மாதா, பிதா, குரு , தெய்வம்னு சொல்றோம். இதுல குரு தெய்வத்துக்கு சமம். அந்த தெய்வங்கள்தான் நம்ம கல்விக் கண்ணைத் திறக்கிறாங்க. ஆனா அவங்களுக்கு இருக்க சிரமங்கள் எக்கச்சக்கம். இதுல நான் வகுப்புல சரியா சொல்லித்தராம தனியா ப்ரைவேட் ட்யூஷன் எடுக்கிற டீச்சர்களையோ, ஏதோ காழ்ப்புணர்வோடயோ, காம உணர்வோடயோ குழந்தைகள் கிட்ட நடந்துக்கிற ஆசிரியர்களைப் பற்றி சொல்லலை. அவங்க எல்லாம் விலக்கப்படவேண்டியவர்கள்.
அரசுப் பள்ளியாயினும் சரி, தனியார் பள்ளியாயினும் சரி ஆசிரியர்களுக்கு கடமை அழுத்தம் அதிகம். தினம் நடத்த வேண்டிய பாடங்களை குறிப்புகளாக எடுத்து வந்தால் மிகச் சிறப்பாக செய்யலாம். இதுக்கு நடுவில் பேப்பர் கரெக்ஷன்ஸ் மற்றும் குடும்பக் கடமைகள். ஆசிரியப்பணி என்பது மாணவர்களை ஆற்றொழுக்கப்படுத்துவது. ஆனால் ஆசிரியர்கள் சிலபசை சீக்கிரம் முடிச்சு கோச்சிங் ஆரம்பிக்கணும் என்ற எண்ணத்தைத்தான் நிறைய பள்ளி நிர்வாகங்கள் கையில் எடுக்கின்றன. இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் மிஷின்களாகிடறாங்க.
ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு விதமான புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். எல்லா மாணவர்களின் ஐக்யூவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஐந்து விரல்களும் வித்யாசப்படுவது போல ஒவ்வொரு குழந்தையின் கற்கும் திறனும், மனனத் திறனும் வேறுபடும். ஒரு குழந்தைக்கு கணிதம் பிடிக்கும். சிலசமயம் ஆசிரியகளைப் பிடிப்பதாலும், அவர்கள் கற்பிக்கும் திறனைப் பிடிப்பதாலும் கூட பிடிக்காத சப்ஜெக்ட் கூட பிள்ளைகள் இலகுவாக கற்றுக் கொள்வார்கள். இதற்கு போதிய அவகாசம் அளிக்கப்படணும்.
இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் செயல்முறைக் கற்றல் என்ற முறையில் கற்பிக்கப்படுகிறது. எங்கள் குழந்தைகள் டெல்லியில் இருந்த போது பள்ளிகளில் வாரம் ஒரு முறை போஸ்ட் ஆஃபீஸ், போலீஸ் ஸ்டேஷன், ஃபையர் சர்வீஸ், வங்கிகள் என அழைத்துச் செல்வார்கள். அங்கே நடைமுறையில் இருப்பதை குழந்தைகள் பார்த்து கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வார்கள். மனனம் மட்டுமே முக்கியத்திறன் என்று செயல்படும் மெட்ரிக்குலேஷன் கல்வி முறைகளில் மனனத் திறமை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. அதனால் ஆசிரியைகளும் சுமாராகப் படிக்கும் குழந்தைகளுக்கும் சரியான கவனிப்பு செலுத்த முடியாமல் எல்லாரையும் ஒரே தராசில் போட்டு அளக்க வேண்டிய அவதிக்கு ஆளாகிறார்கள்.
தங்களுடைய மாணவர்கள் சரியான பாதையில் போறாங்களான்னு கண்காணிக்க முடிவதில்லை. எங்கள் பள்ளி செண்டம் பாஸ் என சொல்ல விரும்பும் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ போதுமான கவனிப்பை வழங்குவதில்லை. முன்பெல்லாம் மாரல் சயின்ஸ் வகுப்புகள் இருக்கும். பின்னால் கூட அது வால்யூ எஜுகேஷன் என்று இருந்தது. இப்போதெல்லாம் இந்த வகுப்புகள் இல்லை.
ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கண்டிக்க கூட பயப்படுறாங்க. வீடு, பயணம், ஆசிரியப்பணி மூன்றையும் திறம்பட சமாளிக்கிறாங்க. என் நண்பர் ஒருத்தர் பல கல்லூரிகளின் தாளாளர் . அவர் சொன்னார். இன்னும் கூட டீச்சர்களுக்கு நேரம் கிடைத்து பாடங்களை சரியாக பிள்ளைகளுக்கு போதிக்கணும்னு. இன்னும் நிறைய இன்ஃபர்மேஷன்களை கலெக்ட் செய்யணும். பையன்கள் சந்தேகம் கேட்டா நல்ல விரிவா விளக்கம் கொடுக்கும் அளவு அவங்க தங்களைத் தயாரித்துக் கொள்ளணும்னு. சொல்லப்போனா பள்ளி நிர்வாகம் நெருக்கடி கொடுக்காட்டா எல்லா ஆசிரியர்களும் சிறப்பாதான் செயல்படுவாங்க.
அப்பா அம்மா என்ன நினைக்கிறாங்கன்னா தங்களோட பையன் நல்ல ஒழுக்கங்களோடு வளர்றானோ இல்லையோ நிறைய மதிப்பெண் எடுத்து வெளிநாட்டுல உத்யோகத்துக்கு போகணும்னு. மாணவர்கள் ஆசிரியர்கள் நம்மை கரையேத்திடுவாங்கன்னு நினைக்கிறாங்க. பள்ளி நிர்வாகம் என்ன நினைக்குதுன்னா ஆசிரியர்கள் அனைத்துப்பிள்ளைகளையும் பள்ளியிலிருந்து மார்க் வாங்கும் ப்ராடக்டுகளாக மாத்தணும்னு. இதுல பாவம் அந்த ஆசிரியை எப்படி தன் ஆசிரியத் தொழிலை சிறப்பா செய்ய இயலும்.
ஆசிரியப்பணி என்பது ஒரு வாழ்வியல் மாதிரி.குருகுலம்னு அந்தக் காலங்கள்ல ஆசிரியருக்கு பணிசெய்து படிச்சிருக்காங்க மாணவர்கள். . ஆனால் ஆசிரியர்களை ஒரு மார்க் வாங்கும் கருவியாக பயன்படுத்தும் பள்ளிகளின் செயல்களில் மாறுதல் வந்தால்தான் அவங்க நல்லாசிரியரா பணிசெய்ய முடியும். நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.
டிஸ்கி - இந்தக் கட்டுரை ஏப்ரல் 15 - 30 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.

100% உண்மை ! சிறப்பான பதிவு...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
அருமையான கருத்துக்கள் தேனம்மை!
பதிலளிநீக்குஇன்றைய காலகட்டத்தில் ஆசிரியப் பணி போன்ற ஒரு ரிஸ்கான பணி இருக்க முடியாது. அந்நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து 'அடங்கலைன்னா தோலை உரிங்க' என்ற அளவுக்கு சொல்லி விட்டுப் போவார்கள். இன்றைய கால கட்டத்தில் ஒரு குழந்தையைத் திட்டினாலே பெற்றோர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களும் என்னதான் செய்வார்கள், பாவம்!
பதிலளிநீக்குஆசிரியர்களின் நிலைமையைத் தெள்ளத் தெளிவாக்குகிறது தங்கள் எழுத்து....
பதிலளிநீக்குநன்றி தனபால்
பதிலளிநீக்குநன்றி மனோ
நன்றி ஸ்ரீராம்
நன்றி இளங்கோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
’அடங்கலன்னா தோலை உரிங்க” அடேங்கப்பா.. உண்மைதான்.நாம படிச்சபோது அப்பிடித்தான் ராம்..:)))
பதிலளிநீக்கு