எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கௌதமி வேம்புநாதன். ப்ளாக் கரெண்டும், சிவப்பு நெருப்பும்



சாட்டர்டே ஜாலி கார்னர். கௌதமி வேம்புநாதன். ப்ளாக் கரெண்டும், சிவப்பு நெருப்பும்,

ராஜிக்கா சென்னை வந்தபோது என் வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வருவதாகக் கூறி ஃபோன் செய்தார். மதியம் வெய்யிலில் ஒரு பைக்கில் கணவருடன் ஜில் ஜிலென்று வந்திறங்கிய அந்த ஸ்பெஷல் கெஸ்ட் கௌதமி வேம்புநாதன்.  நிஜமாகவே அவர் ஸ்பெஷல்தான். முதல் பார்வையிலேயே ரொம்ப சிநேகபாவத்துடன் கைகோர்த்துப் புன்னகைத்து மனதுக்கு நெருக்கமாகிவிட்டார்.

வந்தவுடன் நான் பேச்சு வாக்கில் சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் கொடுக்கணும்னு பையன்கிட்ட வாங்க சொன்னேன் அவன் வர லேட்டாகும் போலே இருக்குன்னு சொன்னேன். உடனே தன் கணவரை ஒரே ஒரு பார்வைதான் பார்த்தார்.அவர்  உடன் கிளம்பி கேகே நகரில் இருக்கும் ”க்ரீமி இன்”னில் ஒரு பெரிய பாக் ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம் வாங்கி வந்துவிட்டார். இனிக்க இனிக்க வெய்யிலில் ஜில் ஜில்லென்று அனைவரும் இரண்டுமுறை ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம்.


முகநூலில் நட்பு அழைப்புக் கொடுத்துத் தோழியான அவர் என்னுடைய எழுத்துக்களுக்கு விருப்பக்குறியிட்டு உற்சாகப்படுத்தியவர். தான் பெரிய நடிகை என்ற பந்தாவெல்லாம் இல்லாதவர். இயல்பான அன்போடு ஒவ்வொருமுறை அழைக்கும்போதும் தோழியைப் போலப் பேசிக் குதுகலிப்பார். இவரது சிரிப்பு எனக்குப்பிடித்த ஒன்று.

நேரில் இவ்வளவு தன்மையுடன் அன்பானவராக இருக்கும் இவர் எப்படி சீரியல்களில் வில்லிரோல் செய்யமுடிகிறது என்று எனக்கு ஏக வியப்பு. அதையே அவரிடம் கேட்டேன்.

/// நிஜத்தில் தன்மையாக இருக்கும் நீங்கள் எப்படி சீரியல்களில் வில்லி ரோல் செய்கிறீர்கள். நீங்கள் செய்துகொண்டிருக்கும் வில்லி ரோலில் இன்னும் பேசப்படுவது எது ?///

இதுவரை நான் திருமதி செல்வம், தியாகம் , பொன்னூஞ்சல் ஆகியவற்றில் வில்லி ரோல் செய்துள்ளேன்.

திருமதி செல்வத்தில் கொடுமைக்கார மாமியார், அம்மா ரோல், பொன்னூஞ்சலில்தான் ரொம்ப செல்ஃபிஷ் வில்லி, ப்யூர் வில்லி ரோல்..

நெறைய பேர் திட்டி இருக்காங்க. எல்லாரும் என் பேரை விட்டுட்டு என் காரெக்டர் பேரை சொல்லித் திட்டுவாங்க. மீனாக்ஷி, சிவகாமி, பாக்யம் அப்பிடின்னு. நெறைய பேருக்கு என் பேரை விட என் கேரக்டர்கள் பேர்தான் ஞாபகத்துல இருக்கும். அத சொல்லித்தான் கூப்பிடுவாங்க.

