எனது நூல்கள்.

சனி, 6 டிசம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

என் வலைத்தளத் தங்கை ஜலீலா கமால். சமையல் அட்டகாசங்கள் என்ற வலைப்பதிவில் அட்டகாசமான சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து வருகிறார். சென்னை ப்ளாசா என்ற ஒரு கடையை ( ஹிஜாப், புர்கா , பர்தா , ஷேலா, மக்கானா  -- ஸ்பெஷல் ) நிர்வகித்து வருகிறார். (இவரது கடை பற்றி விவரம் உள்ள முகநூல் பக்கம் இது  https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975) சென்னையில் ட்ரிப்ளிகேனில் ஒரு முறை அகஸ்மாத்தாக ஒரு மழைக்கால மாலை நேரம் சந்தித்து ஆச்சர்யப்பட்டுக் கை கொடுத்து அளவளாவி வந்தோம். மழைச்சாரல் போன்ற குளுமையான சிரிப்புக்குச் சொந்தக்காரர் ஜலீலா. அவரது பையனும் வந்திருந்தான். உடனே என் கணவரிடம் காமிராவைக் கொடுத்து ஒரு க்ளிக்கிக் கொண்டோம். ( நாந்தான் சுளுக்கும் அளவு சிரித்திருந்தேன் சந்தோஷத்தில் . :) 

அவர் வலைத்தளத்தில் அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை என்ற பதிவைப் பார்த்துவிட்டு , பொதுவாக பெண்களை மசூதிப்பக்கம் பார்த்ததாக நினைவில் இல்லையே. மிகவும் ஸ்ட்ரிக்டான அந்த நாட்டில் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று ஒரு எண்ணம்  மனதில் எழ இப்படி ஒரு கேள்வி கேட்டேன் . அவரும் அழகாகப் பதில் சொல்லி இருக்கிறார். 

அன்பின் ஜலீலா நலம் நலமே மலர்க. மிகப் பெரும் வலைப்பதிவரான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .

என்னுடைய வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலி கார்னர், சாட்டர்டே போஸ்ட் என்ற இரு இடுகைகள் வெளியிடுகிறேன்.
நான் ஒரு கேள்வி கேட்பேன் அதற்குத் தாங்கள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
////  துபாயில் பெண்கள் தொழுகை பற்றி எழுதி அனுப்ப முடியுமா. . ?///

தேனக்கா சாட்டர்டே ஜாலி கார்னர் என்னும் பதிவு போட்டு வருகிறார்கள், என்னையும் அழைத்தார்கள், ஆனால் என்னிடம் துபாயில் பெண்கள் தொழுகை பற்றி சொல்லுமாறு கேட்டு கொண்டார்கள், ரொம்ப சந்தோஷம் நான் இந்த டாப்பிக்கை மிகவும் வரவேற்கிறேன்.

மற்ற மதத்தவர்களுக்கு பாங்கு கொடுக்கும் சத்தம் கேட்கும் போது அல்லா கூவுது என்பார்கள். தொழுகை நேரம் வந்து விட்டது  என்பார்கள். ரோட்டோரம் வசிப்பவர்கள் பாங்கு சொல்லும் சத்தம் கேட்பதை வைத்தே நிறைய பேர் கடிகாரம் பார்க்காமல் அவரவர் செய்யும் வேலைகளை நிர்ணயித்து கொள்வார்கள்.

ஆனால் நிறைய பேருக்கு  தொழுகை என்றால் என்ன?  அது எத்தனை வேளை தொழுகை, தொழுகைக்கு எப்படி தயாராகுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. 
எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


தொழுகை என்பது    முஸ்லீம்களின் மதக்கடமைகளில் ஒன்றாகும்.
குழந்தைகளை ஏழு வயதில் இருந்து தொழுகைக்கு தயார் படுத்தவேண்டும்.
வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளையும் கண்டிப்பாக அல்லாஹ்வைத் தொழ வேண்டும். ஐந்து வேளை தொழுகைக்கு கால நேர அட்டவனையும் உண்டு.

மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான்!தொழுகையினால் உடல் சுத்தம் மற்றும் மனச் சுத்தம் கிடைக்கிறது. .

தொழுகைக்கு மிகவும் சுத்தம் தேவை, பள்ளி வாசலில் கூறப்படும் பாங்கோசைக்கு பிறகு தொழ வேண்டும், தொழுவதற்கு முன் ஒலு(ழு)/Ablution எடுக்கனும் ஓலு என்பது இரண்டுகைகள், இரண்டு கை மணிக்கட்டுகள் , முகம், கண், மூக்கு, நெற்றி ,இரண்டு கால்கள் பிடரி வரை இவற்றை கழுவுவததாகும்.


நாம் தொழும் போது அல்லாவிடம் பேசுகிறோம் என்ற பயத்துடன் இறையச்சத்துடனும் தொழ வேண்டும்.தொழுகை என்பது இறைவணக்கத்துடன் கூடிய உடற்பயிற்சியும் ஆகும்.


பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள், ப்ரசவ நேரம் 40 நாட்கள் வரை  தொழகை கிடையாது. அவர்கள் சுத்தமானதும் தொழுகையை ஆரம்பித்து கொள்ளலாம்.
 நோன்பு காலங்களில் இந்த ஐ வேளை தொழுகை தவிர சிறப்பு தொழுகைகளும் உண்டு, அப்போது எல்லா பெண்களும் முடிந்தவர்கள் பள்ளி வாசலில் சென்று தொழுவார்கள்.
இங்கு பள்ளி வாசல்களில் ஊர்காரர்கள் ஒன்று சேர்ந்து ஈ டி ஏ வில் தொழுகைக்கென இடம் ஒதுக்கி நோன்பு காலங்களில் 30 நாட்களும் பெண்கள் தொழ ஏற்பாடு செய்துள்ளார்கள். 

இங்கு பெரு நாள் தொழுகையின் போது ஈத்கா என்னும் பெரிய மைதானம் உள்ளது, அங்கு சென்று பெருநாள் தொழுகையை தொழுவோம் அங்கும் ஆண்களுக்கு தனி இடம் , பெண்கள் தொழுகைக்கு என்று தனி இடம் உண்டு. இங்கு பல நாட்டு பெண்கள் அதாவது நம் நாட்டு பெண்கள், அரபி பெண்கள், ஈரானி, சூடானி , கேரளா, பங்களாதேஷி, பாக்கிஸ்தான், என்று பல நாட்டு பெண்களையும் அங்கு சந்திக்கலாம்.  அங்கு சென்று தொழுதுவிட்டு அவரவர் சொந்தங்களை சந்தித்து வருவார்கள்.
 
பெண்கள் தொழும் இடம்.

 நான் முதல் முதல் துபாய் வந்த போது பள்ளி வாசல்களில் பெண்களுக்கென தனியாக தொழுகை இடம் இருக்கிறது என்பது தெரியாது. ஆகையால் எங்கு வெளியில் போவதாக இருந்தாலும் காலையில் இருந்து நான்கு வேளைத்தொழுகைகளையும் விட்டிலேயே முடித்து விட்டு தான் வெளியில் போவோம். கடைசி ஐந்தாவது வேளை தொழுகை மட்டும் வெளியில் சென்று வந்து  இரவு 12 மணிக்குள் தொழுது முடிப்போம். 

பிறகு தான் தெரிய வந்தது , ஏழு எமிரேட்ஸிலும் அதாவது துபாய், ஷார்ஜா, அபுதாபி,புஜேரா,ராசல் கைமா, உம்முல் கொய்ன் , தொலை தூரம் , ஹைவே சென்றாலும் அங்காங்கே உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தொழுகை வசதி உள்ளது. அங்காங்கே மஸ்ஜீத் (பள்ளி வாசல்) களும் இருக்கின்றன.

