சனி, 31 ஜூலை, 2010

அன்பின் மாலா...

அன்பின் மாலா..
அணையா விளக்கே..

செம்பருத்தியில் பூத்த சிகப்பழகி...
செம்மாதுளை பிளந்த சிரிப்பழகி...

மலைகளின் ராணியிடமிருந்து
விடைபெற்றுவந்த மகாராணி..

என் கவிதைகளின் ரசிகையே..
கவிதையாய் ஆனவளே..

மலரும் நினைவுகளில் உன்
மலர்ந்த சிரிப்பு மட்டுமே..

எங்கு சென்றாலும் வந்து என்னை
முன்பிருந்து வாழ்த்தியவளே..

சிரிப்பானைப் போட்டுவிட்டு
சிரிக்க வைத்து மகிழ்ந்தவளே..

என் பயணம் சிறக்க வாழ்த்தி
உன் பயணம் முடித்துக் கொண்டாய்..

காலடி வைத்தபோதே
காலனோடு போனாயோ...

ப்ரயாணம் என்றால் ப்ரியம் உனக்கு..
மீளாப் பயணத்தில் என்னை விட்டு..

வருவதாக சொன்னாயே..
விழி மலரக் காத்திருந்தேன்..

பிச்சியாக்கிச் சென்றாயே..
பித்துப் பிடித்து நின்றேன்..

பாமாலை புனைந்ததுண்டு
இன்று உனக்காய் பூமாலையும்....

புனர்ஜென்மம் எடுத்தாலும்..
உன் புன்னகையோடே வா..

இறைவன் அடி சேர்ந்த என்னவளே..
இனி வரும் பிறப்பிலும் என் தோழியாகவே வா..

டிஸ்கி:- என் அன்புத் தோழி மாலாவைப் பற்றி
உண்மைத்தமிழனின் பதிவு இங்கே..

வெள்ளி, 30 ஜூலை, 2010

ஐந்தொகை - 3

*கர்ப்பக்கிரகத்துள்
பல்லியும் கரப்பானும்
உணவுப் போராட்டத்திலும்
உயிர்ப் போராட்டத்திலும்...

*யார் வரவுக்காக
இல்லாவிட்டாலும்
வாசலில் தினம் ஒரு கோலம்..

*தன் பசிக்கே
சோறு கிடைக்காத காக்கைகள்
விருந்தாளி வரவுக்குக் கரைவதாய்..

* பெயர்களில் எல்லாம்
ஒளிந்து கொண்டு
சாதி மதங்களின் அடையாளம்...

*எழுதி எழுதி இறக்கிய
சுமைகள் எல்லாம்
எப்போதாவது பார்க்கும் போது
ஏக்கத்துக்கு உரியதாகவும்..
எள்ளலுக்கு உரியதாகவும்..

இந்த கவிதை இளமை விகடனில்
26.7 2010 இல் வெளி வந்துள்ளது...

புதன், 21 ஜூலை, 2010

முகம்......

கார்பனும் ஹைட்ரனுமான மூலக்கூறின் கலவை தானே உனது முகமும் என்றது எனது அகந்தை... மென்மையாய் அழகாய்., ஓராயிரம் அல்ல லட்சம் கவிதைகள் எழுதலாம் என்றது மனம்..ஒரு ஒளியைச் சிந்தி ., பூவாய் விரிந்து., குழந்தையைப் போலானதாய்..

சாயங்கால மஞ்சள் கிரணமாக., காலை நேர இசைவகுப்பின் ஒலிக்குறிப்பாக.,இரவின் தண்ணென்ற பால் ஒளியாக ஒரு தீபத்தை ஏந்தி இருக்கிறது உன் முகம்.. சமயத்தில் கனிவாகவும்.. சமயத்தில் உக்கிரமாகவும்..

வெடித்துச் சிதறும் ஆவியைப் போல பீரிட்டு எழுகிறது எண்ணம் அவ்வப்போது..முழுதும் அடங்கும் வரை உஷ்ணமாய்.......டால்ஃபினின் அசைவைப் போலப் புரட்டிப் போடுகிறது ஞாபகங்கள்.. இரு கைகளாலும் ஏந்தி உச்சி முகர்ந்து அருகே காணும் ஆவல் அடித்துக் கொல்கிறது திடீர் மழைபோல்.. நினைக்கும் போதெல்லாம் பக்கம் சூழ்கிறது உனதான வாசனை..

மரக்கரங்கள் வழி மழை வழிவதாய் என் கைகள் வழி உன் மூச்சு வழிவதுகூட உணர்கிறேன்..எத்தனை நூறு முகங்கள் பார்த்திருந்தாலும் திரும்பத் திரும்ப வரும் ஒற்றை முகம்.. டாட்டூவாய் பச்சை குத்தி..

பெரு நெருப்புப் பிடித்த காடொன்றின் செவ்வண்ணமாய் ஜொலிக்கிறது உன் முகம்.. சருகுகளும் சாம்பலும் அற்று எரியும் மரங்களாய் நான்..

