எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 ஜூலை, 2012

ஆட்டோ கொள்ளையா., கொடையா. ..?

ஆட்டோ வருமான்னு கேட்டா சென்னை ஆட்டோக்காரங்க எங்க போகணுகம்னு கேப்பாங்க. நாம இடத்தை சொன்னதும் தலையை இடம் வலமா அசைச்சிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஏன்னா அவங்க போற இடத்துக்குத்தான் நாம போகணும். நாம் போக வேண்டிய இடத்துக்கு அவங்க வரமாட்டாங்க.


முன்ன எல்லாம் ஆட்டோவுல ஏறினா அது சூடு வைச்ச மாதிரி ஓடும். பில்லி சூன்யம் வைச்ச மாதிரி சூடு வைச்ச ஆட்டோ மீட்டர் ஓடாம இருக்கணுமேன்னு வேண்டிக்கிட்டுத்தான் ஏறி உக்காரணும். இப்போவெல்லாம் மீட்டர் இருக்கு ஆனா அதை போடுறது இல்ல. பக்கத்து தெருவுக்கு போகணும்னா கூட மினிமம் 40 ரூபாய். மத்த இடத்துக்கெல்லாம் ஆட்டோக்காரர் நிர்ணயிக்கிற வாடகைதான்.

எங்க வீட்டுலேருந்து வட பழனி கோயில் போறதுன்னா முன்ன எல்லாம் 50 ரூபாய். அதுபோல அசோக் பில்லருக்கு போறதுன்னாலும். இப்போவெல்லாம் அதை 70 ரூபாயா ஆக்கிட்டாங்க. இதுல என்ன கொடுமைன்னா 70 ரூபாய் கேப்பாங்கன்னு போனா 80, 90 ரூபாய் கேக்குறாங்க. இவங்க கொள்ளைக்கு எல்லாம் ஒரு அளவே கிடையாது. வாய்க்கு வந்த தொகையை கேக்குறது. இந்த தொகையை நிர்ணயிக்க எல்லாம் ஒரு வரைமுறை , அளவு கிடையாது. கேட்டா பெட்ரோல், அல்லது டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டுறாங்க.

டி நகருக்கு போக 70 ரூபாய் இருந்துச்சு, ஆனால் அங்கே மாம்பலம் ஸ்டேஷன்ல காலை ட்ரெய்ன் வந்தவுடன் ஆட்டோ பிடிச்சா இரண்டு மடங்கு வசூலிப்பாங்க. 150 ரூபாய்.. அதே தூரம் அதிகாலையில அதிகமாயிரும் போல. நமக்காக விழிச்சிருந்து அவங்க ஆட்டோவோட காத்துகிட்டு இருக்கதால இந்தத் தொகை.அந்த சமயம் பஸ்ஸோ, ஷேர் ஆட்டோவோ கிடைக்காது. வேற வழியில்லாம பேரம் பேசியும் தண்டம் அழ வேண்டிய கட்டாயம். இதுக்கு ஏசி கால் டாக்ஸியே புக் பண்ணி போயிடலாம்.

எக்மோரிலேருந்து ப்ரீபெயிட் ஆட்டோ புக் பண்ணா புக் பண்ண 3 ரூபாய் மற்றும் 183 /- ரூபாய்தான் எங்க வீட்டுக்கு வரும். ஆனா மத்த ஆட்டோவுல வந்தா 250 ரூபாய் அல்லது 300 ரூபாய் கேப்பாங்க. ஒரு முறை என் வீட்டில் இருந்து மதுர வாயிலில் இருக்கும் நடிகை ஊர்வசி வீட்டுக்குப் போக 250 ரூபாய் கேட்டார். ரொம்ப பக்கத்துல இருந்த இடம் அது. இந்த மாதிரி அநியாயத்தொகை வசூலிப்பதைத் தடுத்து ஆட்டோவுக்கான தொகைகளை சங்கங்கள் நிர்ணயிக்காமல் உரிமம் வழங்கும்போதே அரசு நிர்ணயிக்க வேண்டும். இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகை வசூலிப்பவர்களுக்கு உரிமத்தை ரத்து செய்யணும்.

அவசரம் சமயத்துக்கு ஆட்டோவில் போக பொதுஜனம் யோசிக்கும் நிலை மாறும். பிரசவத்துக்கு இலவசம் என்று போட்டிருப்பாங்க சில ஆட்டோக்களில் ஆனால் அந்த ஆட்டோ குலுக்குற குலுக்கலில் ஆஸ்பத்ரிக்குப் போகாம ஆட்டோவுலேயே இலவசமா பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டு.