எல்லா இடங்களிலும் அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள் கண்டிப்பாக பள்ளி வாசல்கள் உண்டு. அங்கேயே பெண்களுக்கென்று பிரேயர் ஹாலும் தனியாக இருக்கும்.இது பள்ளிவாசல்களின் பின்புறம் பெண்கள் தொழுகை இடம் அமைந்து இருக்கும்.
அங்கேயே பாத்ரூம் வசதிகள் , ஒலு எடுக்கும் வசதிகள் , தொழும் இடம், உள்ளேயே குர் ஆன், தொழுகை விரிப்பு , தொழும் போது போட்டுகொள்ள புர்காக்கள் துப்பட்டாக்கள் எல்லாமே இருக்கும்.உடல் நிலை சரியில்லாதவர்கள் ,நின்று தொழ முடியாதவர்கள்  சேரில் அமர்ந்து தொழலாம்.எல்லா பள்ளி வாசல்களிலும் சேர்களும் போட்டு இருப்பார்கள்.

ஏழு எமிரேட்ஸிலும், துபாய், ஷார்ஜா, அபுதாபி,புஜேரா,ராசல் கைமா, உம்முல் கொய்ன்  பெட்ரோல் பங்குகள், தொலை தூரம் , ஹைவே சென்றாலும் அங்காங்கே உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தொழுகை வசதி உள்ளது. அங்காங்கே மஸ்ஜீத் களும் இருக்கின்றன.

இங்கு பல நாட்டு பெண்கள் அதாவது நம் நாட்டு பெண்கள், அரபி பெண்கள், ஈரானி, சூடானி , கேரளா, பங்களாதேஷி, பாக்கிஸ்தான் எல்லோரும் தொழ வருவார்கள்.
நிறைய பெண்கள் நம்மஊரில் எல்லோரோடும் இருந்து விட்டு இங்கு வந்து தனிமையாகிவிடுகிறார்கள்இப்படி பள்ளிவாசல்களில் பெண்களுடன் தொழ போகும் போது பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவர்களுடன் நட்பு வைத்துகொள்வதன் மூலம் அந்த தனிமையையும் போக்கிவிடலாம். ஏன் சில நேரம் நமக்கு தெரிந்தவர்களும் கூட சந்திக்க நேரிடலாம்.

எப்போதும் நாங்கள் தொலை தூரம் போவதாக இருந்தால்  ஜும்மாவை (  வெள்ளி மதிய தொழுகையை தான் ஜும்மா தொழுகை என்பதாகும்) தொழுகையை முடித்து விட்டு தான் கிளம்புவோம். ஜும்மாவை  வைத்து கொண்டு வெளியில் கிளம்ப எங்க ஹஸுக்கு பிடிக்காது. ஒன்று தொழுதுட்டு கிளம்பனும் , இல்லை அதிகாலை பஜர் தொழுதுட்டு கிளம்பி போய் ஜும்மாவிற்கு முன் போய் சேர்ந்து விடுவோம்.அப்படி ஜும்மா விற்கு முன் போக முடியவில்லை என்றால்  வழியில் இருக்கும் பள்ளிவாசல்களில் நிறுத்தி தொழுது கொள்வது போல் நேரத்தை வகுத்துகொள்வோம்.
வெள்ளிக்கிழமை தொழும் ஜும்மா தொழுகையை எல்லா ஆண்களும் கண்டிப்பாக பள்ளி வாசலில் தான் தொழ வேண்டும்,இப்போது பெண்களும் பள்ளிவாசலில் சென்று தொழுகிறார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பயணம் மேற்கொள்ளும் போது மட்டும் சிறப்பு சலுகையாக கிளம்பும் முன் அதை சுருக்கி தொழுது விட்டு கிளம்பிக்கொள்ளலாம்.