மழை நின்ற மரத்திலிருந்து தெறிக்கும் சொட்டாய் உன் எண்ணச் சிதறல்கள்..ஒவ்வொரு சொட்டும் கிரீடம் சூட்டுவது போல் காதல் சூடுகிறது மனசு..

கூடு பாய்ந்தது உன் அழகு காந்தமாய் என் மனதில்.. தென் துருவமும் வடதுருவமும் சுமந்து அலைகிறேன்..இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்..
சவலைப் பிள்ளையின் இருமலாயும் ., ஓட்டைப் பானையின் நீராயும் போகும் இடமெல்லாம் தொடந்து கொண்டிருந்தாலும் மிச்சமும் இருக்கிறது..தீராமல்..

அலையடித்துக் கிடக்கும் தடுப்புப் பாறையாய் நான்.. விடாமல் மோதிக்கொண்டே உன் ஞாபகம்.... தனக்கான வலை பின்னி தானே சிக்கிய சிலந்தியாய் நான்..

விளைந்து முற்றிய வயலாய் நீ செழிப்பமாய்.. உன்னைக் காவல் காக்கும் சோளக் கொல்லை பொம்மையாய் நான்..

மனக் கூடாரத்துள் ஒட்டகமாய் நுழைந்தது உன்முகம்.., பின் என்னை வெளித்தள்ளி.. உன் தவறை எல்லாம் காரணம் காட்டி தூக்கி எறிய முயல்கிறேன்.. கைகளில் ஒட்டிக் கொண்டு போகமறுக்கிறது அது.. உன் தவறையெல்லாம் உதறி.. வாரி்யணைத்துப் போர்த்துப் படுக்கிறேன் எனக்கான கணப்பாய்.... நிம்மதியாய்..

உறைந்து கிடக்கும் பனிப்பாறையின் கீழ் மீனாய் உலவித் திரிகிறேன்.. கட்டமாய் வெட்டி குத்தீட்டியாய்ப் பாய்ந்து என்னை உயிரோடு பிடிக்கிறது உன் பார்வை..

சேணம் அணிந்து இலக்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் நான்.. எல்லாவற்றையும் பிடுங்கிப் போட்டு மேகத்துள் பாய்ச்சலெடுக்க வைக்கிறது உன் சிரிப்பு..

என்னை நோக்கியதான உன் புன்னகையின் இனிய குழப்பத்தில் நான்.. கசாட்டாவின் முந்திரியைப் போன்றதான மூக்கு என்னை தொடச் சொல்கிறது.. டென்சிங்கின் சிகரமாய்.. என்னால் எட்ட முடியாமல்...

ஒரு குழந்தையாயும் தாயாயும் உணர்ந்திருந்தேன் என்னை.. ஒரு குமரியாயும் நாண வைத்துவிட்டாய்.. எல்லோரும் உடனிருந்த போது நீயில்லை.. யாருமற்ற பொழுதில் நீ மட்டும் என்னுடன் இருந்தாய்....

என் உடலும் உடலற்றும் உலாவித் திரிகிறேன் உன் முகம் என்ற பிரபஞ்சத்துள் .................

திங்கள், 19 ஜூலை, 2010

கசியும் மின்சாரம்...

பஞ்சாமிர்தமும் தேனுமாய்
வழிகிறது உன் சிரிப்பு..
திகைத்து நிற்கும்
தெய்வச்சிலையாய் நான்..

பூக்களின் இதழ்கள் உண்டு..
இதழ்களில் பூக்கள்
விரியப் பார்த்தது உன்னிடம்தான்..

கன்னக் குழியின் கள்ளச் சிரிப்பு
கைப்பிடி பதித்த .,கற்கள் ஜொலிக்கும் .,
குறுவாளாய் மினுமினுக்க..

ஐஸ்கட்டியும் ..
நெருப்புத்துண்டுமாய்..
ஒரு சேர விழுங்கி.,

உன் சிரிப்புக்கரையான்
அரித்த புத்தகமாய்
என் கண்கள்..

திராவகம் போலும்
இனிப்பாயும் உன் சிரிப்பு...
தெறித்தவுடன் தெரியாமல்
போய்விட்டன என் கண்கள்..

உள்ளம் கிடுகிடுக்க.,
உதடு கிறுகிறுக்க..
உயிர் பறிக்கும்
உன்னதம் இந்த சன்னதம்..

உன் கோடி சூர்யப்
பிரகாசச் சிரிப்பில்
காணாமல் போன
கோளாய் நான்..

ஹை வோல்டேஜ் மின்சாரமாய்..
கசிந்து கொண்டிருந்தது உன் சிரிப்பு..
என் கண்களால் தொட்ட பின்னும்
கருகாமல் உயிர்த்து..
பற்றியெரியும் ஹீலியப் பந்தாய்..

படமெடுத்து ஆடும் நாகமாய்ப்
பரந்து விரிகிறது உன் சிரிப்பு..
கொத்துப் படக் காத்துக்
காதலுடன் நான்...

கொத்தி விடு ..
செத்துவிடுகிறேன்... அல்லது
உயிர்த்தெழுகிறேன்..

வெள்ளி, 16 ஜூலை, 2010

என் நன்றி அனைவருக்கும்.. வாழ்க வளமுடன்..! நலமுடன்..!!







