எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 டிசம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், மூன்றுதாய்க்கு ஒரு மகன் முத்துராமலிங்கம் சுப்ரமணியன்

சிலுவைகளை நீ சுமந்து
மாலைகள்
எமக்குச் சூட்டினாய்.
சிறகடிக்கும்
பறவைக்கெல்லாம்
வானத்தைப் போல மாறினாய். !.
விழியோடு நீ
குடையாவதால்
விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமாலை. !

Love You Amma. !

என் முகநூல் சகோதரர் & நண்பர் முத்துராமலிங்கம் சுப்ரமணியத்தின் முகநூல் பகிர்வு இது. குழந்தையைப் போன்ற அழகான புன்னகைக்குச் சொந்தக்காரர்.  அமெரிக்க மண்ணில் கோலோச்சி வரும் அவருக்குத் தற்போதுதான் திருமணமாகி இருக்கிறது.தலை தீபாவளிக்கு மனைவி கையால் சாப்பிட்ட உணவுகளைப் பட்டியலிட்டிருந்தார். காதெல்லாம் புகை வந்தது நமக்கு. :) அப்புறம் இன்னொரு நாள் சமைத்த உணவுகள் புகைப்படம் ( அவரே செய்தாரா தெரியல >> :)  ) போட்டிருந்தார். பார்த்துப் பலர் மிரட்சியடைந்ததாகக் கேள்வி. ! :) அப்போது அதை எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லி நாங்க தேற்றினோம். :) ( ஹிஹி சிண்டு முடிய பலமா முஸ்தீபு செய்றேன் >:) அங்கே அவரது அம்மா டாலி பாலாவும் கமெண்ட் போட்டு தேற்றி இருந்தார்கள். ! :)

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. டாலி பாலா முகநூல் மூலம் அறிமுகமாகியவர். அடக் கடவுளே நான் உண்மையிலேயே அவரோட அம்மான்னுல்ல நினைச்சிருந்தேன். !. எல்லா ஃபோட்டோவிலும் கமெண்டுகளிலும் பார்த்தால் இவர்தான் அவங்க பிள்ளைன்னு சத்தியம் அடிச்சி சொல்லலாம். அப்பிடி ஒரு முக ஒற்றுமை. !!!!!!!!


இந்த இடுகைக்காகக் கேட்டபோதுதான் தம்பி அனுப்பிய பதில்களில்தான் அவருக்கு 3 அம்மா என்றும் டாலிம்மா, கல்யாணி சித்திம்மா & சொந்த அம்மா சந்திரிகா சுப்ரமணியம் என்றும் தெரியும். பதிலைப் படிக்க ஆரம்பிக்கும்போதே என்னடா டாலிம்மாவுக்கு சந்திரிகான்னு பேரான்னு குழப்பத்தோட படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம்தான் உண்மை புரிந்தது. என் முகத்தில் ஆயிரம் டன் அசடு..முகநூலில் டாலி பாலாவின் பேர் மட்டும்தானே இருக்கு  முத்துராமலிங்கம் சுப்ரமணியன்  என்பதில் உள்ள சுப்ரமண்யம் என்ற பேர் மிஸ்ஸிங்கா இருக்கே, இதை நாம ஒரு நாள் கூட நோட்டீஸ் பண்ணலையேன்னு என்று ஞானம் உதயம் ஆச்சு. எல்லாருமே என்னைப் போல டாலி பாலாதான் உண்மை அம்மான்னு நினைச்சிருந்தா அவங்களும் அம்மாவின் இடத்தைப் பிடிச்சவங்கதான்னு புரிஞ்சிக்கிட்டு  இதப் படிங்க.

தம்பியிடம் நான் கேட்ட கேள்வி இரண்டு. இரண்டையும் மிக்ஸ் பண்ணித் தர்றேன்னவர் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அனுப்பி இருக்கார்.

கேள்வி இதுதான்

தம்பி முத்து நான் கேட்கும் இந்தக் தலைப்புக்கு  ” அம்மா என்றால் அன்பு “ அல்லது இந்தத் தலைப்பு “ பெண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் “  பதில் அனுப்புங்க..

ரெண்டுக்குமே பதில் அனுப்புறேன் கம்பைண்டா..