ஒரு முறை நாங்கள் ருவைஸ் போகும் போது 5 மணி நேர பயணம் வெள்ளிக்கிழமை வழியில் ஜும்மாவுக்கு ஒரு காடு மாதிரி இடம ஆனால் தொழுகைக்காக பள்ளிவாசல் இருந்தது, 
அங்கு சென்று பள்ளிவாசலின் பின் புறம் உள்ள பெண்களுக்கான தொழுகை இடத்தில் தொழுதுட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம்.
அங்கு பல நாட்டு பெண்கள் தொலை தூரம் போகிறவர்கள் தொழுகைக்காக அங்கு வந்து தொழுத்துட்டு சொல்கின்றனர்.
அதே அடுத்து மஸ்கட் போகும் போது 5 லிருந்து 6 மணி நேர பயணம் , அங்கும் வழியில் தொழும் நேரம் செக்கிங் இட்த்தில் வண்டி நின்றது. அங்கு மக்ரீப் தொழுகை தொழுதுட்டு சென்றோம்.இங்குள்ள பள்ளி வாசலில் மட்டும் என்றில்லை உள்ள எல்லா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்,ஹாஸ்பிட்டல்கள், எல்லா இடத்திலும் பெண்களுக்கு தனியாக தொழும் இடம் உண்டு.இங்கு துபாயில் ஷாப்பிங்க் காம்பள்ஸ்களில் ,கேரிபோர், கே.எம் ட்ரேடிங் ரீஃப் மால், அன்சார் மால் எல்லா இடத்தில் பெண்கள் குழந்தையுடன் சென்று தொழுது விட்டு ரெஸ்டும் எடுத்துக்கொள்ளலாம்.

ஊருக்கு செல்ல
 ஏர்போர்ட் சென்றாலும் அங்கும் பெண்களுக்கென்று தனியாக தொழுகை இடம் உண்டு.
குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அங்கு தொழுது விட்டு ப்ளைட் கிளம்பும் வரை  நிம்மதியாக சிறிது நேரம் ஒய்வெடுக்கலாம்.சமீபத்தில் சென்னை ஏர்போட்டிலும் பள்ளிவாசல் கட்டி இருக்கிறார்கள்
நான் ஆபிஸ்சென்று வீட்டுக்கு செல்லும் நேரம் பாங்கு கொடுத்தால், தொழுகை நேரம் வந்து விட்டால் அந்த நேர தொழுகையில் வழியில் இருக்கும் பள்ளிவாசலிலேயே தொழுது விட்டு செல்வேன்.அப்படி பள்ளிவாசல் சென்று தொழும் போது அவ்வளவு நல்ல இருக்கும். நிம்மதியாக எந்த வேலை டென்ஷனும் இல்லாமலும் தொந்தரவுகளும் இல்லாமல் தொழலாம், அந்த நேரம் மனம் மிக அமைதியாக இருக்கும் 

இதனால் ஐ வேளை தொழுகைகளை அந்த அந்த வக்துகளிலிலேயே (நேரங்களிலேயே) முடித்து கொள்ளலாம்.களாவாகும் வாய்ப்பில்லை. களா என்றால் விடுப்பட்ட காலையில் இருந்து விடுபட்ட தொழுகைகளை இரவு தொழுகையுடன் சேர்த்து தொழுவது. .
. 
தொழுகையின் முக்கியத்துவம்
அறிவிப்பாளர் : அபூஹுரைரா  (ரலி)
உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால்,அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி   அவர்கள் தம் தோழர்களிடம்வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது என்றார்கள். இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும் ! அல்லாஹ்  இத்தொழுகைகளின்மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான் என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்
ஆக்கம் 
ஜலீலாகமால்
துபாய்.

டிஸ்கி :- நன்றி ஜலீலா. நான் ஆண்கள் மட்டும்தான் தொழுவார்கள் என்று எண்ணியிருந்தேன். காலையில் அக்கம் பக்க மசூதிகளில் இருந்து ஐந்து மணிக்கு தொழுகைச் சத்தம் கேட்கும். அதேபோல் மதியம் 12 45 மணிக்கும் மாலை 4 45 க்கும் இரவு 7 30 க்கும் கேட்கும். துபாய்க்கு தம்பி வீட்டுக்குச் சென்றிருந்தபோது இந்த நடைமுறையைப் பார்த்து வியப்பாய் இருந்தது. தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும் தொழும் முறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளது அருமை. மேலும் சில மாதங்கள் முன்பு பிதார் கோட்டைக்குச் சென்றிருந்த போது அதனுள்ளே அமைக்கப்பட்ட மசூதியில் அங்கே மாலை வேளையில் சிலர் கைகால் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். பெண்களைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் சம உரிமை கொடுத்து தொழுகை வசதி செய்து இறையருளைப் பெற அரபு நாடுகளில் வசதியும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி ஜலீலா அருமையான பகிர்வுக்கு.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.

