எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2012

பிரம்ம கபாலம்.:-

காறலோ கசப்போ
உணர்ந்து பார்க்க
ஒற்றைக் கோப்பையைத்
தேர்ந்தெடுக்கிறேன்.

புதைக்கப்பட்ட பீப்பாயில்
கசிந்து வழிந்ததை
மண்ணோடு ஊற்றிச்
செல்கிறான் ஒருவன்.


என்னைப் பயமுறுத்திய
ரத்தச் சிகப்பை
ருசிக்கத் துவங்குகிறேன்.

எனக்கு மட்டும்
அளவு குறைவாகவும்
அடர்த்தி குறைவாகவும்
இருப்பதாகச் சொன்னபோது
இரண்டு திராட்சைகளை வீசி
மசித்துக் கொள்ளச் சொல்கிறான்

பழக்கமற்றதால்
விதைகளையும் மசிக்க
கசந்து கண்ணைப்
பிடுங்கியது அது.

அளவுகூட்ட
ஒரு ஜாடித் தண்ணீரை
ஊற்றுகிறான்.

உன்மத்தம் பிடித்த
மிருகம் போல
உறிஞ்சத் துவங்கினேன்
உதிரக் கசப்பை.

செமிக்கும் திறனற்று
கல்லீரல்கள் கதறியது
கைவிரித்துத் தள்ளியது.

போதையின் உச்சத்தில்
பரிமாறியவனைத் தள்ளிவிட்டு
பீப்பாய்களை
உடைக்கத் துவங்கினேன்.

கசப்பும் புளிப்பும்
மூழ்கடித்தது
தப்ப வழியின்றி.

கழண்ட கல்லீரல்
குடலை வெளியேற்றியது
விஷப்பாம்புபோல
விஷம் கொட்டியபின்

மீண்டும் நிரப்பத்
துவங்கினேன்
 என் கோப்பையை
இன்னும் போதவில்லை
இன்னும் போதவில்லை என
பிரம்மகபாலமாய்.

5 கருத்துகள்:

  1. யப்பா... என்ன வீரியமான வரிகள். குடிக்க நினைக்கும் எவரும் படித்ததும் தயங்கவே செய்யும் வண்ணம் இருக்கின்றதே... பிரமிப்புடன் என் பாராட்டுக்கள்க்கா...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நன்றி நிர்மலா கணேஷ்

    நன்றி கணேஷ்

    நன்றி தனபால்

    நன்றி சாரல்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...