வெள்ளி, 22 டிசம்பர், 2017

மதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பழனியப்பா அரங்கத்திலும் செமினார் ஹாலிலும் நடைபெற்ற இந்திய மலேஷிய கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எடுத்த சில புகைப்படங்களும் நிகழ்வின் பதிவும்

முத்து நிலவன் சார், தென்றல் சாய் ஆகியோர் பேசியதும் , முதல் நாள் கலை நிகழ்ச்சிகளும் மறுநாள் நிகழ்ச்சி நிறைவு விழாவும் பின்னர் பகிர்கிறேன்.
பழனியப்பா அரங்கில் முதல் நாள் நிகழ்வுக்கு பத்து மணிக்கு இருக்கவேண்டுமே என ஒன்பதே முக்காலுக்கே ஓடினால் ஒருவரைக்கூடக் காணவில்லை. நிடா எழிலரசி தனது கணவருடன் வந்திருந்தார்.

பின்னர்தான் தெரிந்தது மலேஷியக் கவிஞர்கள் மற்றும் நம் கவிதாயினிகள் அனைவரும் விழா சிறப்பு விருந்தினரோடு வள்ளல் அழகப்பர் மியூசியத்தின் புதிய பகுதியின் திறப்புவிழாவுக்குச் சென்றிருந்த விபரம்.
மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு விருந்தினரும் அவர்களும் வரும் முன்பு நாம் விரைந்து சென்று வசதியான சீட்டைப் பிடித்துக் கொண்டோம். ( இங்கேதானே வந்தாகணும் என்று :)


இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முதல் நாளே இராஜபாளையத்திலிருந்து வந்த தோழி மதுமிதாவை அழகப்பா பல்கலைக் கழகத்தில் முதல் நாள் கொண்டு விடச் சென்றபோது எடுத்தது. ( இவர் வருகிறார் என்று வெஜ் பிரியாணி செய்து சாப்பிட்டோம் :) எனக்கு செல்லில் தமிழ் எழுத செல்லினம் போட்டுத் தந்தார். மேலும் ஸ்மியூலில் எனக்கு அக்கவுண்ட் ஓபன் செய்தும்பாட முடியாமல் ( வருஷத்துக்கு 1,100 ரூபாய் கட்டணுமாம் ) அவரது அக்கவுண்டில் பாட வாய்ப்புக் கொடுத்த வனிதைக்கு நன்றி. குழந்தைகள் கட்டைக்குரலில் பாடுவது போல்”மழைவரும் அறிகுறி” என்ற பாடலைப் பாடிக் கேட்டு மகிழ்ந்தேன். :)
மறுநாள் காலை நிகழ்வில் நிகழ்வு ஆரம்பிக்கும் முன்பு நாம் சீட்டைப் பிடிக்கப் போகும்போது  வந்திருந்த முபீன் ஸாதிகா ( எங்களைத் தேர்ந்தெடுத்து கேள்விகள்கேட்டு புத்தகம் ஆக்கத்தில் பெரிதும் உதவியவர் -  இவருக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள் ) , அடுத்து தோழி அமுதா பொற்கொடி, நெல்லை உலகம்மை, பாலைவன லாந்தர், தென்றல் சாய், பின்னால் பிருந்தா, ஸபி, ஆகியோர்.
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை. நன்றி அனுராகம் பதிப்பகம், அழகப்பா பல்கலைக்கழகம், மலேஷிய பேனா நண்பர்கள் சங்கம், மலேஷியப் பல்கலைக் கழகம்.
ஆரம்ப விழா முடிந்ததும் லஞ்ச் ப்ரேக்குக்கு முன்னதாக வந்திருந்த தமிழ்க் கவிதாயினிகள் புகைப்படம் எடுத்துக்  கொண்டோம். இதில் என் கல்லூரித் தோழி, ஹாஸ்டல்மேட், உமா மகேஸ்வரியும் இருக்கிறாள். ”எப்பிடி இருக்க?!” என்ற ஒற்றைச் சொல்லோடு எங்கள் சந்திப்பு ஆரம்பித்து முடிந்தது.
மாலையில் மலேஷியக் கவிஞர்களுடன் புகைப்பட செஷன்.
தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம் என்ற நூலை அழகப்பா பல்கலைக் கழகத்தின் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் செந்தமிழ்ப் பாவை அவர்கள் வெளியிட பெற்றுக் கொள்கிறேன். பக்கத்தில் மனம் கவரும் புன்னகையுடன் எங்களை அங்கே அரங்கேற்றி அழகு பார்த்த  எங்கள் அன்பு  முபீன் :)

