எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தீபாவளி கவிதைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி கவிதைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தங்க மகளும் , அந்த வீடும்.

தங்க மகள்.:-


பொன் மகளைப் பூ நிலவைப்
பூமியிலே தந்தோம்
பூத்து விதை காய்த்துக் க(ன்)னியாய்
கனிந்து அவள் நின்றாள்.
கல்வியிலும் கணினியிலும்
சகலகலா வல்லி
கலைகளிலும் கனிவினிலும்
நிகரற்ற தேவி.
தன்னைக்காக்கத் தனக்குத்தானே
எல்லையிட்ட சீதை.
எந்த எல்லை தன்னின் எல்லை
என்றறிந்த சுயம்பு 
எல்லையற்ற அன்பைக் கொண்ட
எல்லைக்காளி அவளே
இருப்பதெல்லாம் மறுக்காத
காமதேனு அவளே.
Related Posts Plugin for WordPress, Blogger...