எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 ஜனவரி, 2011

பிழைத்த சிலிர்ப்பு..வெளியுலக உயிர்மூச்சு., ஓவியங்கள்..

1. பிழைத்த சிலிர்ப்பு:-
*****************************

வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின்
நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்..

ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு
படுக்கை விரிப்புக்கள் தினம்..

அறை மணத்திகள் தொடர்ந்து
ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள்..


லிக்விட் சோப்புகளால் உடல் துடைத்து
பீட்டாடையீன் வாசத்தோடு..

ஆபரேஷன் தழும்புகள்
பூரான் தடிப்பாய்..

ஆண்டி பயாடிக்குகள் சுமந்து
கை துளைத்த ஊசி ஓட்டையை

கடைசியாய்த் திறக்கும் போது
பஞ்சிட்டும் குளிர்கிறது..

பிழைத்த சிலிர்ப்பிலும்
பில்லின் அதிர்விலும்..
================================

2. வெளியுலக உயிர்மூச்சு..
********************************

சிகிச்சைக்கு உட்பட்டவர்களின்
நோவுகள் எல்லாம்
காத்திருப்பவர் முகத்தில்
ரேகைகளாய்ப் படிந்து ..

நந்தவன கூட்டமாய்..
பிக்னிக் ஸ்பாட்டாய்
கேட்டது கிடைக்கும் ஷாப்பிங் மாலாய்..
ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்ரிகளும்..

உடல் துடைக்கும் ட்ராலி
உருட்டுபவளின் கரத்தில்
ஓராயிரம் உடல்களின்
நோவுத் துகள்கள்..

கழுவிக் கரைத்தும் போகாமல்
துப்புரவுப் பெண் வீட்டிலும்
அவளின் மருந்து வாடை
கைக்கவசம் அணிந்தும்..

சோர்வுறுவார்களா..
தூங்குவார்களா எனத் தெரியாத
ஷோகேஸ் பொம்மை
சிரிப்பில் மருத்துவர்கள்..

இருபத்திநாலு மணி நேரமும்
எரிகிற விளக்குகளில்
எல்லா கிருமிகளும்., அழுகைகளும்
துக்கங்களும் படிந்து..

மனைவிக்காகக் காத்து
மாதக்கணக்கில் தாத்தா எழுதும்
குறுக்கெழுத்துப் புதிர் ...
கோமாவாய் முடிவுறாமல்..

எப்போதோ நிமிர்ந்து
பார்க்கும் போது வந்து சென்ற
எல்லாரும்., எப்போதும்
பார்ப்பவராய் முறுவலித்து..

எங்கோ வெளியேறும்
திணறல் மூச்சு..
ஏதோ ஒரு கர்ப்பத்தின்
வெளியுலக உயிர்மூச்சாய்..

=================================

3. ஓவியங்கள்..
*****************
அவசியமா.. அலங்காரமா..
விலையுயர் சட்டங்களில்
விநோத ஓவியங்கள்..
உயிர்த் திரவ
பாண்டேஜுகளுடன் உலவும்
என்னை நிகர்த்து..

விரிந்த கிளைகளூடே
கூர்மூக்கு இறக்கைப் பறவை..
இரட்டைக் குணாதிசயமான
முன் பின்னாக
உருவேறிய நானாய்..

நீர்ச்சொட்டு இல்லா
பிரபஞ்சப் பசுமை பருகி.,
ஊசிகளும் தையல்களும்
குறுக்கு நெடுக்காக்கிக் கிழித்த
கோட்டோவியமாய் நான்..

இனம் தெரியா
நிறப் பூவிலிருந்து விழுந்த
தேன் சொட்டொன்று
என் கைப்பக்க ஐவி ட்யூப்பில் சிதறி...
கண் திறக்கும் போதெல்லாம்
இதய பலூனை இயக்கி..
உயிர்ப்பிக்கச் செய்து..

டிஸ்கி :- பிழைத்த சிலிர்ப்பு., வெளியுலக உயிர்மூச்சு., ஓவியங்கள் இந்த மூன்று கவிதைகளும் டிசம்பர் 27. 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

21 கருத்துகள்:

  1. வெளியுலக உயிர்மூச்சு - ஆஸ்பத்தரியின் உள்மூச்சை காட்டின. அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. \\\ஆபரேஷன் தழும்புகள்
    பூரான் தடிப்பாய்..///

    \\\பிழைத்த சிலிர்ப்பிலும்
    பில்லின் அதிர்விலும்..///

    ஆறு மாதங்கள் என் மனைவியின் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்காக உடனிருந்து அனுபவித்திருக்கிறேன் இவையெல்லாம். சபிக்கப்பட்ட அந்த உலகத்தை கண் முன்னே நிறுத்தி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. அக்கா ..... கலக்குறீங்க....
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. இங்கேயும் ஒரு பில் பார்த்தேன். டெலிவரிக்கு மட்டும் $13500. இன்சுரன்ஸ் கிளேய்ம் 85% தான்!