என் வலைத்தளத்தில் வாழ்த்திய வானம் பாடி பாலா சார்.. வெற்றி., கதிர் அப்புறம் என் வலைத்தளத்திற்கு வந்து ஃபாலொயராகி., வாசித்து ஓட்டுக்கள் போட்டு என்னை ஊக்குவிக்கும் அனைத்து வலையுலக நட்புக்களுக்கும் ., தோழமைகளுக்கும் நன்றி..
ஆர்குட்., யாஹூ மற்றும் ஜி மெயிலில் வாழ்த்திய பிரபு., தன்வி கன்னா., ராம்ஜி., அஹமத்., கார்த்திக்., ஜமால்., மயில் ராவணன்., வெங்கி., சுப்பையா ரவி., சிவாஜி சங்கர்., ரவிகுமார்., புலவன் புலிகேசி., சொல்லத்தான் நினைக்கிறேன் ராகுல்., அருண்., ஆனந்த் ராய்., வி ஏ பாண்டியன்., திவ்யா ஹரி., செல்வகுமார்.. வெற்றி., பொன் காசிராஜன்., சதீஷ் மூர்த்தி., டொமினிக் சேவியோ., சந்திர குமார்., தியாகராஜன் வெங்கட்ராமன்., செந்தில் எக்ஸ்டஸி செந்தில்., மீரான் டெனி சேட்யவான்., இளய தம்பி ப்ரதீபன்., தொர நந்தா., நந்த குமார் காசிநாதன்., சந்திரசேகரன் மகேந்திரன்., தமிழ் செல்வி., வரசித்தி விநாயகர்., பா கிருஷ்ணன்., செல்வா செல்வம்., செந்தில் குமார்., தண்ணீர்மலை சாத்தப்பன்., இஷ்யூ டிக்கட் ட்ராவல்ஸ்.., சித்ர ரஞ்சன் சாருஹாசன்., கலைஞன் பெரியசாமி., அரசு., ராஜ் குமார்., கோபால கிருஷ்ணன்.. மற்றும்...
எனக்கு முதல் மெசேஜ் அனுப்பிய (சிட்னி) ஷாந்தி வின்சென்ட்., ப்ரூனேயில் இருந்து தொலை பேசிய ஜம்மு நா., யூ எஸ்ஸிலிருந்து பேசிய வாணி மல்லிகை .. மறக்க முடியாத அனுபவம்.. எல்லாரும் முகப் புத்தகத் தோழிகள்.. மற்றும்..
முகப்புத்தகத்தில் வாழ்த்திய கார்த்திக் சேதுபதிச் சீமை., நிஷா சிவகுமார்., நௌஷத் காதர்., கனக சபை., ஜம்மு னா., செல்வ வீர ராகவன்., ஜெயராஜ் ஜெயராமன்., விஜய்., பிரின்ஸ் ராஜன், ஸ்வாமி சத்யன்., கவாஸ்கர் செல்வம்., தமிழ் செல்வி., மனோஹரன் முருகையன்., சிவ சங்கரன்., வெற்றி., சரவணன் சென்னை., வேலு குழந்தை வேலன்., ப்ரோட்டோ ஃபெர்னாண்டோ., கமலக் கண்ணன்., அப்துல் ரஹிம்., சுரேஷ் சந்திரசேகரன்., அமுதா தமிழ்., மைதிலி பாளையன்., ஆனந்தி சுப்பையா., மணி பாரதி., மொஹமத் தஸ்லீம் தாச்சி., விஷ்ணு ராஜன் ., இளங்கோவன் பாலகிருஷ்ணன்.,, தமிழன் நீல மேகம்., கலைவாணி ஜான்சன்., கலா ராணி., வாணி மல்லிகை., பூவலூர் ஸ்ரீஜி., தாரிணி தமிழ்., பாலா சத்யா., பி ஜி சரவணன்., விமலாதித்தன் விமலனாதன்., ஷண்முகம் வதனா., ரங்கா சாதுரியன்., சூர்யா சுரேஷ்., கயல்விழி லெக்ஷ்மணன்., அன்புடன் பொன்னி வளவன்., அனு அஷோக்., ஜெயா நல்லப்பன்., ஜி வினோத் குமார்., மயோ மனோ., மஞ்சுபாஷிணி ஜெகதனாதன்., மதுமிதா ராஜா., தமிழ் கே. செந்தில்., ராகவன் கிருஷ்ணமாச்சாரி., ராஜி கிருஷ்., ஜி எம் . குமார்., சக்தி சக்தி தாசன்., கோபினாத் நா., எம் ஏ ஷண் முகன்., கதிர்வேலு துரை ரத்னம்., கோபிநாத் முத்துசாமி., அ. ம். நூவைஸ் முஹம்மத்., ராதிகா கதிர்காமதாசன்., அஜயன் பாலா., உஷா மஹாராணி., அஷரஃப் மொஹம்மத்., ஜெகதீஷ் சந்திரா., ஜீவானந்தன்., இர்ஷாத் ஜமீல்., செல்வி செல்விர்., ராம் முருகேஷ்., ஆண்ட்ரூ அனுஷானே., கிருஷ்ணகுமார் வி ரானே., ஷாந்தி வின்சென்ட்,., லெக்ஷ்மி நாராயணன்., செந்தில் சுப்ரமணியன்., மைதிலி தேவி., பழனியப்பன் சிதம்பரநாதன் ராஜபாளையம்., கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., ஆந்தை குமார்., அங்கையர்கண்ணி சிவராஜ்., வள்ளிதாசன்., நேச மித்திரன்., வின்செண்ட் ராய்., பிஆர் ராஜன்., நாக ராஜன்., சிவயோகி ஆறுமுகம்., ஜெயராஜ் பாண்டியன்., முரளி பாய்., கிருஷ்ணன் பரத்., மணிவண்ணன்., அஞ்சலி கிருபால்., பாலா பாலா கோவிந்த ராஜ்., முருகன் லோகநாதன்., ஷங்கர் ஜீ., சிதம்பரநாதன் ராஜேந்திரன்., ராமநாதன் அண்ணாமலை., விஜி ராம்., ராஜ் குமார்., அரவிந்த் ரத்னவேல்., என் எம் எஸ் கந்தன் நாமா., பார்த்திபன் ஷண்முகம்., ஆண்டனி சாந்தகுமார்., காவேரி