வெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியவுடனே வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகளுக்கு வியாதிகள் ஆரம்பிக்கத் தொடங்கும். அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கொஞ்சம் காய்ச்சல்., சளி என்று நை நை என்று அழ ஆரம்பிக்கும். பெரியவர்களுக்கு வந்தாலே கஷ்டம் எனும் போது குழந்தைகளுக்கு வந்தால் எப்படித்தாங்குவார்கள்.. ?குழந்தைகளுக்கு இதுபோல மழைக்காலம் ஆரம்பித்தபின் வரும் உடல் நலக் கோளாறுகளுக்காக என்ன செய்யவேண்டும்., எப்படிக் குழந்தைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சுபம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆசிஃப் அவர்களிடம் நம் வாசகியருக்காக நோய்த்தடுப்பு முறைகள் பற்றிக் கேட்டேன். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.
மழைக்காலம் ஆரம்பித்தவுடனே எல்லா பாக்டீரியா ., வைரஸ் மற்றும் மைக்ரோ பாரசைட்ஸ்களின் ஆதிக்கம்., ஈரப்பதத்தின் காரணமாகப் பெருகத்துவங்கும். அப்போது சுவாசத்தின் (காற்றில்) மூலமாகவும்., நீரின் மூலமாகவும் ., சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் மூலமாகவும் நோய் பெருகிப் பரவுகிறது.
வைரஸின் மூலமாக டையோரியா., டிஸண்ட்ரி., டைபாயிடு., காலரா., ஜாண்டிஸ்., மலேரியா போன்றவை வருகிறது. இதில் டையோரியா., டிசண்ட்ரி போன்றவை சுத்தமற்ற தண்ணீர் மூலமும்., டைபாயிடு., காலரா போன்றவை சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் மூலமும் பரவுகிறது. ஹெப்பாடிடிஸ் பி எனப்படும் மஞ்சள் காமாலை நோயும் சுவாதசத்தின் மூலம் பரவுகிறது. மலேரியா தண்ணீர் மூலம் பரவுகிறது.
க்ளைமேட் மாற்றமடைவதும் வைரல் இன்ஃபெக்ஷன்ஸை உண்டு பண்ணுகின்றன. இதனால் வைரல் ஃபீவர்-- ஃப்ளூ., இன்ஃப்ளூயன்ஸா., நிமோனியா., டெங்கு., சிக்கன் குனியா போன்றவை தாக்குகின்றன. இதில் நிமோனியா பாக்டீரியல் இன்ஃபெக்ஷனால் உருவாகிறது.
ஆஸ்துமா மிகப் பொதுவான மழைக்கால நோய். காற்று ., மழை போன்ற சமயங்களில் இதன் தாக்கம் அதிகமாய் இருக்கும். இது முதலில் நுரையீரலை பாதிக்கிறது. பொதுவாக செப்டம்பர் மாதத்தில் வருகிறது. இது சுவாசக் கோளாறுப் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறது.
சில வைரல் இன்ஃபெக்ஷன்கள் மூளையை பாதித்து மூளைக்காய்ச்சலை உண்டுபண்ணும். இதற்கு பன்றிக் காய்ச்சல் என்றும் பெயர். இந்த வைரஸ் எல்லாம் சுவாசித்தல் மூலம் மூக்கு மூலம் பரவுது. இது மூக்கு வழி நுழைந்து நுரையீரல்., ரத்தம்., பிறகு அதன் மூலம் எல்லாப் பாகங்களுக்கும் பரவுது. முதலில் இது ப்ரெயின் ஃபீவர் ., ஹெப்படிடிஸ் பி என நுழைந்து பின் உடலை சோர்வுறச் செய்து., டீ ஹைட்ரேஷனாக்கி எல்லா பாகத்தையும் பாதிக்கிறது.
பொதுவான நோய் அறிகுறிகள்;-
முதலில் காமன் கோல்ட்., மூச்சுவிடுவதில் சிரமம்., மூக்கு அடைப்பு அல்லது மூக்கு ஊற்றுதல்., இருமல்., சளி., காய்ச்சல்., உடல்வலி., தலை வலி., தலைபாரம்., குமட்டல்., வாந்தி மயக்கம்., சோர்வு இருக்கும்.
இதை சரியான சமயத்தில் கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டல் இது ரத்தத்தில் கலந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு நிமோனியா., இன்ஃப்ளூயன்ஸா., ஃப்ளூ., சுவாசக் கோளாறு., ஆஸ்த்துமா போன்றவற்றில் கொண்டுபோய் விடும். இப்படி சிவியரா பாதிக்கபட்டா ஹாஸ்பிடலைஸ் செய்யணும். அதுவும் ஒரு வருடத்துக்குள் உள்ள குழந்தை என்றால் உடனடியா ஆஸ்பிட்டலில் சேர்த்து மருத்துவ உதவி செய்யணும்.
அடுத்த கட்டத்தில் வாய் கசப்பு., வயிற்று வலி., பசியின்மை., வயிற்றுப் பொருமல்., வாமிட்டிங்., லூஸ் மோஷன்., இதெல்லாம் இருக்கும். ஜாண்டிஸும் டைபாய்டும் வைரஸால் வருவது. கண்ணில் நீர் கோர்த்தல்., மூக்கில் நீர் வடிதலில்தான் எல்லா நோய்களும் ஆரம்பிக்கும். சில காய்ச்சல்களில் நெறிகட்டுதல்., ரேஷஸ்., டையர்ட்நெஸ். இருக்கும். டெங்கு., சிக்கன் குனியாவில் முழு உடலும் வலிக்கும் நெறிகட்டும். மூட்டுகளைப் பாதிக்கும் . மலேரியா விட்டு விட்டு குளிர் ஜுரம் போல வரும்.
