எனது நூல்கள்.

வியாழன், 18 டிசம்பர், 2014

காண்டாமணியும் பிச்சைத் தட்டும். :-

ஊசிமுனை அமர்வு
சுகம் உனக்காய்
காத்திருப்பதை விட.

ஆசனவாய் வழி அது
கபாலம் பாய்ந்தாலும்
இருப்பின் வலி குறைவு,

ஞாபகம் புரட்டிய வெளியில்
கோயில் வாசலில்
பிச்சைக்காரனாய்,
உன் கருணைக்காய்த்
தட்டேந்திக் காத்து,

போவோர் வருவோரின்
காசுகளால்
நிரம்பிக் கிடக்கிறது தட்டு.

பல்லாக்கில்
பவனிவரும் நீ..
பக்கம்கூடத் திரும்பாமல்
பதுமையாய்..உன் நினைப்பில்கூட
நானிலையென்ற
நிதர்சனம்
நிறைக்கிறது என் கண்ணை.

விசிறியெறிய
நினைக்கிறேன்.
உன்னையும்
என் தட்டையும்.

காண்டாமணி ஒலிக்கிறது
சத்தமிட்டு
உனக்கிங்கே
எந்த இடமுமில்லையென.

தட்டை அணைத்து
அதற்கு என்னைக் கொடுத்து
நகர்கிறேன்
உன்னை விட்டு.

டிஸ்கி:- இந்தக் கவிதை செப் 4, 2014 அதீதத்தில் வெளியானது. 

3 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஈது என்ன தேனம்மா. திரை போட்டு மறைத்தாலும் மறையாத அன்பு இறைவன் அல்லவா அவன்.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் வல்லிம்மா. அவ்வப்போது அவருடனும் அன்புச் சண்டை :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...