கணேஷ்., வினோத் கௌதம்., யுவராஜன் ராஜன்., ப்ரேமலதா கோவிந்தராஜு., ஈரோட் கதிர்., அருள் கணேஷ்., நந்தா கந்தசாமி., ரோஸ்விக்., கடற்கரய்., ஷிவ சிவராசன்., அரசு கண்ணன்., மாலைமலர் தமிழ்., பூங்கோதை ரவிச்சந்திரன்., காஸ் சைலுக்., ஜனா த பாட் கை., குனதி சம்பந்தர்., ராஜி கிருஷ்., குகதாசன் குகதாசன்., சௌம்யநாராயணன் சாரநாதன்., ஸ்வாதி ஸ்வாமி., ஜெயசெல்வின் செல்லையா., ஆறுமுகம் விக்கி., மோஹன் ராம்., நட்புடன் ஜமால்., பாபு பழமலை., செந்தில் குமார்., ஓசை செல்லா., பிரியா விஜயராகவன்., கோடீஸ்வரன்., சிவ குமார்., அகில் ஜீவா., காசி கிருஷ்ணா., ராஜேந்திர குமார் கந்தசாமி., மீனா ராம்., தீப் ஷா., சின்ன கண்ணன்., நளினி ரத்னராஜா., சிவராஜ் தேவராஜ்., தமிழ் செல்வி., அறிவழகன் கைவல்யம்., காயத்ரி ராமசுப்ரமணியன்., யுவராஜ் நீலகண்டன்., சின்னதுரை வரதராஜா., கா வா., ரஞ்சித் வசந்த்., கோவை பாலா., நரேன் கேரை., சாந்தினீ வரதராஜன்., ஏஞ்சல் நான்சி., ஜெய குமார்., பால கணேசன்., ஜெய சந்திரன்., தர்ஷனா தேவர்., பாரி செழியன்., தமிழ் செல்வன் எத்திராஜ்., மாலா ஜெயராம்., சுகுமார் ராமதாஸ்., ராஜீவ் ஜோசப் சென்னை., தியாகராஜா மோகன்., கிருஷ்ண குமார்., ஆசிஃப் மீரான்., கதிரவன் தங்க கதிரவன்., கார்டூனிஸ்ட் பாலா., ஜெயநிதி கிருஷ்ணாநாதன்., நியாஸ் மொஹம்மத்., ஜெய குமார்., ஃப்ளோரின் ரோஜில்., ராமலெக்ஷ்மி ராஜன்., ஷைலு ராஜேந்திரன்., கோபால் மணிகண்டன்., ஜாகோ மனோ., வசந்தகுமார் க்ராஃபிக் டிசைனர்., டி கே நவநீதன்., தமிழ் மணவாளன்., கார்த்திக் அருண்., அழகிரி என்ஃபீல்டர்., சுந்தர வதனம்., மோசஸ் பால் ராஜ் சிங்., ஹசீம் இப்ராஹிம்., ஆர் கே குரு., ராமமூர்த்தி பொன்னுசாமி., இளங்கோ எம் மோஹன கிருஷ்ணன்., பத்ம குமார்., மோகன சுந்தரம்., ரிஷான் செரீஃப்., ஷம்மி முத்துவேல்., செந்தில் நாதன்., சபாபதி சபாபதி சபாபதி., ஐரீன் ரோசன்ஸ்டிக்., ஞானதாஸ் ஜுலியஸ்., மேனகா சத்யா., பத்மநாதன் நல்லையா., மேரி மார்கரெட்., ஷெர் ஜான்., ஜெயராஜ் பாண்டியன்., சமுத்ர பாண்டியன்., சந்திரா தங்கராஜ்., செல்வகணபதி அறிவுநிதி., மகுடபதி கோவிந்தராஜ்., முத்து வேலு., சேரன் பாண்டியன்., தமிழ் அமுதன்., அஜயன் பாலா., நடராஜன் ஆதிலெச்சுமி., பீனா கிருபாகரன்., உமா த பெஸ்ட்., ரிச்சி ரிச்சர்ட்ஸன்., பெனிட்டா அமோல்., கலாம் காதிர்., பாலு முனியசாமி., வேடியப்பன்., ரசிகன் சதீஷ்., ராமகிரு்ஷ்ணன் ராமகிருஷ்ணன்., பொன் வெங்கட். தமிழ் வெங்கட்., லலிதா முரளி, நாஸீர் ஹுசைன்., அண்ணா கண்ணன்., பொன்னையா பெரியசாமி., தினேஷ் பாபு., சுந்தர் மதுரை துரை., அப்துல் காதர் காத்., மைதின் யூசுஃப்., முஹம்மத் இலியாஸ் கான்., ரைட்டர் கவிமதி., ஹரிதாஸ் அரி., திஜோ மாஜிக் மந்தர்., பி கே கே குஞ்சுமோன்., காஜா மொஹைதீன்., திரிமூர்த்தி எஸ்ஜி., விஸ்டாராஜ் குமார்., முத்துராம் ஆர் எம்., குறள் பாரதி., சீதா அனிதா ராஜன்., சரவணன் செல்வராஜ்., செந்து விஜே., வினிதா சந்திரன்., அன்னா சௌபாக்கியம் முனுசாமி., இசபெல்லா லோவரோ.., சந்திரா விசுமௌலி., வன்னி தங்கம் ராதா., மொஹம்மத் ரஃபீக் பீர்., காஜா மொஹைதீன்., திலகவதி வி பிரபாகர்., ராஜு இண்டியா கே.,.. மற்றும்
என் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக்கி என்னை தனதாக்கிக் கொண்ட அன்பு அம்மு வாணி ., தம்பி பாபு மற்றும் என் கை ஒப்பத்தை ப்ரொபைல் பிக்சராக்கிய ஸ்ரீஜி., ம்ம்ம் என்ன சொல்ல..??
க்ரீன் பார்க்கில் முதல் நாள் விருந்து கொடுத்த கயல்., அன்பு ., செல்வா., வசு., வெற்றி., ம்ம்ம் சொல்ல வார்த்தையில்லை என்னிடம்..
என்ன தவம் செய்தேன் உங்கள் அனைவரையும் பெற..?..
நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது.. அன்பும் அனைத்துமாய் வாழ்வதே தகும்...

