எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 ஆகஸ்ட், 2011

இறக்கைப் பயணத்தினூடே...

இறக்கைப்பயணத்தினூடே..
******************************
அல்லாவுதீன் பூதமாய்
அடுத்து அடுத்து
என்கிறது..
என்ன கொடுத்தாலும்..

இரை எடுக்கிறேன் அலகில்..
கூட்டுக் குருவிகளுக்காய்..
எனக்கான எதிர்கால
சேமிப்பாய்..


உருவம் மாறி
உலவிச் செல்கிறேன்
காற்றாயும்.,
நீராயும்.. நெருப்பாயும்..

கண்டுபிடித்த
ஆகாயமாயும் மெய்யாயும்
கலவிக் கிடக்கிறது
உள்ளெடுத்த என்னோடு..

பயணம் செய்கிறேன்
அதனோடு கம்பளத்தில்
கூட கோபுரங்களும்
மாடமாளிகைகளும் அருகில்..

உப்பரிகைகள் மட்டுமல்ல
உப்பளங்களும்
உணர்ந்தே பயணிக்கிறேன்..
உராயும் தென்றலோடு.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2.6.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:))

11 கருத்துகள்:

  1. இரை எடுக்கிறேன் அலகில்..
    கூட்டுக் குருவிகளுக்காய்..
    எனக்கான எதிர்கால
    சேமிப்பாய்..


    வீட்டிற்காக ஓடி ஓடி உழைப்பதை அழகாக சொல்லும் கவிதை.கூடவே சேமிப்பும் உணர்த்தும் கவிதை

    பதிலளிநீக்கு
  2. திண்ணையில் அமர்ந்த
    தின்மையான் கவிதை.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பயணம் செய்த கவிதை கலக்கலாக இருந்தது... பாராட்டுக்கள்.. தின்னையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. உப்பரிகைகள் மட்டுமல்ல
    உப்பளங்களும்
    உணர்ந்தே பயணிக்கிறேன்..
    உராயும் தென்றலோடு.


    .... super, akka!!!!!

    பதிலளிநீக்கு
  5. அழகிய கவிதை பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
    ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
    தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
    மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. //உப்பரிகைகள் மட்டுமல்ல
    உப்பளங்களும்
    உணர்ந்தே பயணிக்கிறேன்..
    உராயும் தென்றலோடு//

    பின்றீங்க தேனக்கா :-))

    பதிலளிநீக்கு
  8. நன்றி எம் ஆர்., கோபால் சார்., ரத்னவேல் ஐயா., மாய உலகம்., சித்து., கோகுல்., ரமணி., சாந்தி.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...