எனது நூல்கள்.

சனி, 13 டிசம்பர், 2014

சனிக்கிழமைப் பதிவு. முரளிகிருட்டிணன் சின்னதுரையின் அகரமுதல எழுத்தெல்லாம்..


முரளிகிருட்டிணன் சின்னதுரை. முகநூல் நண்பர், சகோதரர், வயசுப்படிப் பார்த்தால் என் பிள்ளைகள் வயசுன்னும் சொல்லலாம்.


இளங்கலை கணினியல் துறையில் பொறியியல் பட்டம் பயின்றவர். ஊடகவியலாளர்.

தமிழ் மொழி மீது பற்று உள்ளவர்.. சமூக செயற்பாட்டாளர். புதிய யுகம் தொலைக்காட்சி வழங்கும் பல நிகழ்ச்சிகளில் ( டாக் இட் ஈஸி, மனம் திரும்புதே, கிச்சன் காபினெட், ) இவரின் பணி இருக்கிறது. இளையோர் குரல் என்னும் இலக்கியப் பத்ரிக்கை நடத்தி வருகிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்தில்   மானூர் புகழேந்தி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் என்ற பட்டம் வழங்கினார்.

சாட்டர்டே ஜாலிகார்னர், சாட்டர்டே பதிவு என்று இரு போஸ்ட்களை என் வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்று ஒரு முறை முகநூலில் போட்டதும் உடனே வந்து ( அது பேராசிரியர் குணா அவர்களின் தமிழ்மொழி பற்றிய பதிவு ) ஏன் சனிக்கிழமைப் பதிவு என்று போடலாமே. ஏன் ஆங்கிலத்தில் போடணும் என்று உள்டப்பியில் வந்து குரல் கொடுத்தவர். அவ்வளவு மொழிப்பற்று.

/// திருக்குறளும், திருவள்ளுவரும் அரசியல் பாடு பொருள் ஆகியது.///

///உலகில் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது திருக்குறள்....
இது பாசக ஆட்சிக்கு வரும் முன்பே நடந்தது என்று அறிந்துக் கொள்வோமாக
ஆங்கிலத்தில் couplets என்று சொல்வார்கள்///

///திருவள்ளுவரும், திருக்குறளும் வாஜ்பாய் காலத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள் போலும் ....///

என்றெல்லாம் அவரின் முகநூல் சுவற்றில் நிலைத்தகவல்களைப் பார்த்ததும் உடனே  ஒரு கேள்வி கேட்டேன் . ஆனால் அரசியல் காரசாரம் எதுவும் வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க. , நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதோ. 

///திருக்குறளும் திருவள்ளுவரும்..  ////


அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
-குறள்

குறளைப் பொறுத்தவரை இரண்டாம் அடியை முதலில் படித்து முதல் அடியை இரண்டாவதாகப் படிக்க வேண்டும் ...

அப்படி படிக்கையில் ஆதிபகவன் முதற்றே உலகு அகர முதல எழுத்தெல்லாம்.

ஒரு மொழி தோன்றினால் மட்டுமே ஒருவேளை நீங்கள் கடவுளை உணர்ந்தாலும் கூட உணர்ந்ததை சொல்ல ஒரு மொழி வேண்டும்

அதிலும் சிறப்பான மொழி அகரத்தை முதல் எழுத்தாக கொண்ட தமிழ் மொழி ...ஆக வள்ளுவர் சொல்லுகிறார் தமிழ் மொழி கடவுள் தோன்றும் முன்னே தோன்றிய மொழி

கடவுள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை

 டிஸ்கி :- இதென்ன மினி மீல்ஸ் மாதிரி கொடுத்துட்டீங்க முரளி. ஹ்ம்ம் ஆகையால்  கடவுளுக்கும் முன்னே தோன்றிய மொழி தமிழ் மொழியா..கடவுள் கண்டுபிடிக்கப்படும் முன்னே... ( கமல் சொல்றா மாதிரி இருக்கு. :) புரியுது ஆனா புரியல.. :) )

வள்ளுவரும் கடவுளைப் பத்தி யார்னும் இவர்தான் அவர்னும் குறிப்பா சொல்லலைன்னாலும் 

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும்

னு சொல்லி இருக்காரே முரளி. இது பத்தி என்ன சொல்றீங்க.. :) 

சனிக்கிழமைப் பதிவுக்கு என்னையே பதில் சொல்ல வைத்த முதல் ஆள் நீங்கதான் முரளி..  வாழ்க தமிழ்மொழி, வளர்க திருக்குறளின் புகழ். ! 


4 கருத்துகள் :

வல்லிசிம்ஹன் சொன்னது…

உங்களையே பதில் எ<உத வைத்த பெருமை அவருக்குத் தான் தேனம்மா.

Muralikrishnan Chinnadurai சொன்னது…

தேனம்மை மேலே நீங்கள் மேற்கோள் காட்டிய குறளையும் நன்றாக பாருங்கள் வானுறையும் தெய்வம் என மழையை குறிப்பிடுகிறார் . மழைக்கு ஒப்பாக தானம் வழங்குவோரே வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் ஆவர்

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் வல்லிம்மா :)

ஹ்ம்ம் எந்தக் குறளைச் சொன்னாலும் அதுக்கு தோதா சொல்லிடுவீங்க முரளி. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...