சென்னையில் பதிவர்கள் ( வலைப்பூக்களில் எழுதுபவர்கள்) சந்திப்பு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கிறது. தனித்தனியாக பெண் பதிவர்கள் சந்திப்பும் கூட .
டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஏதேனும் புத்தக வெளியீடு அல்லது விமர்சனம் நடைபெற்றால் சொற்ப அளவில் பெண்பதிவர்களும் நிறைய ஆண்பதிவர்களும் ( அதுலயும் 33% தான்) கலந்து கொள்வார்கள். கடற்கரை சந்திப்பும் நடைபெறுகிறது.
விஜய் டிவியின் நீயா நானா புகழ் சக்தி செல்வியின் சென்னை விஜயத்தை ( வீட்டுப்புறா என்ற பதிவர்) முன்னிட்டு அடையார் ழ கஃபேயில் ஒரு பதிவர் சந்திப்பை பெண் பதிவர்களின் தானைத்தலைவி பகோடா பேப்பர்கள் வலைப்பூ புகழ் விதூஷ் நடத்தினார். ஆண் பெண் பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு. இதில் என்ன ஆச்சு என்றால் பதிவர்கள் பலர் பதிவு அடிக்கடியோ., அவ்வப்போதோ போட்டாலும்., முகநூலர்களாகவும்.,ட்விட்டர்களாகவும்., கூகுள் பஸ்ஸர்களாகவும்., கூகுள் ப்ளஸ்ஸர்களாகவும் மாறி இருந்தாங்க. எங்கே போனாலும் ப்லாகில் எழுதின பதிவை அப்லோட் செய்ய மறக்குறதில்லை. ப்லாகர்ஸ் ஆர் ஆல்வேஸ் ப்லாகர்ஸ் என்ற கூகுள் விதிப்படி இலவச இலக்கியக் குடிசையை ., டென்டை எங்கே போனாலும் தூக்கிக்கிட்டே போவாங்க..!
மீட் பண்ற இடம் முடிவான பின்னாடி அதுக்கு சினிமா பாணியில் ஒரு பாஸ்வேர்ட் ரெடி பண்ணி இருந்தாங்க. ழ கஃபே போனவுடனே வெளியே காவலுக்கு ஒரு ஐயனார் ( சிலை ) இருப்பாரு. அவர்கிட்ட வலைப்பூ வடைன்னு சொன்னா உள்ளேருந்து நாலு பேர் ( தாதா இல்லீங்க) வந்து கூப்பிட்டுகிட்டு போவாங்கன்னு. அவரப்பார்த்ததுமே மிரட்சியா இருந்துச்சா.. வலைப்பூவடைன்னு பயந்துகிட்டே சொன்னது அவருக்கு வாழைப்பூ வடைன்னு கேட்டுச்சுப் போல.. உடனே அவர் அதெல்லாம் உள்ளதான் கிடைக்கும் வெளிய சர்வ் பண்ணுறதில்லை. உள்ளே போகலாம் அப்பிடின்னாரா. உடனே உள்ளே போயிட்டோம்.
அங்க நம்ம சொந்தபந்த ப்லாகர்ஸ் எல்லாம் கும்மி அடிச்சிகிட்டு காஃபி் குடிச்சிகிட்டு இருந்தாங்க. சிலர் கருவேப்பிலை சூப் குடிச்சிகிட்டு இருந்தாங்க.ப்லாகில மட்டும் சத்து சத்துன்னு எழுதுனா பத்தாது. டயட்டிலயும் அப்பிடி இருக்கணும்னு. அடுத்து வாழைப்பூ வடை வந்துச்சு. அப்ப உள்ள வந்தாரு.. கேபிள் சங்கர். சங்கர் அப்பிடிங்கிற பேர்ல நிறைய பதிவர்கள் இருப்பதால இவர் சினிமா பற்றி எழுதுவதால் கேபிள் சங்கர். வந்தவர் தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையம் அப்பிடிங்கிற மாதிரி தனக்கு கிடைச்ச வெஜ்ஜி பர்கரை பிச்சு பிச்சு குருவிங்க இரை ஊட்டுற மாதிரி மத்த ப்லாகர்ஸுக்கு ஊட்டிக்கிட்டு இருந்தாரு. அம்மையப்பன்னா தாயுமானவர்னு அர்த்தம்..:)
அங்க ஏற்கனவே எறும்பு ராஜகோபால்., பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் ஜாக்கி சேகர்., தண்டோரா மணிஜி., அதியமான் த லிபரடேரியன்., அகநாழிகை பொன் வாசுதேவன்., ஈஸ்வரி ரகு., ரம்யாதேவி., விதூஷ்., சக்தி செல்வி., அவங்க கணவர்., ரோமியோ ராஜராஜன்., அசோகபுத்திரன்., கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., கேசவ் பாஷ்யம்., பினாத்தல் சுரேஷ்., வெட்டிபீடியா சுரேஷ்., குட்டி டின்., ஓ ஆர் பி ராஜா., வித்யா., அகிலா., ரமேஷ் சுப்புராஜ்., ராஜகோபால்., கே ஆர் பி செந்தில்., ராஜலெக்ஷ்மி எல்லாரும் இருந்தாங்க..