சிக்கன் பாக்ஸ்., ஸ்மால் பாக்ஸ்( பெரியம்மை., தட்டாலம்மை) போன்றவை வரலாம். இது எல்லாம் மழைக்காலத்தில் பெருகி வரும் ஈரப்பதத்தால்., பாக்டீரியா வைரஸ்கள் காற்றிலும் நீரிலும் அதிகமாகி சுவாசம் மூலமும்., நீர் மூலமும் மனித உடலை அடைகின்றன.
உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் இது அதிகம் பாதிக்காது. நோஞ்சான் பிள்ளைகள் சிலருக்கு ஊரில் ஒரு வியாதி எட்டிப் பார்க்கும்போதே முதலில் அவர்கள் உடலைத்தான் பதம் பார்க்கும். எனவே தினமுமே உணவில் நல்ல ஹெல்த்தி டயட் இருக்கும்படி பார்த்துக் கொடுக்க வேண்டும்.
இதை எல்லாம் தடுக்கும் முறைகள் :-
மழைக்காலம் ஆரம்பித்தவுடன் பாதுகாப்பு முறைகளும் அமல்படுத்தப் படவேண்டும். குப்பைகள் சேராமல்., சாக்கடைத் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படவேண்டும். பொது சுகாதாரமும். சுத்தமான சுற்றுச் சூழலும் முக்கியம். இல்லாவிட்டால் தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா போன்ற காய்ச்சலை உருவாக்கும். பொதுவாக கைமருந்து எல்லாம் பிள்ளைகளுக்குக் கொடுத்துக் கொண்டிராமல் ஒன்றிரண்டு தினங்கள் பார்த்து விட்டு சிவியரானால் ஹாஸ்பிட்டலைஸ் செய்துவிட வேண்டும்.
குடும்ப சுகாதாரம்., தனிநபர் சுகாதாரம் முக்கியம். சாப்பிடும் முன்பும்., டாய்லெட் செய்றுவந்தபின்னும் லிக்விட் சோப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி கைகழுவவேண்டும்.பிள்ளைகளையும் கை கழுவ பழக்க வேண்டும். நகங்களை அவ்வப்போது வெட்டி விடவேண்டும்.
வீட்டில் முதலில் கிச்சன் சுகாதாரம் முக்கியம். அப்புறம் டாய்லெட்டுகள் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
வீடு நல்ல காற்றோட்டமும்., சூரிய வெளிச்சமும் உடையதாக இருக்கவேண்டும்.
குப்பைகள் ., உடனுக்குடன் வீட்டிலிருந்து அகற்றப்படவேண்டும். டம்ப் பண்ணக்கூடாது
வீட்டைச் சுற்றி மழைத்தண்ணீர் ., சாக்கடைத்தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குடிதண்ணீரை. சுடவைத்து வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
வெளியில் மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம்., கூல்ட்ரிங்ஸ் ., ஃபாஸ்ட் புட் சாப்பிடுவது தவிர்க்கப்படணும். அதில் ஏதும் கிருமிகள் இருந்து உடல் நலக்குறைவுகள்., வயிறு., தொண்டை பிரச்சனைகள் உருவாகும்.
உணவு:-
ஈஸியாக செமிக்கக்கூடிய உணவு வகைகள் தரவேண்டும். பால்., ப்ரெட்., கஞ்சி., பார்லித்தண்ணீர்., சூப்., போன்றவை தரலாம். டீஹைட்ரேஷனத்தவிர்க்க அதிக அளவில் லிக்விட் ஃபுட் எடுத்துக் கொள்ளவேண்டும்.
எந்த அப்னார்மல் சிம்டம்ஸ் இருந்தாலும் உடனடியாக ஹாஸ்பிட்டலைஸ் செய்து மருத்துவம் அளிக்க வேண்டும்.
கைக்குழந்தைகள் எதனால் அழுகிறது என்பது தெரியாததால் உடனடியாகப் பார்க்கவேண்டும். சரி வெளியே கிளம்பும் போது குழந்தைகளுக்கு., மழைக்கோட்டு., குடை எல்லாம் மறக்காம கொடுத்து விடுங்க. தண்ணீரில் ரொம்ப விளையாட வேண்டாம்னு சொல்லி அனுப்புங்க. உற்சாகமா கிளம்புங்க மழைக்காலத்தை எதிர்கொள்ள.
டிஸ்கி:- இந்த மருத்துவக் கட்டுரை ஜுலை 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.:)

மிகவும் பயனுள்ள பதிவு
பதிலளிநீக்குதமிழ்மணம் இணச்சிட்டேன்....
பதிலளிநீக்குதமிழ்மணம் இணச்சிட்டேன்....
பதிலளிநீக்குஅருமையான பதிவு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்..
உண்மையில் இது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவுதான். நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
very informative and useful.
பதிலளிநீக்குசின்னக்குழந்தைகளும் பெரிய குழந்தைகளும் அவசியம் படிக்கவேண்டிய பகிர்வு :-))
பதிலளிநீக்குநன்றி ராஜா., நாஞ்சில் மனோ., விடிவெள்ளி., ஜிஜி., ரத்னவேல் ஐயா., சித்து., சாந்தி..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!