வியாழன், 15 ஜூலை, 2010

எழுத்தாளர் என்றொரு இனம்..

சமூகத்தால் மட்டுமல்ல..
குடும்பத்தாலும் ஒதுக்கி
வைக்கப்படும் இனம்..

வாழ்க்கையை வாசிக்கத்
தெரிந்த அளவு பொருட்களை
நேசிக்கத் தெரியாமல்,

சுஜாதாவோ., தஸ்தாவ்யெஸ்கியோ.,
பேரும் புகழும் சேர்த்து
பணம் சேர்க்காமல்..

சேர்க்கத் தெரிந்தவன்
வியாபாரியாய்...
பட்டம் சூட்டி இறக்கப்பட்டு.,

சண்டையும் சச்சரவும்
பரம்பரைச் சொத்து...
தீராமல்.. வலைத்தளம் வரை..

எழுத்தாணியின் கூர் நாவு
இன்று வலைத்தளத்தில்
வார்த்தை வாளாய்..

கனவுகளை சூலுற்று.,
கருத்துக்களை பிரசவித்து.,
காதலுணர்வைக் காதலித்து..
கொடும் நெருப்பாயும் உமிழ்ந்து...

வார்த்தை விளையாட்டுப் பயின்று
வாழ்க்கை விளையாட்டில் முயன்று..
வெற்றிக்கு ஏங்கி..

யாமார்க்கும் குடியல்லோம்...
எவர்க்கும் அஞ்சோம்..
எழுத்திருக்கும் வரை
உயிர்த்திருப்போம்..

டிஸ்கி:- 1. இன்று நான் வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.. சும்மாவின் முதல் பிறந்த நாள் மக்காஸ்.. உங்க ஆசீர்வாதத்தை அள்ளி வழங்குங்க..