32 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பெண்கள் தொழுகை பற்றி மிகச்சிறப்பாக பேட்டி அளித்துள்ள திருமதி ஜலீலா கமல் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல் வாழ்த்துகள்.

திருமதி தேனம்மை அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

அன்புடன் வீ .... ஜீ

[ தற்சமயம் துபாயிலிருந்து :) ]

sangeethas creations சொன்னது…

தொழுகை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் ... இன்றுதான் தொழுகையை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் ..நன்றி

Angelin சொன்னது…

வாவ் !!அருமையான பேட்டி ...வாழ்த்துக்கள் ஜலீ அருமையான தொழுகை பற்றிய விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றி ஜலீ ..
தேனக்காவுக்கும் நன்றி எங்க ஜலீயை பேட்டி கண்டு அறியாத விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு

priyasaki சொன்னது…

எங்க அன்பு ஆரம்பகால நண்பி ஜலீலாக்காவின் பேட்டி. பெண்கள் தொழுகை பற்றி அழகாக ஜலீலாக்கா சொல்லியிருக்கிறாங்க. தொழுகை பற்றி எனக்கும் தெரியாது.தெரியாத விடயங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஜலீலாக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
இப்பேட்டியினை தந்த தேனக்காவுக்கு மிக்க நன்றிகள்.

கீத மஞ்சரி சொன்னது…

பெண்கள் தொழுவது தொடர்பான பல புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி ஜலீலா. இப்படியொரு வித்தியாசமான கேள்வியின் மூலம் அறிந்துகொள்ளச் செய்த தேனம்மைக்கு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விரிவான தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Asiya Omar சொன்னது…

மிக அருமையான பகிர்வு ஜலீலா. நல்வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

ஜலீலாக்கா, நல்ல விளக்கங்கள்.

இந்தியாவிலும் இப்போதெல்லாம் புதிதாகக் கட்டப்படும் சில பள்ளிவாசல்களில் பெண்கள் தொழ இடம் ஒதுக்குகிறார்கள்.

Menaga sathia சொன்னது…

விரிவான தகவல்களுடன் அழகான பகிர்வு,நன்றி ஜலிலாக்கா !!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும் தொழும் முறைகள் பற்றியும்
விளக்கம் கொடுத்துள்ளது அருமை

கோமதி அரசு சொன்னது…

தொழுகையைப்பற்றி மிக அருமையாக சொல்லி விட்டீர்கள் ஜலீலா.
வாழ்த்துக்கள் ஜலீலா.

கோமதி அரசு சொன்னது…

அருமையான கேள்வியை கேட்டு அருமையான பதிலை வாங்கி தந்த தேனம்மைக்கு வாழ்த்துக்கள்.

உம்ம் ஒமர் சொன்னது…

maa shaa allaah jaleelaakkaa..... arumaiyaana pathivu. migavum vilakkamaaga eluthi irukkeenga. naanum bangalore il mattum thaan penkal tholuvatharkaaga masjid il idam undu endru muthan muthalil arinthen. athan pin therinthathu, nam tamizh naatilum pala pallivaasalkalil ithu pondru irukkuthendru. maa shaa allaah. veli naatilum ithu miga ubayogamaagave irunthathu. unque aana ippadi oru postai pagiravum, athaip patri palarukkum theriyapaduthavum vaaypu thanthu utaviya thenammai sagotharikkum miguntha nandrikal pala. :)

Jaleela Kamal சொன்னது…

கோபு சார் முதலாவதாக கருத்து தெரிவித்துபாராட்டியமைக்கு மிக்க நன்றி. இப்ப துபாயில் தான் இருக்கிறீர்களா?

