எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 ஜூன், 2026

பதினொன்றாம் அத்யாயம் இரண்டாவது ஸ்லோகம்

 பதினொன்றாம் அத்யாயம் இரண்டாவது ஸ்லோகம்


    ஆத்மவர்கம் பரித்யஜ்ய

பரவர்கம் ஸமாச்ரயேத் l

    ஸ்வயமேவ லயம் யாதி

ததா ராஜா அன்யதர்மத: ll

 

பொருள்:-

ஆத்மவர்கம் = சொந்த சமூகத்தினர்

பரித்யஜ்ய = விட்டுப் பிரிந்து சென்று

பரவர்கம் = அந்நிய சமூகத்தினர்

ஸமாச்ரயேத் = இணைந்து கொள்ளுதல்

ஸ்வயமேவ = தன் சுய அறநெறியை விட்டுப்

லயம் யாதி = பிறழ்ந்து பிரிந்து செல்லும்

ததா ராஜா = அரசனுக்கும் அதே கதிதான்.

அன்யதர்மத: = அறநெறி மீறிய

 

விளக்கம்:- தன் சொந்த சமூகத்தினரை விட்டுப் பிரிந்து அன்னிய சமூகத்தினருடன் தன்னை இணைத்துக் கொள்பவன் அழிந்து போவான். அதேபோன் தன் சுயதர்மமாகிய அறநெறியை விட்டுப் பிறழ்ந்து போகும் அரசனும் அழிந்து போவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...