அப்ப..
மேடி மேடின்னு ஒரு சத்தம் கேட்டுச்சா.. உள்ள கூலிங்க் க்ளாசோட வந்தார் (பபாஷா) பலா பட்டறை சங்கர். இவர் பதிவுல சினிமா., புத்தக விமர்சனம் எழுதி இருக்குறத பார்த்தா சம்பந்தப்பட்ட ஆசாமிங்க நினைச்சுக்குவாங்க . அட நாம இம்புட்டு அழகாவா படம் எடுத்து இருக்கோம் அல்லது புக் எழுதி இருக்கோம்னு. அவ்வளவு அழகா விமர்சனம் செய்திருப்பார்..

என்ன இங்க வெய்யிலா அடிக்குதுன்னு கலாய்ச்ச உடனெ கூலிங்க் க்ளாசைக் கழட்டினார். அப்ப அமெரிக்கப் புகழ் நசரேயனும் வந்தார் அவரும் கூலிங்க் கிளாசோட.!!
பர்கரும் வாழைப்பூவடையும் சர்வ் செய்யப்பட்ட சமயம் ரோமியோ எனக்கு பிடிக்காது வேண்டாம் எனமூக்கின் பக்கமா கையை கொண்டு போக நம்ம கறுப்பு எம்ஜியார் நசரேயன் யப்பா ரோமியோ இந்த பர்கர்ல என்னென்ன சத்து இருக்குன்னு சொல்லட்டுமா. விட்டமின் 40 பர்சண்ட்., ஃபாட் 5 பர்சண்ட்., கார்போஹைட்ரேட் என அடுக்க ஆரம்பிக்க அசந்தர்ப்பமா ரமணாவோட புள்ளி விவரத்துல மாட்டுன கில்லிங்க மாதிரி எல்லாரும் முழிக்க. வேண்டாம்னா விடுங்க பாஸ் என முற்றுப் புள்ளி வைத்தார் ரோமியோ. (ஹிஹி நசர் உங்களைக் கலாய்க்க இத விட்டா வேற வழி..:))
வேல் கண்ணனும்., ராம்ஜி யாஹுவும் உள்ள வந்தாங்க. அப்ப அவங்க பேசிக்கிட்டாங்க நாம கவிதை சங்கமத்தில் சந்திச்சிருக்கோமேன்னு. கொஞ்சம் சலசலப்புக்கு இடையில் வந்தாரு அப்துல்லா தன்னோட பெண் அர்ஷியாவோட. குட்டி ப்லாகரா இவங்க என எல்லாரும் அவரைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள் வித்யாவும்., தன்னோட பையனோட வந்தார்.
முக்கியமான விஷயம் புதிய தலைமுறையின் யுவகிருஷ்ணாவும்., அதிஷா வினோவும் வந்திருந்தாங்க.. என்னமா வில்லங்கமா கமெண்ட் அடிப்பார் இந்த யுவகிருஷ்ணா. அவர் அதிஷா வினோ போல மென்மையா புன்னகை செய்துகிட்டு இருந்தது ஆச்சர்யம்..
அகநாழிகை வாசு வந்தவங்களுக்கெல்லாம் படிப்பீங்கதானே எனக் கேட்டு பத்து அகநாழிகை வெளியீடு கவிதைத் தொகுப்புகள் கொடுத்தார். நிச்சயம் படிப்பேன். ப்லாகிலும் மத்த இணையங்களிலும் விமர்சனம் பண்ணுறேனே என்றபடி வாங்கிக் கொண்டேன்.

பட்டாணி சுண்டல் உலா வரும் நேரம். சிலர் குலாப்ஜாமுன் வித் ஐஸ்கிரீமிலும்., சிலர் பவண்டோவிலும்., சிலர் ரோஸ்மில்கிலும் நீந்திக் கொண்டிருந்தார்கள்.