டிஸ்கி:- நேற்று என் பிறந்த நாளில் என்னை ஆர்குட்டில்., ஜி மெயிலில்., யாஹூவில்., முகபுத்தகத்தில் வாழ்த்திய (400 பேருக்கும் மற்றும் வாழ்த்த நினைத்த மிச்ச 800 பேருக்கும் ) ., என் புகைப்படத்தை தங்கள் ப்ரொபைல் படமாக்கிய அன்பு அம்மு., வாணி., பாபுவுக்கும்.,(அமுதா தமிழ்., வாணி மல்லிகை, பாபு பழமலை) ., என் ஒப்புமையை ப்ரொபைல் படமாக்கிய பூவலூர் ஸ்ரீஜிக்கும் ..ஸ்பெஷல் விருந்து கொடுத்த .,கயல்., வசு., செல்வா., அன்பு., வெற்றிக்கும்., புத்தகப் பரிசு கொடுத்த தம்பி வேடியப்பனுக்கும் (டிஸ்கவரி புக் பேலஸ்) ., அன்பு நண்பர் விகடன் பொன். காசிராஜனுக்கும் ., ஸ்பெஷல் கேக் கொடுத்த என் மூத்த மகன் வெங்கட்டுக்கும்., நடு இரவு போன் செய்த என் சின்னப் பையன் சபாவுக்கும்.. போனில் வாழ்த்துப் பாடிய அம்மா., அப்பாவுக்கும்., என் நட்புக்களுக்கு என்னுடன் மதிய விருந்து அளித்த என் அன்புக் கணவருக்கும்.. நன்றி என்ற ஒற்றைச் சொல் போதுமா..?? என் அன்பு அனைத்தும் அனைவரையும் வியாபிப்பது தவிர ...

திங்கள், 12 ஜூலை, 2010

செல்ல நாய்க்குட்டி ...

எஜமானனே..
என் கூடவே இரு..
உனக்காய் பந்து பொறுக்கி வருவேன்..
கால் கவ்வி இழுப்பேன் விளையாட..

உன் கையால் போடும் ரொட்டிக்காகவும்.,
இறைச்சிக்காகவும் பசியுடன்..

உன் உணர்வெல்லாம்..
உணர்கொம்பு இல்லாமலே
உணர்வேன்..கண்பார்த்தே..

உன் வரவில் எவ்வளவு
மகிழ்வெனக்கு..உணர்வாயா..?
உடம்பெல்லாம் சடசடக்கிறது..
குரல் கூட படக்கிறது..

எவ்வளவு நேரம் காத்திருப்பது
இந்த சிலிர்ப்புக்காய்...
சந்தோஷத்தால் காதுகள் விடைக்க..

என் கண்களை உற்றுப்பார்..
நீ காலால் சொல்வதை
நான் வாலால் செய்வேன்..

சங்கிலியில் பிணைத்து
விட்டுவிடாமல் இழுத்துச்செல்..
சுவரொட்டிகளால்
நான் ஈர்க்கப்படாமல்..
கம்பங்களைக் கழிவறையாக்காமல்..

எஜமானனே..
உன் வீட்டில்., உன் வாசலில்
உனக்காக நான்..
என் கூடவே இரு..
உன் செல்ல நாய்க்குட்டி..

சனி, 10 ஜூலை, 2010

கண்ணகியின் துயரம்

வணிகக் குலத்தில் பிறந்த
வனிதைகளை வடித்துப் போடவும்
வாகாய் அடிமைப்படுத்தவும் பழக்கி.,
வணிகம் பழக்காமல்..

வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்..
வாழ்வின் வண்ணம்
அறியக் கிடைக்காமல் செய்ய....

கணிகைக்குலத்து மகளிடம்
கூடையிலேற்றியும் கொண்டு
விடச்சொன்ன சமூகம்..

எரிக்கக் கற்றுத்தந்த காவியம்.,
ஆதியிலேயே எனக்கு
இதுதான் வேண்டும் என
எதிர்க்கக் கற்றுத் தராமல்..

சோகாக்கச் சொன்ன உலகம்
வாகாக்கவில்லையே எதையும்..
வசப்படுத்த..

கணவன்தான் உலகமென்றால்
சுற்றிவரலாம்.. ., சுற்றிவரும்
பக்கமிருந்தால்..

நெருங்கமுடியாத்
தொலைதூரக் கோளாயிராமல்
அணுக்கத்தோடு...

ஒரு தவறே பல தவறாய்
இழுத்துச் செல்ல அனுமதியாமல்..
சேணம் மாட்டி.,

எதற்கு துயரமும்., எரித்தலும்.,
மேற்குச் செல்லலும்.,
கோப ரத்தமும் ., கரிந்த தேசமும்..

வாணிபமும்., வளர் கல்வியும்.,
உத்யோகமும் .,உயர் பதவியும்
தன்னம்பிக்கையின்
தொடு தூரத்தில்தான்..

வசப்படுத்த வேண்டும்
வானத்தை இனியேனும்...
வளமாவோம்., வளப்படுத்துவோம்..
நம்பிக்கையில் கண்ணகிகள்..

அர்ப்பணம்..:- என்னை வேற்றாகவும் சிந்திக்கச் செய்த அன்புத் தோழி/ தங்கை உமா ருத்ரனுக்கு.

வியாழன், 8 ஜூலை, 2010

சாம்பல் நிற விளக்கு

உன்னிலும் என்னிலும்
உறைந்திருந்த சின்னக் குழந்தை
விழித்துக் கொண்டது..
என்னப்பா., என்னம்மாவென்றும்.,
என்னடா ., என்னடியென்றும்.,
இன்னும் போடா., போடியென்றும்..

மஞ்சள் ., பச்சை., ஆரஞ்சு.,
சிவப்பு வெளிச்சமிருக்..
சாம்பலென்றும்.,கறுப்பென்றும் கூட
வெளிச்சம் உண்டு..