திருமதி செல்வத்தின் பாக்யம் சூப்பர் வில்லி, ரொம்ப பேசப்பட்ட ரோல்னா பொன்னூஞ்சலில் மீனாக்ஷியா பண்ணதுதான். கல்பனாவோட அம்மாவா பண்ணது.

ஹீரோயின் வில்லின்னு எல்லாம் பேதம் பார்க்கிறதில்லை. எனக்கு ஒரு காரெக்டர் முடிவானவுடன் நான் அந்தக் காரெக்டராகவே மாறிவிடுகிறேன். அத சிறப்பா செய்யணும்னு மட்டும்தான் தோணுமே தவிர நாம் இதுல வில்லியாச்சேன்னு எல்லாம் நினைக்கிறதில்ல. கொடுக்கப்பட்டத சிறப்பா செய்யும்போதே தானாவே அது காரெக்டருக்கான பேரைப் பெற்றுக் கொடுத்துடுது.


--- சூப்பரா சொன்னீங்க போங்க. யப்பா நீங்க சிவப்பு நெருப்புத்தான். ஏன் ஹீரோயினை மட்டும்தான் SHE IS A FIRE ON THE SCREEN  ன்னு சொல்லணுமா. வில்லியையும் சொல்லலாமே.   நெற்றியில் விபூதியும் நடுவுல நெற்றிக் கண்ணுமா குங்குமத்தோட பார்த்தா அவ்ளோதான். தீப்பிடிச்சுடும். நெஜமாவே நேர்ல பார்க்கிறதுக்கும் சீரியல்ல பார்க்கிறதுக்கும் 100 சதவிகிதம் வித்யாசமாதான் இருக்கு.

சமீபத்துல கார்த்திக் ஃபைன் ஆர்ட்சோட 2014 கோடை நாடக விழாவில் நடத்தப்பட்ட 14 நாடகங்களில் (அரங்கன் அரங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கமணியின் “2BHK” என்ற பெயருள்ள ட்ராமாவுலயும் நடிச்சிருக்காங்க) இவங்களுக்கு 2 BHK யில் நடித்ததற்காக சிறந்த பெண் நாடகக்கலைஞர்னு ( BEST FEMALE ARTIST ) விருது வழங்கப்பட்டிருக்கு. இவருடன் இந்த நாடகத்தில் நடித்த டாக்டர் கிரி என்பவருக்கு சிறந்த ஆண் நாடகக் கலைஞர் ( BEST MALE ARTIST ) விருது வழங்கப்பட்டிருக்கு.. இரண்டு விருதுகளும் பெறக்காரணமா இருந்த தங்கள் நாடகக்குழுவுக்கும் தன்னுடைய கோ ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் நன்றி தெரிவிச்சிருக்காங்க. மேலும் நாரத கான சபாவில் விருது வழங்கப்பட்ட போது மேடையிலிருந்து மிகப் பணிவோடு ஒரு வணக்கத்தையும் ஆடியன்ஸுக்கு சமர்ப்பிச்சு இருக்காங்க. உங்க பணிவே உங்க உயர்வு கௌதமி. உங்க நட்பு கிடைத்தமைக்கும் பேட்டி கொடுத்தமைக்கும் நன்றிகள் . மேலும் விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் கௌதமி. இன்னும் நீங்க மென் மேலும் விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.


4 கருத்துகள்:

  1. சிறந்த கருத்துப் பகிர்வு

    எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு
  2. Thenuuuu what a surprise. Enna azhagana varigal , vaarthaigal. Santhoshama irukku. I shud say thanks for this to Mr. Sriram Singapore >>>> Mrs. Rajikka Singapore .

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஜீவலிங்கம் சார்

    நன்றி கௌதமி டியர். ஸ்ரீராமுக்கும், ராஜிக்காவும் என்னுடைய தாங்க்ஸும். ஏன்னா அவங்கதான் எனக்கு நீங்க தோழியாகக் கிடைக்க காரணமானவங்க. :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...