அங்கே இருந்த லைப்ரரி., டைட்டானிக் ரூம்., டிவிரூம் ஹால் தவிர மத்திய அறையில்தான் ரொம்ப நெருக்கடி.
அப்ப அதியமான் த லிபரடேரியன் மாஜிக் செய்து காட்டினார். விசிட்டிங் கார்டு பந்தா மாறுச்சு., ஒரு ரூபாய் காயின் அவர் கையிலேருந்து மறைஞ்சு இன்னொருத்தர் சட்டை மடிப்பில வந்துச்சு., கட்டை விரலை வேற ரெண்டா நகர்த்திக் காட்டினார்.. எங்கேருந்தாவது முயலை எடுப்பாரோன்னு பார்த்தோம். நல்ல வேளை அப்பிடி ஏதும் செய்யலை..
மதார்., சென் மனைவி மத்த எல்லாரும் கீழே உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க. சேர் பத்தாம கூட்டம். அகநாழிகை வாசு புத்தகம் டிஸ்ட்ரிப்யூட் பண்ண களைப்புல ஆலிலைக் கண்ணன் மாதிரி அந்த் டிவி டிவிடி ரூம்ல பீன் சேர்ல சாய்ஞ்சுட்டார்.. எல்லாரையும் ஒரு வழியா க்ரூப் ஃபோட்டோ எடுக்கலாம்னா மொத்த கும்பலுக்கும் இடம் பத்தல.

சரி கடைசியா சமரசத்துக்கு வந்து எல்லாரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்னு உக்காந்தா.. பெரியவங்க எல்லாம் சேர்ல உக்காருங்கன்னு யாரோ சொன்னதுதான் தாமதம் உக்கார்ந்திருந்த எல்லாரும் எழுந்து நிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அப்பாடா நமக்கு சேர் கிடைச்சிதுன்னு நானும் ரம்யாவும் உக்கார்ந்தோம். போட்டோ எடுக்கப்போன கேபிள் ஜி டிஸ்டன்ஸ் பத்தாம சுவத்தைத் தள்ள ஆரம்பிச்சிட்டார்..சுவத்துக்கு அந்தப்பக்கம் போய் எடுங்கன்னு சொன்னாங்க எல்லாரும். அது பாசிபிள் இல்லாததுனால ஒரு வழியா உக்கார்ந்து நின்னு படம் எடுத்துட்டார்..
அப்புறம் இன்னும் 6 மாதத்துல அமீரகத்துலேருந்து குசும்பன் ( ப்லாகர்தாம்பா) வர்றாராம். அப்போ ஒரு மீட் வைக்கலாம்னு முடிவாச்சு. பில் யாரோ பே பண்றாங்க அப்பிடீங்கும்போது போறதுக்கு நமக்கு என்ன கசக்குதா..:)) கலகலன்னு சத்தத்தோட சாயங்கால விருட்சம் மாதிரி இருந்த் ழ கஃபே யை வி்ட்டு எல்லாரும் பை பை சொல்லி வீட்டுக்குப் பறந்தாங்க..
டிஸ்கி .1. :- விதூஷுக்கு நன்றி..

டிஸ்கி 2.:- நாம அரசியல் பத்தி பேசல., சினிமா பத்தி பேசல.., இலக்கியம் பத்தி பேசல., வலைத்தளம் பத்தி பேசல. மொத்தத்துல ஒர் ஃப்ரெண்ட்ஷிப் மீட்தான் இது.. எனவே எந்த மாகசீன்லயும் பதிவு பண்ண முடியலை. நம்ம வலைத்தளம் பின்ன எதுக்கு இருக்கு. நமக்கு நாமே பப்ளிஷர்ஸ்..:)
டிஸ்கி 3. :- மிச்ச படங்களை தெனாலியில் பாருங்க.. http://www.thenaali.com/. மாலையில் பார்க்க ரசிக்க காலரியில் வரும்.:)
மகிழ்ச்சியான பதிவு மேடம்.மகிழ்ச்சியான பதிவு மேடம்.
பதிலளிநீக்கு//அவர்கிட்ட வலைப்பூ வடைன்னு சொன்னா உள்ளேருந்து நாலு பேர் ( தாதா இல்லீங்க) வந்து கூப்பிட்டுகிட்டு போவாங்க//
பதிலளிநீக்குபின்னூட்டத்துல வர்ற வடை அங்கியும் கடவுச்சொல்லா வந்து நின்னுடுச்சா.