வெளிப்படும் கணம்தோறும்.,
மறைவிலும்., அசைந்து.,
ஒளிந்து கிளர்வூட்டவும்..
கிண்டிக் கிளரவும்..
கோபத்திலும் ஒளிர்ந்து
சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..

தங்கம் உரைச்சுச் கல்தேய.,
எடைக்கல் சுமந்து தராசும்
ஒருபக்கம் சாய..

வேதாளம் முதுகில்தான்.
விடுகதைகள் முடிவதாயில்லை..
சேறு சிப்பியின் நீரிலும்..
சாம்பல் நிற விளக்கிலும்..

புதன், 7 ஜூலை, 2010

உப்புறைந்திருக்கும் கடல்

உப்புரசிக் கிடக்கப் போகும்
மீன்கள் துள்ளலாய்..
பவளப்பாறை ., கடற்குதிரை
அயோடின் கரைசலில்..
மூச்சடங்கி முங்குளித்துப்
பழைய கப்பல் துண்டுகள்..
பாட்டன் பூட்டன் காலத்துக்
கிளியாஞ்சட்டிகள்..
யுகயுகமாய் விழுங்கிய
மக்கள் துகள்..
புகார் தனுஷ்கோடி
மிச்ச சொச்சம்..
கொண்டு செல்லும் வழியில்
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்கள்..
அலைகளற்ற இடத்து டால்பின்கள்..
துருவப் பாறைப் பென்குவின்கள்...
விமானங்களும் விண்கோள்களும்
வெடித்து வீசிய வாழ்வுகள்..
ப்ளாஸ்டிக் கழிவுகள்..
பனிமலை கரைந்து..
பாவ அழுக்கு சுமந்து..
சேர்ந்த எச்சங்கள் சேர்த்து..,
கசடான உப்புறைந்த நீர்
அடங்கி அடக்கிக் காத்திருக்கிறது..
எப்போது சுனாமியாகி
எல்லாம் விசிறி எறிவோமென..

திங்கள், 5 ஜூலை, 2010

டாக்டர் கல்லாறு சதீஷ்






தமிழன் என்று சொல்லடா., தலை நிமிர்ந்து நில்லடா.. என்ற வார்த்தை நம் அன்பு நண்பர் கல்லாறு சதீஷுக்கு ரொம்பப் பொருந்தும்..

மொழிக்காக விழியிழந்தவர் தெரியும்... மொழிக்காக பதினெட்டு வயதில் முள்முடி சுமந்தவர் நம் சதீஷ்... அருள்ராசா நாகேஸ்வரன்.. என்ற சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழர்.. இவர் நம்மிடம் பேசப் பேச.. இ்னிமையும்.. நல்லெண்ணங்களும் பொங்குவது இயல்பு.. நேர்மறை எண்ணங்களுக்குச் சொந்தக்காரர்..

செம்மொழி மாநாட்டி்ல் கடல் கடந்த தமிழர்களின் இருப்பும் வாழ்வும் பற்றிப் பேச இந்திய அரசின் விருந்தினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சிறப்புக்கு உரியவர்.. உங்கள் படைப்புகள் உங்கள் முகவரியாக இ்ருந்து உங்கள் புகழ் பரப்பி இங்கு வர காரணமாக அமைந்தது என வைரமுத்து அவர்களால் பாராட்டப்பட்டவர்..
ஒரு செம்மொழி மாநாடு தமிழர்களுக்காக., தமிழ்நாட்டில் நடத்தப்படும் போது தங்களுடைய கருத்துக்களையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு... பங்கேற்றவர் சதீஷ்..
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு., எதிரிகள் என யாரையும் உருவாக்கிக் கொள்ளாமல் எல்லோருடனும் கைகோர்த்துச் செல்லும் நேயம்.. புன்முறுவல்.. பொறுமை.. என இவரிடம் நான் வியந்த பண்புகள் ஏராளம்..

கலைஞரும்., மற்ற கவிஞர்களும்., தமிழின் பெருமக்களும் சூழ்ந்த சபையில் கடல் கடந்த தமிழர்கள் பற்றி மட்டுமல்ல.. கரை கடக்க முடியாத தமிழர்களின் நலம் பற்றியும் அவர்களின் வாழ்வு., இருப்பு ., சுதந்திரம் பற்றியும் எடுத்துச்சொல்லிக் கோரிக்கை விடுத்துள்ளார்..

இரண்டாவது கோரிக்கை. உலகத் தமிழர்களுக்காக ஒரு செம்மொழி மையம் அமைய வேண்டும் என்பது.. இரண்டு கோரிக்கைகளுக்கும் கலைஞர் செவி மடுத்து ஆவன செய்வதாகக் கூறியது மிகுந்த நிறைவளித்ததாகக் கூறுகிறார்..

மதுரையில் விரைவில் செம்மொழி மையம் அமைக்கப்படும் எனக் கலைஞர் உறுதி அளித்ததாகக் கூறி மகிழ்வடைந்தார்.. தமிழ் மொழியால் ஒன்றான நாம். நம் தமிழ்பற்றை.. நம் தாய் நமக்களித்த மொழி்யை.. தமிழ்த்தாயை..மாலை சூட்டி வணங்கவே தாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றதாகக் கூறினார்..

