ரொம்பவே நல்லா இருக்கு தேனம்மா. மலைகளை அழித்துக் கட்டிடம் கட்டிப் பொருள் சேர்ப்பவர்கள் அதனாலயே வருத்தமுறுவார்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பொன்மலை பார்த்திருக்கிறேன்.....

மற்ற இடங்களும் அழகு....

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா அழகான கருத்துக்கு நன்றி ப்ரியசகி அம்மு. :)

நன்றி தனபாலன் சகோ

நன்றி வல்லிம்மா. ஆம் அம்மா

நன்றி வெங்கட் சகோ. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...