அம்மா(க்கள்)  என்றால் அன்பு

அம்மான்னாலே அன்பு தான். வெறும் அன்பு இல்லை நிபந்தனையற்ற அன்பு. அதாவது  தன பிள்ளை தப்பு செய்தாலுமே என்ன இருந்தாலும் என் பிள்ளைன்னு மாறா அன்போடு இருக்கும் அம்மா. என்னோட அம்மா சந்திரிகா சுப்ரமணியன். எனக்கு ஒரு அண்ணன். அண்ணனும் நானும் பிறக்கும் வரை அம்மா,பெரியம்மா,மாமா,சித்தி எல்லாருமே ஆல் இந்திய ரேடியோல நிறைய நாடகங்கள்,கட்டுரைகள்ன்னு எழுதி இருக்காங்க. ஒருதடவை பீரோவில் எதையோ தேடும் போது ஒரு பெரிய டப்பாவில் நிறைய கடிதங்கள். பொறுமையா எடுத்து படிக்கும் போது தான் தெரிந்தது அம்மாவிற்கு அந்தக்காலத்தில் எவ்வளவு ரசிகர்கள்னு. பிள்ளைகள் பிறந்ததும் தன் ஆசை கனவு எல்லாத்தையும் விட்டுட்டு தன் பிள்ளைகளே உலகம்ன்னு வாழ்ந்த மனுஷி.


அன்று அம்மாவோட உலகம் ரொம்ப சின்னது நான்,அண்ணா,அப்பா மட்டுமே. இப்போ நான்,என் மனைவி, அண்ணா,அண்ணி,மற்றும் அண்ணனின் மகன் மனீஷ்.

அம்மாவுக்கும் எங்களுக்குமான அன்பான காலகட்டத்தை இரண்டு வகையாய் பிரிக்கலாம் . ஒன்று எங்க அப்பா இருக்கும் போது மற்றொன்று அப்பா மறைந்த பிறகு. அப்பா இருந்தவரை அம்மாவிற்கு எல்லா வகையிலும் உதவுவார். காய்கறி நறுக்குவதில் இருந்து,சமையல் செய்வது வரை. எனக்கு தெரிந்தவரை அப்பா டி போட்டு பேசியதில்லை. இதெல்லாம் தான் இப்போ என்னை அறியாமலே நான் கடைபிடிக்கிறேன். அப்பாவின் திடீர் மறைவு அம்மாவை நிலைகுலைய வைத்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் தனக்கு எல்லாமுமாய் இருந்த கணவன் இல்லைன்னு தெரிந்ததும் ரொம்ப ஒடிஞ்சு போய்ட்டாங்க. அன்னிக்கு தான் அம்மா எனக்கு மகளாய் ஆனாங்க. ஆமாம். ஒரு வயசுக்கு அப்புறம் எந்த அம்மாவும் பிள்ளைக்கு மகள் தான். அம்மாவிடம் நாங்க பழகும் முறையில் சில மாற்றம் ஆரம்பித்தது. அதாவது பரிதாபமாக பேசுவதால் அம்மாவின் மனம் பலவீனமானதை உணர்ந்தோம். அதனால் அம்மா எவ்வளவு தான் சோகமா ஆனாலும் நாங்க வெளிக்காமிக்காமல் இருக்க ஆரம்பித்தோம்.வெளி உலகம் தெரியாமல் இருந்து வீட்டில் முடங்கியதால் அம்மா உடலளவில் பலவீனமாங்க. அதுக்காகவே நானும் அண்ணாவும் அம்மாவை வெளியே போற மாதிரி சூழ்நிலைகளை உண்டு பண்ணினோம். கொஞ்சம் கொஞ்சமா எதார்த்த உலகிற்கு திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் பேரப்பிள்ளை வந்ததும் தான் அம்மாவின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது. இப்போ அம்மாவின் உலகத்தில் தன் பேரப்பிள்ளை தான் முழுவதுமாக இருக்கிறான்.


