கர்நாடகா போய் காவிரியைத் தொட்டு சந்தோசப்பட்ட நிமிடங்களை மறக்கமுடியுமா . உகுநீர்க்கல்னா ஹொக்கனேக்கல்தான்.
எங்க புள்ளைங்க கர்நாடகாவுல வேலை பார்க்குறாங்க. எதேச்சையா ( அநேகமா எல்லா ட்ரெஸும் கறுப்பு கலர்ல வைச்சிருப்பானுங்க. ) கறுப்பு டீ சர்ட் போட்டுட்டுப் போனா என்ன காவிரிக்காகவான்னு ஆஃபிஸுல கேட்டானுங்களாம். கெதக்குன்னுச்சாம் புள்ளைக்கு. வீட்டுக்கு பார்த்து உஷாராப் போ அப்புன்னாங்களாம்.
ஒவ்வொரு தரமும் போராட்டம் நடத்தும்போதெல்லாம் இருதலைக் கொள்ளி எறும்பா தவிக்க வேண்டியிருக்கே. இங்கே கஷ்டப்படுற நம்ம மக்களும் அங்கே கஷ்டப்படுற நாம பெத்த மக்களும் நல்லா இருக்கோணும் சாமி. அம்புட்டுத்தான் நம்ம வேண்டுதல். காவிரியே நீ கண் திறந்து பொங்கிப் பெருகி வந்து எல்லா இடைஞ்சலையும் தவிடு பொடியாக்கு.
நம்ம போட்காரர் நீலச் சட்டைபோட்டிருப்பார். கர்நாடகா போட்காரர் மஞ்சள் சட்டை. அது அங்கேயிருந்து வர்ற வட்டு.
நீலமும் மஞ்சளும் கலந்து கட்டி சந்தோஷமாகப் பேசிக்கொண்டுதான் போய் வராங்க. அங்க ஒண்ணும் பிரச்சனை இல்லை. அரசியல்வாதிகள் இதை பிரச்சனை ஆக்காமல் மக்கள் நலனில் கவனம் செலுத்தி நல்ல தீர்வு கொண்டு வரவேண்டும்.
நதி நீருக்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைச்சா நல்லா இருக்கும். யாருக்கும் குந்தகம்/பாதகம் இல்லாம அரசு ஆவண செய்யவேண்டும்.
படங்கள் ரொம்ப ரொம்ப அழகு! மிக மிக ரசித்தோம்....உகுநீர்க்கல் அட ! தமிழ்ப்பெயரோ?!! புதிதாகத் தெரிந்து கொண்டோம்
பதிலளிநீக்குஆம் கீத்ஸ். நன்றிப்பா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!