புதன், 27 டிசம்பர், 2017

பெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.

பெங்களூரு சென்றிருந்தபோது மெட்ரோவில் சென்று வந்தோம். சென்னை மெட்ரோ மாதிரியும் சிங்கப்பூர் , துபாய் மெட்ரோ மாதிரியும் நல்ல அட்வான்ஸ்ட் ட்ரெயின் சர்வீஸ். அங்கங்கே ஸ்டாப்புக்கு முன்னதாக ஒலிக்கும் குரல்தான் சரியாகக் கேக்கலை. மேப் வரைந்திருந்திருக்கிறார்கள். சிங்கை மெட்ரோவில் மேப்பில் நாம் செல்லும் இடம் டிஜிட்டலாக ஒளிவிடும். இறங்க வெகு சவுகர்யமா இருக்கும். இந்தியாவிலும் ரேபிட் ட்ரான்ஸ்போர்ட் வந்தாச்சு. பறக்கலாம் வாங்க.

எல்லா மெட்ரோவிலும் கூட்டம் அள்ளித் தள்ளும். மும்பை எலக்ட்ரிக் ட்ரெயின் மாதிரி நீங்க வாசப்படிக்கிட்ட நின்னா போதும் உள்ளே கொண்டு தள்ள ஒரு கூட்டமும் வெளியே இறக்கிவிட ஒரு கூட்டமும் போட்டி போடும். நடக்கவே வேணாம். மிதந்து வந்துடலாம். லக்கேஜ் இல்லாம இருக்கணும். அப்புறம் பர்ஸ், செல்ஃபோன் பத்திரம்.

மல்லேஸ்வரம் பீன்யா வரை உள்ள மெட்ரோ பாதையை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே 2014 ஜூன் 17 இல் தொடங்கி வைச்சிருக்கார். நாம் போனது 2017 இல் தான். நாம் அங்கே இருந்தவரை ( 2013) இதக் கட்டினாங்க கட்டினாங்க கட்டிக்கிட்டே இருந்தாங்க. விடாம இப்ப போய் ஏறிப் பார்த்துட்டமில்ல. :) 2011 இலேயே மஹாத்மா காந்தி ரோட்டிலிருந்து பையனப்பஹள்ளி வரை மெட்ரோ ஆரம்பிச்சு ஓடிட்டு இருக்கு. இப்ப நான்கு வழி மெட்ரோவா அதை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்கு.

நாம பனசங்கரி கோயிலுக்குப் போகணும். எம் ஜி ரோட்டிலிருந்து கால் டாக்ஸியில் போயிட்டோம். போன அன்னிக்கு ஆடி கடைசி செவ்வாய். ஆகஸ்ட் 15. அங்கேருந்து பார்த்தா நம்ம மெட்ரோ ஆக்டிவா இருந்தது. விடு சவாரி ஜூட். :)

பனசங்கரி கோவிலிலிருந்து நம்ம மெட்ரோ ஸ்டேஷன்.

இதை ஒட்டி மார்க்கெட்டும் இருக்கு.
ட்ரெயின் டைமிங்ஸ் டிஜிட்டலில் ஒளிருது. டிக்கெட் வாங்கிக்குவோம். வாங்க. 10 ரூபாயிலிருந்து டிக்கெட் இருக்கு. நாம போற வழிக்கு இருமுறை ஏறி இறங்கணும்.

பனசங்கரிலேருந்து கெம்பேகவுடா மெஜஸ்டிக் வரைக்கும். அது க்ரீன் லைன்.

அதுக்கப்புறம் எம் ஜி ரோட்டுக்கு. அத பர்ப்பிள் லைன்ல காமிச்சிருக்காங்க மேப்புல. :) போயிட்டு வந்தபிறகு லென்ஸ் வைச்சு தேடினேன். :)
மேலே போக எக்ஸலேட்டரும், படிகளுமே இருக்கு.
ரொம்ப நீட் & க்ளீந்தான். டிக்கெட் கவுண்டர்கிட்ட ரங்க்ஸும் பசங்களும் டிக்கெட் வாங்க நின்னாங்க. நான் சைடு ஜன்னல்ல இந்த பில்டிங்க படம் எடுத்தேன் :)  டெக்ஸர்ட் ஷாட் படம் போடுறதுக்காக :)
வந்தாச்சு ஸ்டேஷனுக்குள்ள. ஃபோட்டோவா மூச்.எங்கேருந்தாவது யாராவது வந்து கொத்தில்லா மாதிரி ஏதோ சொல்லிட்டுப் போனாங்க.புரிஞ்சிக்கிட்டது ஃபோட்டோ எடுக்கக்கூடாதுன்னு.

