எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2011

கடிதங்களின் காலம்..

கடிதங்களின் காலம்..:-
*************************************
குறுந்தகவல்களைப் போல
எளிதாயில்லை
கடிதங்களின் காலம்..

பரிமாற்றங்களுக்கு முன்னான
பரிபாஷைகள் பயங்கள்
தயக்கங்கள் மிகுந்து..

புராதனக் கல்வெட்டோ.,
சிற்ப வினோதமோ.,
டிரங்குப் பெட்டிகளில் புதைந்து..


புதைபொருள் ஆராய்ச்சி
செய்யும் போதெல்லாம்
செல்லரித்த ஸ்டாம்பு கூட
ஐம்பொன் தகடாய்..

கொள்ளளவு மிகுந்து
எந்தத் தயக்கமும் அற்று
இடமற்று அழிக்கப்படும்
குறுந்தகவல்களாய்
இன்றைய காதலும்., நட்பும்.

டிஸ்கி:- இது ஆகஸ்ட் II ., 2011 அதீதத்தில் வெளியானது. :-))

10 கருத்துகள்:

  1. அருமையான கவிதை அக்கா !

    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  2. இடமற்று அழிக்கப்படும்
    குறுந்தகவல்களாய்
    இன்றைய காதலும்., நட்பும்.

    சேகரித்து வைத்த கடித பொக்கிஷ காலம் போய் இடமற்று அழிக்கப்படும் தற்காலம்..

    சபாஷ்..

    பதிலளிநீக்கு
  3. //இடமற்று அழிக்கப்படும்
    குறுந்தகவல்களாய்
    இன்றைய காதலும்., நட்பும். //

    அருமையான உதாரணம்.
    பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை ....
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
    ரெவெரி...

    பதிலளிநீக்கு
  5. கடிதங்களின் காலத்துக்குத் திரும்பிட மனம் ஏங்குகிறது. சிறப்பான கவிதை.

    பதிலளிநீக்கு
  6. நன்றி கூத்தாடி., ராஜா., யாழினி., ரிஷபன்., கோபால் சார்., ரெவெரி., அக்பர்., ராமலெக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...