புலம் பெயர்ந்த போது அங்கு உள்செல்லவும் வசிக்கவும் வாழ்வாதாரம் தேடவும் மிகுந்த சிரமத்துக்குள்ளான போதும் தம் மக்கள் தம் தாய்மொழியில் பயிலவும்.. நம் பண்பாடு மறக்காமலிருக்கவும் எடுத்துவரும் பெருமுயற்சிகளையெல்லாம் பகிர்ந்தார் .. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த போது தாம் வசித்து வந்த நாட்டினரே தம்மை வாழ்த்தி வழினுப்பியது தம் தமிழுக்கும் மொழிப்பற்றுக்கும் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறார்..

எதிர்க்கருத்துக்கள் இ்ருக்கலாம் . ஆனால் நல்லகருத்துக்களையே கைக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உடையவர்.. இவரின் பனிப்பாறைகளும் சுடுகின்றன., மற்றும் சொர்க்கங்களும் தண்டிக்கின்றன... என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் திரு வைரமுத்துவால் வெளியிடப் பட்டிருக்கின்றன..

டிஸ்கவரி புக் பேலஸில் சிங்கை வாழ் தமிழர் அன்பு சகோதரர் கோபால் கண்ணன் (மனவிழி சத்ரியன்)., அன்பு நண்பர் விகடன் பொன் . காசிராஜன்.,
அன்பு நண்பர் கல்லாறு சதீஷ் மற்றும் அன்பு சகோதரர் வேடியப்பனும் கலந்து உரையாடியது.மிக இனி்மை.. தமிழுக்கும் அமுதென்று பேர்.. உண்மைதான்.. உயரியவர்களோடு உரையாடினால்..

Lankasri.com ல் நீங்கள் அன்பு நண்பர் கல்லாறு சதீஷின் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் பெறவும்., காப்புறுத்தித் திட்டங்களில் முதலீட்டு ஆலோசகராகராகவும் விளங்குவதைக் காண முடியும்..

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியிலும் இவரின் பேட்டி ஒளிபரப்பாகியது.. தினத்தந்தியிலும் செம்மொழி மாநாட்டில் இவரின் உரை வெளியாகியுள்ளது.

நல்ல எண்ணங்கள் நல்ல எண்ணமுடையோரை ஒன்று சேர்க்கின்றன..
நிச்சயம் விளைவுகளும் நல்லவையாய் அமையும்..

வியாழன், 1 ஜூலை, 2010

ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் சஷிகா., வாணி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன் மற்றும் நான்..

ஹலோ மக்காஸ்.. அதுக்குள்ள அடுத்த மாத லேடீஸ் ஸ்பெஷல் வந்துருச்சு.. நாளும் கிழமையும் பறக்குது மக்காஸ்.. என்னோட நெட் போதை கவிதை வந்து இருக்கு..

இந்த மாதம் நம்ம சஷிகாவோட ஓட்ஸ் கலாகண்ட்டும்., கறிவேப்பிலை சாதமும்., பார்லி பெசரட்டும் சுவைத்துப் பாருங்கப்பா...

வயசாயிருச்சு கை வலி., கண்ணு வலின்னு சொல்றவங்க இணையத்தில் கதை சொல்லும் இனிய பாட்டியைப் படிச்சுப் பாருங்க .... அவங்க பேர் ருக்மணி சேஷசாயி.. மிக இனிமையானவங்க.. என்றும் இளமையானவங்க .. வயசு ஒண்ணும் அதிகமில்லை மக்காஸ் .. 80 ஆகுது.. மனசுக்கு வயசில்லைதானே.. அப்போ சாதனைக்கு.... எல்லையில்லை ..!!!

யங் லேடீஸ் கவிதைப் போட்டிக்கு வந்து குமிஞ்ச கவிதைகள் யம்மா. ..!!
நல்லா எழுது்றாங்க நிறைய பேர் .. சிலது செம்மைப் படுத்தினா அற்புதமா இருக்கும்.. அதுல., வாணி., புனிதா., கவிதா., ஹேமாமாலினி கவிதைகள் அருமை.. வாழ்த்துக்கள்.. இந்த மாதம் இடம் பிடிச்சிட்டாங்க.. அடுத்த மாதம் முயற்சி செய்யுங்கள்.. கண்மணிகளே..

காசு மழை என்ற தலைப்பில போன மாதம் வந்த கேள்விகளுக்கு சித்ரா நாகப்பன் கொடுத்து இருக்குற தீர்வுகளைப் பாருங்க.. இன்னும் உங்க கேள்விகளை எழுதி அனுப்பலாம்.. தொடர்ந்து பதில் அளிக்கத் தயாரா இருக்காங்க..

தொடர்ந்து நிறைய புதுமைகள் செய்து நம்மைப் போன்ற ப்லாக்கர்களை ஊக்குவிக்கும் கிரிஜாம்மாவுக்கு நம் எல்லார் சார்பிலும் நன்றிகள் ...
வாழ்க தமிழ்.. வளர்க.. எழுத்துப்பணி..