எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 ஜனவரி, 2011

நீர்க்குமிழ்கள்.. இதய பலூன்..

1. நீர்க்குமிழ்கள்..:-*************************

அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அரசில் முப்பத்து மூன்று...

எல்லாம் சமரசம்..
உரத்துப் பேசவும்..
உள்ள(த்)தை எழுதவும்..


குமிழ்களின் வாழ்நாள்
ஒன்றோடொன்று
மோதும் வரை...

காற்று அனுமதிக்கும் வரை..
வெளிப்பொருள் உறுத்தும் வரை..

ஒப்பீட்டுச் சுதந்திரம்..
ஒவ்வாத கருத்துக்களோடு..
வரையப்பட்ட விட்டம்..

கட்டியமாடாய்.,
கயிற்றோடு சுற்றி..
கட்டவிழ்க்க முடியாத
கட்டுக்களோடு..
========================================

2. இதய பலூன்..:-
*************************

என் இதய பலூனைப்
பிடித்தலைகிறாய்..

உயரப் பறக்க விழையுமதைக்
கைப்பிடிக்குள் அடக்கி..

பட்டத்தைப் போல்
பிடித்திழுத்துக் கொண்டு..

கேளிக்கைகள்., போட்டிகள்.,
கூச்சல்கள் முடித்து..

ஓரமாய்ப் போட்டுவிட்டு
ஓய்ந்து உறங்குகிறாய்..

உன்னைத் தாலாட்டும்
விசிறிக் காற்றில்
தடுமாறி விழுந்து..

உன் கேசக் குழலாய்
தத்தித் தத்திச் சுருங்கியவாறே
ஒரு மூலையில் நான்..

உன் ரேகை படர்ந்த
லாலிபாப்பின்
முத்தப் பிசுக்கோடு..

டிஸ்கி:- நீர்க்குமிழ்கள்., இதய பலூன் இந்த இரண்டு கவிதைகளும் டிசம்பர் 27., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளன... நன்றி திண்ணை..:))

15 கருத்துகள்:

  1. எந்த குழந்தையின் பலூன் கவிதையானது. அற்புதம்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கவிதைகளை திண்ணையிலும், உயிரோசையிலும் தொடர்ந்து வாசித்து வருகிறேன், இனி உங்கள் வலைப்பூவிலும், வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. இரண்டாம் கவிதையே என்னை வெகுவாக கவர்ந்தது... பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. இரண்டாவது நல்லா இருக்கு அக்கா...

    பதிலளிநீக்கு
  6. முத்தப் பிசுக்கோடு இதய பலூன்.... அருமை.

    பதிலளிநீக்கு
  7. அசத்தல்ங்க.. கலர்ஃபுல் குமிழ்களும், பலூனும்.

    பதிலளிநீக்கு
  8. இந்தவார திண்ணையிலும்... வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. நன்றி ரமேஷ்., கோநா., கருணாகரன்., விஜய்., வினோ., ராமலெக்ஷ்மி., குமார்., கோபால்., ஸ்ரீராம்., சாரல்., ஸாதிகா., கோநா., சசிகுமார்

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...