கை சும்மாஇல்லை. லேசாசாய்ச்சு வைச்சு ஒரு க்ளிக்கு கிளிட்டமில்ல. ரயிலைத்தான் எடுக்க முடில.ரெண்டுபக்கமும் காவல் கண்காணிப்பு.
இது எலிவேட்டட் ஸ்டேஷன்.
ஆனா சிலது அண்டர்க்ரவுண்டிலும் இருக்கு.

பனசங்கரிலேருந்து ராஷ்ட்ரீய வித்யாலயா ரோடு, ஜெயநகர், சவுத் எண்ட் சர்க்கிள், லால் பாக், நேஷனல் காலேஜ், கிருஷ்ணராஜேந்திர மார்க்கெட், சிக் பேட் வழியா நடப்ரபா கெம்பேகவுடா மெஜஸ்டிக்குக்கு வந்தாச்சு.

அடுத்த ட்ரெயினுக்காக வெயிட்டிங்,.

இங்கேயும் டிக்கெட்டை ஸ்வைப் பண்ணிட்டு போய் நின்னா. லைனுக்குள்ள க்யூவுலதான் நிக்கணும். கூட்டம் எக்கச்சக்கம். இத்தனைக்கும் லீவு நாள் வேற. ஆஃபீஸ் இருக்கும் நாள்ல நிக்கவே முடியாதாம்.
ஒரு வழியா அதுலயும் ஏறி வந்தாச்சு. ரெண்டுலயும் ஃபோட்டோ எடுக்க முடியல.ஒரே கூட்டம் வேற. அதுவும் யங்ஸ்டர்ஸ் ஜாஸ்தி.

அப்பாடா வெளில வந்தாச்சு. இதென்ன யானைல ஒரு கடவுள் நம்மள வரவேற்குறாரு. :) முருகன் மாதிரி தெரிஞ்சுது.
மைசூரின் தஸரா பவனியை நினைவுறுத்தியது முகபடாம் அணிந்த  இந்த அழகிய  யானை சிலை.
தந்தங்களுக்குப் பூண் இட்டு உடலெங்கும் மதச்சின்னங்களும் ஓவியங்களுமாய் வெகு அழகு :)
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
  

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.  பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின்  வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.

18. திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.

19. கோபாலன் இன்னோவேஷன்மால், பெங்களூரு

20. பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி 

21. மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.

22.  வித்யாரண்யபுராவில் காளிகா துர்க்கை.

23.  பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.

24. பெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.

4 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

நாங்கள் பையப்பனஹள்ளியிலிருந்து கெம்பகௌடா வரை பயணித்திருக்கிறோம் படமும்வீடியோவும் எடுத்தோம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலா சார். :) நீங்க பெங்களூர்வாசி :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாவ்!! மெட்ரோ படங்கள் செம...அதுவும் அந்த பில்டிங்க் யம்மாடியோவ்..அழகான ஆங்கிள்!!!

கீதா: மேலே உள்ள கருத்துடன்...10 ரூபா டிக்கெட் இருக்கா பரவாயில்லையே..இங்க சென்னைல கோயம்பேட்லருந்து ஆலந்தூர் வரை போறதுக்கு 40 ரூ. தில்லில மெட்ரோல போயிருக்கோம்...அங்கயும் நல்லாருக்கு. நல்லகாலம் கெத்தில்லானு சொல்லி உங்க மொபைலை/காமாராவையோ கொத்திட்டுப் போகாம இருந்தாங்களே!! ஹா ஹா ஹா ஹா

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹா நன்றி கீத்ஸ் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...