'ஐ.. வடை எனக்கே'ன்னு கத்தலாம்ன்னு இங்க அவசர அவசரமா பின்னூட்டினா.. வட போச்சே.... :-))))
வட போச்சே....
பதிலளிநீக்குவலைப்பூ வடை
பதிலளிநீக்குதொகுப்பு நல்ல சுவை:))!
படிக்கப் படிக்க மிகுந்த சுவாரஸ்யம்!!
பதிலளிநீக்குவலைப்பூவடைன்னு பயந்துகிட்டே சொன்னது அவருக்கு வாழைப்பூ வடைன்னு கேட்டுச்சுப் போல.. உடனே அவர் அதெல்லாம் உள்ளதான் கிடைக்கும் வெளிய சர்வ் பண்ணுறதில்லை. உள்ளே போகலாம் அப்பிடின்னாரா
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
வலைப்பூக்காரர்கள் சாப்பிட்ட
பதிலளிநீக்குவாழைப்பூ வடை அருமை.
//அப்போ ஒரு மீட் வைக்கலாம்னு முடிவாச்சு. பில் யாரோ பே பண்றாங்க அப்பிடீங்கும்போது போறதுக்கு நமக்கு என்ன கசக்குதா..:)) //
பதிலளிநீக்குThis is a Notable Point. Correct.
வலைப்பூ வடையோ வாழைப்பூ வடையோ நல்ல ருசியாத்தான் எழுதியிருக்கீங்கோ. வெளியூர் பதிவர்களுக்கெல்லாம் பார்சலில் வடை அனுப்ப ஏதாவது தீர்மானம் நிறைவேற்றக்கூடாதா? பில்லை யாரோ தானே பே பண்ணப்போறாங்க!
மகிழ்ச்சியான தருணங்கள்...இனிய சந்திப்புக்கு வாழ்த்துக்கள் மேம்!
பதிலளிநீக்குஇப்படியா என்னை டேமேஜ் பண்ணுறது :( ... நான் அதை உளுத்தம் பருப்பு வடைன்னு நினைச்சேன்,, சாப்பிடும் போது நூல் நூலா வந்த போது தான் யாரோ சொன்னாங்க இது வாழை தண்டு வடைன்னு :))) ..
பதிலளிநீக்குHui. Thanks for sharing :)
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஉங்களை அங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி;)
இது ஒரு ஆரோக்கியமான ஆரம்பம்!
ஒ.ஆர்.பி.ராஜா
நானும் உங்களை அங்க பார்த்தேன்னு நினைக்கிறேன் :)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவலைப் பதிவர்கள் இவ்வாறு கூடுவது எவ்வளவு மகிழ்ச்சியான விடயம்.

பதிலளிநீக்கு>>நாம அரசியல் பத்தி பேசல., சினிமா பத்தி பேசல.., இலக்கியம் பத்தி பேசல., வலைத்தளம் பத்தி பேசல. மொத்தத்துல ஒர் ஃப்ரெண்ட்ஷிப் மீட்தான் இது.. எனவே எந்த மாகசீன்லயும் பதிவு பண்ண முடியலை. நம்ம வலைத்தளம் பின்ன எதுக்கு இருக்கு. நமக்கு நாமே பப்ளிஷர்ஸ்..:)
பதிலளிநீக்குaahaa என்னா ஒரு வருத்தம்?
////அவர்கிட்ட வலைப்பூ வடைன்னு சொன்னா உள்ளேருந்து நாலு பேர் ( தாதா இல்லீங்க) வந்து கூப்பிட்டுகிட்டு போவாங்க//
பதிலளிநீக்குஐ..அங்கெயும் வடைதானா ஹா..ஹா..
:))))
பதிலளிநீக்குஅய்யய்யோ....
பதிலளிநீக்குவடை போச்சே!
நண்பர்கள் சந்திப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நன்றி ரமேஷ்., சாந்தி., கலாநேசன்., ராமலெக்ஷ்மி., மனோ.,ரத்னவேல் ஐயா., ராஜி., கோபால் சார்., மாணவன்., ரோமியோ., ரமேஷ்., ராஜா., அப்துல்லா., கென்., ( சென் மனைவிக்குப் பதிலா கென் மனைவின்னு எழுதிட்டேன்.. இதை கென் கேட்டிருந்தார்..:)))., டாக்டர். முருகானந்தம் சார்., சிபி., ஜெய்., கார்க்கி., கரிகாலன்., குமார்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!