எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஜனவரி, 2011

ஒளிதல்., பழசு., மாமிசக் கடை..

1. ஒளிதல்..
***************

எதிர் வீட்டு புஜ்ஜு
முந்தானை மூடி முட்டாச்சு..

பக்கத்து வீட்டு பாப்பு
திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து..


ரெண்டும் சென்ற பின்
முந்தானையும் திரையும்
ஒளிய இடமில்லாமல்..
==============================

2. பழசு..:-
***********

காலம் துவைக்கும்
கிழமைத் துணிகள்..
உரிந்து விழுந்தும்
சாயம் போகாமல்..
அதே முகப்பு..
அதே பட்டாலை..
அதே ஆல்வீடு..
அதே சுவற்றலமாரி..
அதே கண்ணாடி..
ஆற்றிலொரு கால்..
சேற்றிலொரு கால்..
விளையாட்டாய் நரை..
ஐஸ்பால்., டப்பாவாய்
முதுகிலடிக்காமல்
முகத்தில் அடித்தது
சுருக்கங்களுடன்
அவுட்டான நானாய்..

==========================

3. மாமிசக் கடை ..:-
*****************************

முதிர் ஆடுகள் சில..
இளங்கோழிகள் பல..
அபூர்வமாய்
புறாவும் ., முயலும்.,

எலியும்., பூனையும்.,
காகமும்., உடும்பும் கூட
உணவாகும் நரர்க்கு..

ரத்தம் தெறிக்க
வெட்டுப்படவே
சுயமற்றுப் பிறந்த
அப்பிராணிகள்..

சகதித் துணுக்காய்த்
தேய்த்தும் சத்தம்
அடங்காத
பூட்ஸும் துப்பாக்கியும்..

வெட்டப்படுவதும்.,
விற்கப்படுவதும்.,
சந்தைப் பொருளாவதும் குறித்து
ஏதும் செய்ய இயலாமல்..

டிஸ்கி:- ஒளிதல்., பழசு., மாமிசக் கடை இந்த மூன்று கவிதைகளும் ஜனவரி 2 ., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளன..

16 கருத்துகள்:

  1. ரெண்டும் சென்ற பின்
    முந்தானையும் திரையும்
    ஒளிய இடமில்லாமல்..]]

    அழகு ...

    பதிலளிநீக்கு
  2. கவிதை எழுதும் போது இரண்டு நாட்கள் ஊற போட்டு வைத்து மறுபடியும் படித்து பார்த்தால் சில மாறுதல்களை உருவாக்க முடியும். சில சமயம் உங்களே பல ஆச்சரியங்களை உருவாக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அக்கா... மூணாவது கவிதை படிச்சுட்டு, வெஜிட்டரியன் ஆக்கும் முயற்சி....

    பதிலளிநீக்கு
  4. புறாவும் முயலும்கூடவா.. ஐயோ :-(


    அழகுக்கவிதைகள்..

    பதிலளிநீக்கு
  5. தேனக்கா...வரவர உங்கள் கவிதைகள் அழகு கூடிக்கொண்டே போகிறது !

    பதிலளிநீக்கு
  6. மூன்றாவது கவிதை மிகவும் அருமை மேடம்...

    பதிலளிநீக்கு
  7. மூன்றுமே சூப்பர் தேனக்கா! :)

    பதிலளிநீக்கு
  8. kavithaikalகவிதைகள் 3ம் கலக்கல்தான். ஏதாவது இமேஜ் போட்டா இன்னும் நல்லாருக்குமே.. அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல்....

    பதிலளிநீக்கு
  9. மூன்று கவிதைகளும் நன்று தேனம்மை.

    பதிலளிநீக்கு
  10. பழசு கவிதை மிகப் பிரமாதமாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. நன்றி ராம்ஜி., ஜமால்., ஜோதிஜி., சித்ரா., சாரல்., மேனகா., அக்பர்., ஹேமா., பிரபா., கலாநேசன்., பாலாஜி., செந்தில் குமார்., ராமலெக்ஷ்மி., ராஜா

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...