எனது நூல்கள்.

சனி, 14 ஜூலை, 2012

இளங்கோ பத்மாவின் “ங்கா” விமர்சனம்.

நேற்று தான் உங்கள் “ ங்கா”  புத்தகத்தை வாங்கினேன். உடன் வந்த பத்மா வாங்கியது ஆன்மீகம், வீட்டுக் குறிப்புகள் தொடர்பான 3 புத்தகங்கள்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக படிக்கத் தொடங்கினோம். என் கையில் ”ங்கா”.பத்மா கையில் ஆன்மீகம் தொடர்பான ஒன்று. நான் முதலில் முடித்தேன்.

முடித்தவுடன் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து விமர்சனம் எழுதலாம் என்று நினைத்த போது,பத்மாவின் குரல்...'ங்கா'வைத் தாங்க இங்க.’.எனக்கு ஒரே ஆச்சரியம்...எனக்குத் தெரிந்து பத்மா கையில் முதன்முதலாய் ஒரு கவிதைப் புத்தகம்.


ஆர்வத்துடன் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

1) நம்ம பய இப்பிடித் தாங்க...

2) அடடா...நம்ம பொண்ணு பண்ண சேட்டய பாத்த மாதிரியே எழுதியிருக்காங்களே...அவ டீச்சர் வெளயாட்டுல எத்தன ஸ்கேல ஒடச்சிருப்பா...

 3) நம்ம புள்ளைக பேசுறது எனக்கு மட்டும் தானே புரியும்...அதக் கூட எழுதியிருக்காங்க...

4) கேள்வியின் நாயகனென்னு புள்ளயப் பாத்து பாடுவீங்களே...அது கூட இருக்கு...

இப்படி ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து விமர்சனம் வந்து கொண்டே இருந்தது....

என் குறிப்புகளை ஓரம் வைத்து விட்டு, பத்மாவின் வார்த்தைகளை மட்டும் பதிய முடிவு செய்தேன்... ஒரு அம்மாவின் இதயத்தை, இன்னொரு அம்மாவால் மட்டும் தான் முழுமையாக உணர முடியும் என்பதை உணர்ந்து..

 டிஸ்கி:- இன்று என் பிறந்த நாள். முகநூல் நண்பர்களான இளங்கோவும் பத்மாவும் என்னுடைய நூலுக்களித்த விமர்சனத்தையே விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசாகக் கருதுகிறேன். நன்றி இளங்கோ மற்றும் பத்மா.. நன்றியினால் நெகிழ்ந்திருக்கிறேன். வாழ்க வளமுடன்.

7 கருத்துகள் :

S.A. நவாஸுதீன் சொன்னது…

Pirantha naal nal vaazhthukkal. Innum padikkal. Inge (Pattukkottai) la kidaikkuthaannu paarkkiren

rishvan சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

/என் குறிப்புகளை ஓரம் வைத்து விட்டு, பத்மாவின் வார்த்தைகளை மட்டும் பதிய முடிவு செய்தேன்... ஒரு அம்மாவின் இதயத்தை, இன்னொரு அம்மாவால் மட்டும் தான் முழுமையாக உணர முடியும் என்பதை உணர்ந்து../

சரியாகச் சொல்லி அழகான பரிசை வழங்கி விட்டார்.

பாராட்டுகள் தேனம்மை.

ஸ்ரீராம். சொன்னது…

பிறந்த நாளுக்குச் சிறந்த பரிசுதான். இதுவும் 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்' போலத்தானே...
உங்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கோமதி அரசு சொன்னது…

தேனம்மை, உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

அழகான , அருமையான பரிசு.
எழுதுபவர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.

வாழ்த்துக்கள் தேனம்மை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நவாஸ்

நன்றி ரிஷ்வன்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ஸ்ரீராம்

நன்றி கோமதி அரசு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...