ஒவ்வொரு கவிஞரும் தன்னைப் பற்றிய சிறுகுறிப்புடன் நான்கு கவிதைகள் வாசிக்க அவற்றுள் ஒன்றை மொழி மாற்றம் செய்து  மலாய் மொழியில் மலாய் கவிஞர் ஒருவர் படித்தார். அதன் பின் மாலை கலை நிகழ்ச்சிகள். இதில் மேடையில் ஆடும் ஆட்டத்துக்கு ஏற்ப அழகாய் ஆடிய தோழிகளைப் படம் பிடித்தேன். <3 p="">

ரத்திகா அவர்கள் கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய குழந்தைகள் மற்றும் மலேஷியக் கவிஞர்களுடன் குழந்தை போல் அமர்ந்து புன்னகை செய்தபோது பிடித்ததால் க்ளிக்கினேன். :)
நாங்கள் மூவர் .THREE MUSKETEERS :) பத்மா, உமா, தேன். மூன்று தோழிகள்.
முதல் நாள் ( மலேஷிய, இந்தியக் கவியரங்கம் கருத்தரங்கம் ) நிகழ்வு பற்றிய பத்ரிக்கைச் செய்தி. - தினமலர்.
முதல் நாள் நிகழ்வு பழனியப்பா அரங்கிலும் மறுநாள் செமினார் ஹாலிலும் நடைபெற்றது.
செமினார் ஹாலின் சாப்பாட்டுக்கூடத்தில் முன்னாள் துணைவேந்தர்கள் படங்கள்.
இம்மாபெரும் நிகழ்வு நடைபெற்ற அரங்கம் மற்றும் பல்வேறு கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்  இடமளித்த வள்ளல் அழகப்பர் , அவரது அன்பு மகள் உமையாள் ஆச்சி, முன்னாள் துணைவேந்தர் ராதா தியாகராஜன் ஆகியோரின் திருவுருவப்படங்கள்.
மறுநாள் நிகழ்வில் மதிய நேரம்.
கிருஷ்ணப்பிரியா கவிதை வாசிக்கிறார்.
காரைக்குடியைக் கல்விக்குடியாக மாற்றிய வள்ளல் அழகப்பர் பற்றியும், அவரது பெருமுயற்சியாலேயே பெண்கள் பலர் அங்கே கற்கவும், வேலை செய்யவும் வாய்ப்புப் பெற்றமை குறித்தும்,  சென்ற அரை நூற்றாண்டுக்கு முன்பே  மீனாக்ஷி பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து பெண் கல்விக்காகப் பாடுபட்ட ஷோபனா தேவி மேடம் பற்றியும் ( எங்கள் தமிழன்னை சுசீலாம்மாவின் தாயார் ) கூறி பெண்களின் கல்வி இங்கே மேம்பட்டதுதான் என்று கூறினேன்.

மேலும் இன்றைய திருமண வாழ்வில் ஆணாதிக்கம் போல் பெண்ணாதிக்கம் மேலோங்குகிறது என்றும் அதைத் தவிர்த்து எந்த ஆதிக்கமும் இல்லாமல் இருமணம் இணைந்து ஈகோவை விட்டுவிட்டு கூடி வாழ்தலே முக்கியம் , அதுதான் இன்றைய பெண்கள் ஆண்களுக்கான முக்கிய தேவை என்று அர்ஜண்டாகப் பேசி ( 3 நிமிடம்தான் வழங்கினார்கள் ) எனது ஒரு சில கவிதைகளைப் படித்து மொழிபெயர்ப்புக் கவிதையையும் படித்து அமர்ந்தேன். !
மூன்று கவிதைகள் படிக்க விரும்பிய என்னிடம் எனக்கு மூன்று நிமிடங்கள்தான் என்று முபீன் கூறியதாலும், காரைக்குடி சொந்த ஊர் என்பதால் எங்களுக்கு மேடை கடைசியிலேயே கிடைத்தது என்றும் கூறினேன்  :)

