விளையாட்டு.
**************************
கிச்சு கிச்சு தாம்பூலம்
விளையாடத் தொடங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
கொலை கொலையாய்
முந்திரிக்காயை பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட
பல்லாங்குழிகளாய்
சிதறிக் கிடந்தது பரவசம்.
பசுக்களை வாரியவன்
சுற்றத் தொடங்கினான்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததென..
தங்கத் துளிகளாய்
மிதந்து கொண்டிருந்தது தேகம்.
டிஸ்கி:- 28.2.2011 உயிரோசையில் வெளிவந்தது.:)
**************************
கிச்சு கிச்சு தாம்பூலம்
விளையாடத் தொடங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
கொலை கொலையாய்
முந்திரிக்காயை பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட
பல்லாங்குழிகளாய்
சிதறிக் கிடந்தது பரவசம்.
பசுக்களை வாரியவன்
சுற்றத் தொடங்கினான்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததென..
தங்கத் துளிகளாய்
மிதந்து கொண்டிருந்தது தேகம்.
டிஸ்கி:- 28.2.2011 உயிரோசையில் வெளிவந்தது.:)

lovely....
பதிலளிநீக்குchinna pillaigal vilaiyaattu arumaiya iruku. trouser potta siru pirayathai ninaivu paduthukireergal.
பதிலளிநீக்குபழய விளையாட்டு விளையாடிய ஞாபகம் பிளாஷ் பாக் போல் ஓடுது.
பதிலளிநீக்குநினைவுகள் மலர்ந்தது. வாசம் வீசியது கவிதை.
பதிலளிநீக்கு:-))
பதிலளிநீக்குயாதோன் கி பாராத்!
பதிலளிநீக்குகிச்சு கிச்சு தாம்பூலமா, தாம்பாளமா...
குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது உங்கள் கவிதை.
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குஎன்றோ எங்கோ கேட்டது.
பதிலளிநீக்குகுழந்தைப்பருவத்தை மீண்டும் நினைவுகூர்ந்ததற்கு நன்றிகள்.
நன்றி சித்து., நீலா., கீதா., ரமேஷ்., மாதவி., ஸ்ரீராம்., குமார்., ரத்னவேல் ஐயா., கோபால் சார்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!