Jaleela Kamal சொன்னது…

சங்கீதா தொழுகை பற்றி நான் எழுதியதை நேரம் ஒதுக்கி படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal சொன்னது…

தொழுகை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டது மிகுந்த சந்தோஷம்

Jaleela Kamal சொன்னது…

அஞ்சு கண்ணா வாங்க என் பதிவுகளை தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி. கண்ணா

Jaleela Kamal சொன்னது…

பிரியசகி , என்னப்பா ஆரம்ப கால நண்பி அப்ப இப்ப கிடையாதா? ஹிஹி , இங்கு வருகை தந்து கருத்து தெரிவித்து , தொழுகை பற்றியும் அறிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal சொன்னது…

ஆமாம் கீத மஞ்சரி , தேனக்கா இதை பற்றி என்னிடம் கேட்ட போதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏதோ எனக்கு தெரிந்தவற்றை, என் சொந்த அனுபவத்தை வைத்து தொகுத்து கொடுத்தேன். பொறுமையாக இந்த பதிவை படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal சொன்னது…

வெங்கட் ராஜ் , பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal சொன்னது…

வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆசியா..

Jaleela Kamal சொன்னது…

ஆமாம் ஹுஸைன்னாம்மா , இந்தியாவிலும் சில இடங்களில் பெண்கள் தொழுகைக்கு .பள்ளி வாசல்களில் பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கு கிறார்கள் என்று நானும் கேள்வி பட்டேன், என் பையன் சொன்னான்.

Jaleela Kamal சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி மேனகா.

Jaleela Kamal சொன்னது…

தொழுகையி ன் முக்கியத்துவத்தை படித்து, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

Jaleela Kamal சொன்னது…

மிக்க நன்றி கோமதி அக்கா

Jaleela Kamal சொன்னது…

வாங்க அன்னு , எனக்கு தெரிந்த சில விளக்கங்கள் தான் கொடுத்தேன், ஆமாம் இதுபலருக்கு தெரியவந்து குறித்து எனக்கு மிகவும் சந்தோஷம், இதை இங்கு பகிர்ந்த அன்பு தேனக்காவுக்கு என் மணமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும், .

Jaleela Kamal சொன்னது…

நான் எதிர் பார்க்கவே இல்லை தேனக்கா, அந்த மழைச்சாரலில் நான் மாலைகடைக்கிட்ட தீடீர் சந்திப்பு, அன்று உங்களுக்கு கல்யாண நாள் தானே.. யாரு நீங்க சுளுக்கும் அளவுக்கு சிரிச்சீங்களா, நம்ம இரண்டு பேருக்கும் ஆச்சிரியத்துல் பல் 32 , 64 ஆனதே... ஹிஹி

Jaleela Kamal சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார். துபாயிலா. அங்கே பிள்ளைகள் இருக்காங்களா.

நன்றி சங்கீதா

நன்றி ஏஞ்சலின்

நன்றி ப்ரியசகி அம்மு

நன்றி கீதமஞ்சரி

நன்றி வெங்கட் நாகராஜ்

நன்றி ஆசியா

நன்றி ஹுசைனம்மா அப்படியா. எனக்கு இந்தத் தகவல் புதுசு.

நன்றி மேனகா

நன்றி ராஜி

நன்றி கோமதிமேம்

நன்றி உம்ம் ஓமர்..:)

ஜலீலா அசத்திட்டீங்க போங்க. என்னோட வலைப்பதிவர் கேப்ஷனை தகுந்த சமயத்தில் போட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தீட்டீங்க !!!!!! உங்க வேலைகளுக்கு நடுவிலும் விரிவான தகவல்களைத் தந்தமைக்கும் ஒவ்வொருவருக்கும் அழகா பின்னூட்டத்தில் பதில் நன்றி கூறியமைக்கும் நன்றிப்பா :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ஸாதிகா சொன்னது…

ஜலி இப்போதான் பார்க்கிறேன் ,தேனு ஒரு அருமையான டாபிக்கை கொடுத்து இருக்கீங்க.அதற்கு மிக அருமையானதோர் விளக்கத்தை அளித்திருக்கின்றிர்கள் ஜலி..இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸாதிகா. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திட்டீங்க :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...