என்னுடைய கவிதையின் மொழியாக்கத்தை அதன் பின் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் வாசிக்க பதிவு செய்து கொண்டேன். அதை சவுண்ட் க்ளவுடில் வெளியிட்டபின் பகிர்கிறேன். அதன் பேப்பர் காப்பியை முன் இடுகையில் பதிவு செய்திருக்கிறேன்.
தோழி ஆதிரா, மலேஷியக் கவிஞர் டத்தின்.
தோழி நாச்சியாள் சுகந்தி & மலேஷியத் தமிழ்க் கவிஞர் மீனாக்ஷி
கவிஞர்கள் சந்திப்பு தித்திப்பு. விழா நிறைவில் எடுத்தது.
மீண்டும் நன்றி கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி சார், மலேஷியக் கவிஞர்கள், மலேஷியப் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், செந்தமிழ்ப் பாவை மேம் ( இந்நிகழ்வை இரு நாட்கள் அழகாகத் தொகுத்து வழங்கிய இம்மையத்தின் ஆசிரியருக்கும், மேடை, பரிசு , சால்வை,உணவு வழங்கல்,  புத்தக வெளியீடு ஆகியவற்றில் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், பணியாளர்கள், ஊழியர்கள், ஆசிரியைகளுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தோழி முபின் சாதிகா,  முனைவர் கிருஷ்ணன் மணியம் சார், முனைவர் மோகன்தாஸ் அவர்கள், பேனா நண்பர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல், மற்றும் எனது கவித் தோழிகள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.

மதுரையில் படித்த பெண்ணான நான்  ( ஃபாத்திமா கல்லூரி ) கல்லூரிக் காலத்துக்குப் பின் பல்வேறு ஆண்டுகள் கழித்துக் கவிதைகள் எழுதி புத்தகமாக்கம் செய்து மலேஷியக் கவிஞர்களுடன் மேடையேறிக் கவிதை சொல்லியது  மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. அதுவும் வள்ளல் அழகப்பர் பல்கலை அரங்கத்தில் என்னும்போது இனிப்பின் வலிமை இன்னும் கூடுதலாக இருக்கிறது. வாழ்நாள் பரிசளித்த அனைவருக்கும் நன்றி குறிப்பாக அன்பின் முபின் ஸாதிகாவுக்கு.

ஸ்பெஷல் டிஸ்கி :- எனது வலைத்தளத்தின் பக்கப் பார்வைகள் பத்து லட்சத்தை நெருங்கப் போகின்றது. அதற்குக் காரணம் வாசகர்களாகிய நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். தொடர்ந்து வாசித்து ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன். :) 

5 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே

Balasubramanian Munisamy சொன்னது…

அன்பு தேனம்மைக்கு வணக்கம்
தொடக்கம் முதல் முடிவு வரை மலேசியக் கவிஞர்கள் மற்றும் படைப்புலகம் நிகழ்வு குறித்து அருமையாக பதிவிட்டுள்ளீர்கள் .நேரலை போவே நெஞ்சம் மகிழும் பதிவு.வலைக்கு திரும்ப வேண்டும் என்ற ஆவல் மீள்கிறது.முகநூல் வந்து தடுத்துவிட்டது.மீண்டும் வலைப்பதிவில் படைப்புகளை படிக்கவும் எழுதவும் உங்கள் எழுத்து ஈர்க்கிறது.பாராட்டும் நன்றியும் தேனம்மை
பாலா
புதுச்சேரி

G.M Balasubramaniam சொன்னது…

முபின் சாதிகா என்பவர் வலைப் பூவில் எழுதுபவரா

Aathira Mullai சொன்னது…

தேன்...... பதிவும் உங்களைப் போல (தேன் போல) இனிமை. மகிழ்ச்சி தங்களைச் சந்தித்ததில். இது வரைக்கும் எழுத எனக்குக் காலம் இடம் கொடுக்க வில்லை. சிறப்பாகப் பதிவு செய்துள்ளீர்கள். தொடர்வோம்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி பாலா

முகநூலில் எழுதுகிறார் பாலா சார்

நன்றி ஆதிரா

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...