எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஏ குருவி..

ஏ குருவி
சிட்டுக் குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு. :)
எங்க வலைத்தளத்துல வந்து கூடு கட்டு :)

சிட்டுகுருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே.
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே.

இப்பிடி பாட்டைக் கேக்கும்போதெல்லாம் மட்டுமில்ல ஜன்னல்வழி கீச் கீச்சுனு குரல் கேக்கும்போதும் ( கீசு கீசென்று ஆனைச்சாத்தான் -- செம்போத்து பறவை ) சத்தமிடும்போதும் குருவி ஞாபகம் வரும்.

இது இந்தியக் குருவிதாங்க . கடத்தல் குருவி இல்ல :)

குருவி பத்தி கொஞ்சம் சிறுகுறிப்பு :-

  பாஸரிஃபார்ம்ஸ் குடும்ப வகையைச் சேர்ந்தவை. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை இனம். மரத்தில்சுள்ளிகளால்  கூடு கட்டி முட்டையிடும். வைக்கோல் போன்றவை   கொண்டு கூட்டை மென்மையாக வைத்திருக்கும்.  சின்னஞ்சிறு பூச்சிகள், புழுக்கள், தானியங்கள் ஆகியவை இவற்றின் உணவு. இட்டாலியன் ஸ்பாரோ, ஸ்பானிஷ் ஸ்பாரோ, சோமாலி ஸ்பாரோ, டெட் சீ ஸ்பாரோ , கென்யா ஸ்பாரோ, டெசர்ட் ஸ்பாரோ, ராக் ஸ்பாரோ, அரேபியன் கோல்டன் ஸ்பாரோ இதன் வகைகள்.

மிக அரிதாகிவரும் இப்பறவையினங்கள் செல்ஃபோன் டவர்ஸ் இருப்பதாலும் சிக்னல் வேவ்லென்த் பாதிப்பதாலும் அருகி வருவதாக சொல்கிறார்கள். இயற்கையின் சுழற்சியைப் ( ECOLOGY CYCLES )  பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் இப்பறவையினங்களைக் காப்பது நமது கடமையாகும்.
இரட்டைவால்குருவி,கரிச்சான்குருவி, வலியன், சிட்டுக்குருவி, மைனா, தேன் சிட்டு,  இப்பிடி பேர் தெரியுமே தவிர இதுதான் அதுன்னு தெரியாது. எனவே படங்கள் மட்டுமே அணிவகுப்பு.
இவிட புறாவும் உண்டு. :) ஜோடிப்புறா, வெண்புறா. :)

ஹாஹாபொழுது போகாமா பறவை பாஷை எல்லாம் எழுதி வைச்சிருக்கேன். அதெல்லாம் அந்தக் காலம். :) பஞ்சவர்ணக்கிளி, குருவி, பேடை..
இவுகளைப் பார்த்து இவுகளை வரைஞ்சேன். நல்லா இருக்கா :) அவுக கொஞ்சம் சிவப்பு மஞ்சள் ஆயிட்டாக.:)
கண்ணப் பாரு கண்ண.
எல்லாப் பறவைக்கு கண்ணுதான் துரு துருன்னு அம்சமான ஐட்டம்.

ஏன்னா அதுக வாட்ஸப் பார்க்குறதுல்ல, ஃபேஸ்புக்குல மூழ்குறதுல்ல. ப்லாக் போஸ்ட் போடுறதில்லை, பேப்பரே படிக்கிறதில்லை. வேளா வேளைக்குச் சாப்பிட்டுட்டு நல்லா ஜம்முன்னு எட்டுமணிநேரம் தூங்குதுக. கிளையில குத்தவைச்சு உக்கார்ந்தும் கூட.
இந்தக்கொண்டைக்குருவி நெம்ப அழகுல்ல. :)
க்ரீட்டிங்க் கார்ட் விழிப்புணர்வுக் குருவி.
அட கொக்கு ஊடால.
வலசைப் பறவை.. அதையே நானும் வரைஞ்சிருக்கேன். எப்பிடி கீது ?! எப்பயோங்காட்டியும் வரைஞ்சது :) இன்னும் FADE ஆகாம இருக்குமா :)

கார்ட்டூன்புறா. நம்ம ட்ரையல். :)
வாத்தா, அன்னபட்சியா :)
மயிலு.
கிளி..

இப்பிடி ஏகப்பட்டபேர் குறுக்கால வர்றதக் கண்டுக்காதீங்க. எல்லாம் பறவைகளே. அப்பிடிங்கற பரந்த கண்ணோட்டத்துல போட்டிருக்கேன் :)
வெண்புறாவும் நீலப்புறாவும் எனது ஓவியமாய் :) எண்பத்தி மூணுல :)
பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்சதும்பாங்க.நம்ம ஊர் பண்டிகைகள் விநாயகர் சதுர்த்தில ஆரம்பிச்சு  அனுமன் ஜெயந்தில முடிவதைக் குறிப்பது.

அதே போல இங்கே குருவில ஆரம்பிச்சூ பஞ்சவர்ணக்கிளில (பஞ்சவர்ணக் குருவின்னு பேர் மாற்றம் பண்ணிடலாமா :)   முடிச்சிருக்கேன்.இந்த போஸ்டை கொஞ்சம் அஜிஸ் பண்ணிக்கோங்க. :) 

4 கருத்துகள்:

  1. சூப்பர்....குருவிகள் அழகு....ஆனால் பாவம்...அழிந்து வருது... உங்கள் படம் அருமை...

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஸ்ரீராம்

    நன்றி விசு சார்

    நன்றி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...