    பதிலளிநீக்கு
  5. மூன்று கவிதைகளுமே நல்லாருக்குங்கம்மா சூப்பர்...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. //இனம் தெரியா
    நிறப் பூவிலிருந்து விழுந்த
    தேன் சொட்டொன்று
    என் கைப்பக்க ஐவி ட்யூப்பில் சிதறி...
    கண் திறக்கும் போதெல்லாம்
    இதய பலூனை இயக்கி..
    உயிர்ப்பிக்கச் செய்து..//

    மிகவும் ரசித்த வரிகள்....

    பதிலளிநீக்கு
  7. முத்தான மூன்று கவிதையை வாசிச்சு முடிச்சிட்டேன்

    பதிலளிநீக்கு
  8. திண்ணையிலேயே வாசித்தேன். மூன்றும் நன்று. முதல் இரண்டும் மிகப் பிடித்தன. வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப நல்லா இருக்கு தேனக்கா! ஆஸ்பத்திரி வாசம் நினைவுல வந்துட்டு போகுது..

    பதிலளிநீக்கு
  10. //நந்தவன கூட்டமாய்..
    பிக்னிக் ஸ்பாட்டாய்
    கேட்டது கிடைக்கும் ஷாப்பிங் மாலாய்..
    ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்ரிகளும்..//

    நீங்கள் சொல்வது உண்மை. அப்படித்தான் இருக்கிறது ஆஸ்பத்ரிகள்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்து கவிதைகளும் அருமை அக்கா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. சோர்வுறுவார்களா..
    தூங்குவார்களா எனத் தெரியாத
    ஷோகேஸ் பொம்மை
    சிரிப்பில் மருத்துவர்கள்..//
    உண்மைதான் கடுமையான உழைப்பு.

    பதிலளிநீக்கு
  13. ஆஸ்பத்திரி நெடியுடன் கவிதைகள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  14. ஆங்கில வார்த்தைகள் தொலைந்து போனால் பாதிக் கவிதைகள் நின்றுவிடுமோ!!!?

    பதிலளிநீக்கு
  15. நன்றி ரமேஷ்., சிவகுமாரன் ( அப்படி்யா. என்ன ஆச்சு சிவகுமாரன்.. இப்போ நலமா அவங்க..??)., நான் யார்., சித்து., நேசன்., ராமு மாமா., மாணவன்., யாதவன்., ராமலெக்ஷ்மி., பாலாஜி., கோமதி., ஆயிஷா., சசி., இனியவன்., விஜய்.,கதிர்

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும.!

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகைக்கும், ஒருமித்த கருத்திட்டமைக்கும் நன்றி!

    அவன் சரியில்லை!, இவன் சரியில்லை! யாரும் சரியில்லை?

    சரி நாம் என்ன செய்தோம்?.., யாராவது நல்லவன்(அவதார புருஷன்) வரமாட்டானா? நமக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண.., ஏன்?

    யாராவது வந்து நல்லது பண்ணனும்..,!

    ஆனா அது நான் இல்ல??? என் புள்ள இல்ல!,

    ஏன் இந்த சுயநலம்??? வக்கிர புத்தி???

    நம்மை போலவே எல்லாரும் சிந்திப்பதால்,

    நாட்டில் நல்லவன் எவனும் அரசியலுக்கும் வரதில்லை,

    நல்லதும் பண்றதில்லை!

    விளைவு?????????????????????????.

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும்!


    இனி நம் அடுத்த தலைமுறையின் நலன் காக்க..,

    சிறு துளி பெருவெள்ளம்!

    எதையும் நம்மிலிருந்து துவக்குவோம்!

    வாருங்கள்! கரம் சேருங்கள்!

    நல்ல எண்ணங்களால், எழுத்தால், சிந்தனையால், சீரிய செயலால்..,

    தூய்மையாக்கப் பட வேண்டியது நிறைய உள்ளது..,

    வலைத்தளம் முதல்... வடகோடி இமயம் வரை!!!

    வாய்ப்புகள் நம்மை தேடி வராது., நாம் தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும்!

    இனிதே துவங்கியுள்ள இந்த சீரமைப்பு பயணம் சிறப்பாய் தொடர ..,

    தங்களின் நல் ஆதரவும், முயற்சியும், சிந்தனையும், செயலும் வலு சேர்க்கட்டும்..,!!!

    நன்றியுடன், உங்கள் அன்பு சகோதரன்

    சாய் கோகுலகிருஷ்ணா!

    பதிலளிநீக்கு
  18. நிச்சயம் குரல் கொடுப்போம் சாய் கோகுல கிருஷ்ணா,, நன்றி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...