எனக்கு என் அம்மாவை ப்ளைட்டில் கூட்டிட்டு போகணும்,, நான் பார்த்த இடங்களை அம்மாவும் பார்க்கனும்ன்னு ஆசை கனவு. அதுக்காக அம்மாவை அமெரிக்க வரவழைத்தது அங்கு என் காரில் அம்மாவை கூட்டிட்டு போனது, நான்கு ஆண்டுகள் கழித்து அம்மாவை நேரில் பார்த்ததுன்னு ஏகப்பட்ட செண்டிமெண்ட் இருந்தும் தனியே அழுதிருக்கிறேன் ஆனால் அம்மாகிட்ட எதையுமே வெளிக்காட்டியதில்லை.அம்மா அப்படின்னா எப்பவுமே செண்டிமெண்ட்டா பரிதாபமா இருக்கணும்ன்னு அவசியமில்லை. அது தான் அம்மாக்களை பலவீனமாக்குகிறது. பக்கத்தில் இருக்கும் கடைக்கு நான் போக மாட்டேன். அம்மாவே போவாங்க. காரணம் அவுங்க வெளியே போகும் போது தான் கவனம் மாறும். சப்பாத்தி செய்யும் போதெல்லாம் அம்மா தான் மாவு ரெடி பண்ணுவாங்க. காரணம் சப்பாத்தி மாவு ரெடி பண்ணுவது அம்மா கை வலிக்கு எக்சர்சைஸ். கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை நம்பி வந்த உன் பொண்டாட்டிதான் முதல்ல  அப்புறம் தான் நான் உனக்குன்னு சொன்னாலும் அம்மா வேற பொண்டாட்டி வேற. ரெண்டு பேரையும் கம்பேர் செய்வதில்லை. அம்மா தூங்கும் போது ராத்திரி எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் நான் ஒழுங்கா சாப்ட்டேனா இல்லையான்னு காலைல அம்மா கண்டுபிடிச்சிடுவாங்க. அது தான் அம்மா... என் அப்பா மாதிரி எங்களால் அம்மாவை பார்க்க முடியாவிட்டாலும் அதில் சிறிதளவேனும் அக்கறையோடு பார்த்துக்கணும்ன்னு ஆசை கனவு. தனிச்சையா இருக்கணும். அப்பப்போ எங்க போகணும்ன்னு ஆசைப்படுறாங்களோ அங்கெல்லாம் போகணும். அவுங்க சுதந்திரமா இருக்கனும்ன்னு ஆசை.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயமும் பகிர்ந்துக்க ஆசைப்படுறேன். பேஸ்புக்கில் என் அம்மாவைப் போல நான் மதிக்கும் டாலி அம்மா, மற்றும் கல்யாணிம்மா. பெற்ற அம்மாவைப் பிரிந்து வெளிநாட்டில் இருந்த போது தன் மூத்த பிள்ளையாய் என்னை பாவித்த டாலிம்மா... சின்ன வயதில் என் அம்மாவை போல இருக்கும் என் கல்யாணிம்மா.இவர்கள் தான் என்னை பெறாமல் பெற்ற மகனாய் என்னை பாதுகாத்தார்கள். அவுங்க கையால் நான் சாப்பிட்டு இருக்கேன். செண்டிமெண்ட் எல்லாம் இல்லை.நாம கஷ்டபட்டப்போ கூட இருந்தவர்களை, அவர்களின் நன்றியை மறக்க கூடாது. அதுவும் அம்மா போல இருந்து பிள்ளையாய் பாவித்தவர்களை மறக்கவே கூடாது.
 

 டிஸ்கி :- ஆமா பதில் பூரா கண்ணுல நல்ல பவர் க்ளாஸ் போட்டுடுத் தேடிட்டேன் எங்க தம்பி காணோம். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் அப்பிடிங்கிற தலைப்புக்கு பதில் . உலகத்துல எந்த பவர்ஃபுல் போஸ்ட்ல இருக்க யாரா இருந்தாலும் பாருங்களேன். இதுக்குப் பம்மிப் பதுங்கித்தானே ஆகணும். ஏன்னா வைஃப் பவர் அப்பிடி. அந்த பயம் இருக்கட்டும். ஹாஹா . :) 

ஆனா மூன்று அம்மாக்களைப் பத்திச் சொல்லி நெகிழ வைச்சிட்டீங்க. அம்மாவை மகளாய் நடத்துவது பார்த்து மனம் மலர்ந்தது. அதுவும் சந்திரிகா அவர்களோட மனத் திண்மையைப் பாராட்டுறேன். அவர்களோட திறமைகள் பத்திப் படிச்சும் ஆச்சர்யம்தான். 

///என் அப்பா மாதிரி எங்களால் அம்மாவை பார்க்க முடியாவிட்டாலும் அதில் சிறிதளவேனும் அக்கறையோடு பார்த்துக்கணும்ன்னு ஆசை கனவு. தனிச்சையா இருக்கணும். அப்பப்போ எங்க போகணும்ன்னு ஆசைப்படுறாங்களோ அங்கெல்லாம் போகணும். அவுங்க சுதந்திரமா இருக்கனும்ன்னு ஆசை./// அப்பா மாதிரி பார்த்துக்கணும்னு ஆசைப்படுறதே பெரிசுதான் முத்து.

டாலிம்மா பத்தி சொன்னதே சர்ப்ரைஸா இருந்ததுன்னா  கல்யாணி பத்தியும் சின்னம்மான்னு சொன்னது அதைவிட சர்ப்ரைஸ்.அதெப்பிடிப்பா மூன்று அம்மாக்களோட இருக்கும்போதும் அவங்கவங்க  சாயல்ல இருக்கே. !!!  மூன்று தாய்க்கு ஒரு மகனா சீரோடயும் சிறப்போடயும் செல்வங்களும் செல்லங்களும் பெற்று வாழ்க வளமுடன் முத்து தம்பி :)அழகான பதில் அனுப்பியமைக்கு நன்றி முத்து. :)


5 கருத்துகள்:

  1. ஆஹா.அருமையான பையனை அறிமுகம் செய்திருக்கீங்க. நலமோடு வாழ்ட்டும் தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி புதுகைத் தென்றல்

    ஆசிக்கு நன்றி வல்லிம்மா :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  4. . //அம்மாவை மகளாய் நடத்துவது பார்த்து மனம் மலர்ந்தது. // நெகிழ வைக்கும் பதிவு/

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...