எல்லா ஆட்டோக்காரங்களையும் நான் குறை சொல்லலை. சில நல்ல ஆட்டோக்காரங்களும் இருக்காங்க. புஷ்பக விமானம் மாதிரி அருமையா ஓட்டுற ஆட்டோக்காரங்க. மனிதாபிமானத்தோட மனித நேயத்தோட இருக்குற ஆட்டோக்காரங்க சிலர்தான். சமீபத்துல வடபழனி முருகன் கோயில்லேருந்து வீட்டுக்கு வர ஒரு ஆட்டோக்காரர் 50 ரூபாய் கேட்டார். மெய்யா பொய்யான்னு என் மெய்யைக் கிள்ளிப் பார்த்துகிட்டேன். வீட்டுக்கு வர வரைக்கும் ஆட்டோவுல வர்றமா அல்லது புஷ்பக விமானத்துல பறந்து வர்றமான்னு தெரியலை. அவ்வளவு ஸ்மூத்தா ஓட்டிக்கிட்டு வந்தார். மன நிறைவோடு இன்னும் பத்து ரூபாய் சேர்த்துக் கொடுத்தேன்.

ஆட்டோக்களில் பல நல்ல வாசகங்களும் பார்த்து படித்து ரசித்ததுண்டு. சில ஆட்டோக்களில் நல்ல ஆடியோ, கடவுள் படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் எய்ட் சாதனங்கள்னு வச்சுருப்பாங்க. சிலர் ஆட்டோவை தங்கள் தெய்வம் போல வச்சிருப்பாங்க. மும்பையில் ஒரு ஆட்டோக்காரரோட மனிதாபிமான தன்மையினால் கவரப்பட்டு அவரப் பத்தி சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அவரைப்பத்தின தகவல் மற்றும் ஃபோட்டோ அதிகம் பகிரப்பட்டது. என்ன தொழில் செய்தாலும் அதில் உண்மையாய் இருங்கள் அதுவே உங்கள் உயர்வுக்கு வழி. இந்த மாதிரி ஒரு வாசகத்தை ஆட்டோக்காரங்க எல்லாம் தங்கள் மோட்டோவா வச்சிக்கணும். அப்பத்தான் ஆட்டோக்காரங்க கொள்ளையடிக்கிறாங்கங்கிற மனோபாவம் மாறி நமக்கு கிடைத்த கொடைன்னு மக்கள் நினைப்பாங்க,

8 கருத்துகள்:

  1. கட்டுரையில சொல்லப்பட்டிருக்கற மாதிரி விதிவிலக்கானவங்க 5 பேர் இருப்பாங்க. மத்த 95 ஆட்டோக்களும் முகமூடா கொள்ளைக் காரங்க தான். என்ன செய்ய...

    பதிலளிநீக்கு
  2. என்ன தொழில் செய்தாலும் அதில் உண்மையாய் இருங்கள் அதுவே உங்கள் உயர்வுக்கு வழி. இந்த மாதிரி ஒரு வாசகத்தை ஆட்டோக்காரங்க எல்லாம் தங்கள் மோட்டோவா வச்சிக்கணும். அப்பத்தான் ஆட்டோக்காரங்க கொள்ளையடிக்கிறாங்கங்கிற மனோபாவம் மாறி நமக்கு கிடைத்த கொடைன்னு மக்கள் நினைப்பாங்க//

    ,அருமையான கருத்து பதிவு
    எங்கள் அனைவரின் ஆதங்கத்தையும்
    மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. உண்மையான கருத்தை, நகைச்சுவை கலந்து அளித்த விதம் அழகு. அவர்கள் நமக்கெல்லாம் கொடையாக வரும் நாள் விரைவில் வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. உண்மையான கருத்தை, நகைச்சுவை கலந்து அளித்த விதம் அழகு. அவர்கள் நமக்கெல்லாம் கொடையாக வரும் நாள் விரைவில் வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. உண்மையான கருத்தை, நகைச்சுவை கலந்து அளித்த விதம் அழகு. அவர்கள் நமக்கெல்லாம் கொடையாக வரும் நாள் விரைவில் வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. ஆட்டோக்களைப் பொறுத்தவரை பஸ் மாதிரியே இவங்களுக்கும் ஏரியா, ரூட் எல்லாம் உண்டு. அதைத்தாண்டி அடுத்த ஏரியாவுக்குப் போய் சவாரி பிடிக்க மாட்டாங்க. இதனாலயே சில சமயம் நாம கூப்பிடும் இடத்துக்கு ஆட்டோ வராது. எங்கூர்ல இப்படித்தான் நடக்குது.

    சவாரியைக் கொண்டு விட்டுட்டு தன் ஏரியாவுக்குத் திரும்பி வரும்போது வழியில் சவாரி கிடைச்சா தன்னோட ஏரியாவுக்குன்னா ஒத்துப்பாங்க. இல்லைன்னா ஆட்டோ வராதுன்னுட்டு போயிட்டே இருப்பாங்க.

    பதிலளிநீக்கு
  7. ஆம் கணேஷ்

    நன்றி ரமணி

    நன்றி இளங்கோ

    நன்றி சாரல்..உங்க ஊர்லயும் அப்பிடித்தானா..:)

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...