திங்கள், 7 ஆகஸ்ட், 2017

கோபாலன் இன்னோவேஷன் மால், பெங்களூரு.பெங்களூருவில் வாராவாரம் செவ்வாய்க்கிழமை சினிமா பார்ப்பதுதான் எனக்கும் ரங்க்ஸுக்கும் வேலை. அது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் எதானாலும் சரி.சென்னை எக்ஸ்ப்ரஸ், மெட்ராஸ் கேஃப், தலைவா, லூப்பர், ட்ரான்ஸ்போர்ட்டர், அயர்ன் மேன், டேகன், எ குட் டே டு டை ஹார்ட், மிஷின் இம்பாஸிபிள், வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்., ஸ்கைஃபால் எல்லாம் சென்னைக்கு வரும் முன்பே பார்த்து ப்லாகிலும் ரிவியூ போடுவதுண்டு. சிலவற்றுக்கு விட்டுப் போய்விடும்.
சினிமா பார்ப்பதன் சந்தோஷத்தை முதன் முதலாக அந்த மாலில்தான் அனுபவித்தேன். அதற்கு முன்பு கோவையின் கேஜிதான் சூப்பர் தியேட்டர் என்று நினைத்திருந்தேன். அதேபோல் ஹைதையின் ஃபோரம் மாலும் சூப்பராக இருக்கும். அன்றைய மளிகை, ஜவுளி, வாசனைப் பொருட்கள் கடைகள்தான். பழைய கள் புதிய மொந்தையில். ஆனால் காஸ்ட்லியாகக் கிடைக்கும்.அதன் பின் சென்னையில் அபிராமி மால், பிவிஆர், எக்ஸ்கேப், ஃபோனிக்ஸ், ஐநாக்ஸ், சத்யம், எக்ஸ்ப்ரஸ் அவென்யூ, அம்பா ஸ்கைவாக், சந்திரா மால் ஆகியன சென்றிருந்தாலும் ( இந்த் அம்பாவில் கல்மனே காஃபி சூப்பரா இருக்கும். ) கோபாலன் மால் என்னவோ கொஞ்சம் ஸ்பெஷல். எல்லாவிதத்திலும்.இந்த கோபாலன் மாலில் சுதந்திரதினத்துக்கு எல்லாக் கடைகளுக்கும் கொடிகளும், கிறிஸ்துமஸின்போது பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தா , ரெயின்டீர், கிறிஸ்துமஸ் மரங்கள் கொள்ளை அழகு.சுத்தமான வாசனையான மால். மேலும் அளவும் மீடியம்தான். ஏசியைவிட்டு வெளியே வந்தாலும் பெங்களூரு க்ளைமேட்டுக்கு வேர்க்கவே வேர்க்காது. இங்கே ஷாப்பிங் செய்ததே இல்லை. சினிமா மட்டுமே பார்க்கச் சென்றதுண்டு. ஷாப்பிங்க் எல்லாம் காய்கறி ரிலையன்ஸ், மளிகை ஆச்சன் ( AUCHAN HYPERMARKET ) கடைகளில்தான்.

சோப்பு, சீப்பு, பாசி , ஊசி, லெதர் கோட், ஜாக்கெட், சூட்கேஸ், ஷூ, அழகு நிலையங்கள், மாடர்ன் உடைகள்,  பேக்கரி, ஃபாஸ்ட் புட் உணவகங்கள், குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ், பர்ஃப்யூம்ஸ், அலங்காரப் பொருட்கள்,  எலக்ட்ரானிக் ஐட்டங்கள், செல்ஃபோன், சலூன் கடைகள், எல்லாம் இருக்கு.டாட்டூ ஷாப் இல்லாத மால் இல்லை. அதுபோல் தங்கம் வெள்ளி ஃபேன்ஸி ஜ்வெல்லரி  கடைகளும்.

ஸ்னோ பவுலிங் இங்கே ஸ்பெஷல்.ஜெயதேவாவுக்குப் பக்கத்துல இருக்குறதுதான் ( பன்னரகட்டா ரோடுன்னு நினைக்கிறேன் ) இந்த மால். இன்னொன்னு பனசங்கரிகிட்ட இருக்கு. பெங்களூர் போனா இல்லாட்டி பெங்களூர்ல இருந்தா இந்த கோபாலன் மாலுக்குப் போகாம இருக்காதீங்க.பாப்கார்ன், பிஸ்ஸா,பர்கர், சிக்கன் பக்கெட், கோல்ட் பிவரேஜஸ், காஃபி, ஜூஸ் எல்லாம் ஆர்டர் பண்றது நம்ம விருப்பம். ஆனா அந்த சமோசாவை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க. சூப்பரா இருக்கும். என் பெரிய பையன் டிக்கெட் ஆன்லைன்ல புக் பண்ணும்போதே இந்த ஸ்நாக்ஸ் எல்லாம் பே பண்ணிடுவான். J இல்லாட்டி பக்கத்துல இருக்குற பார்பக்யூ நேஷனுக்குப் போய் மதியம் வெட்டிட்டு வரலாம். ஒரே என்ஜாய்தான். J

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.  பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின்  வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.

18. திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.

19. கோபாலன் இன்னோவேஷன்மால், பெங்களூரு


20. பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி :-
 

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

துபாயில் லுலு மால் துபாய் மால் போன்றவைதான் நான் மால்களாகப் பார்த்தது மால்கள் ஏனோ எனக்கு ரசிப்பதில்லை இல்லாமை யை சீண்டிவிடும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அனுபவங்கள். தில்லியிலும் நிறைய மால் உண்டு.

த.ம. முதலாம் வாக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

nan rasipathodu sari Bala sir. shopping il interest illai :)

nandri Venkat sago


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...