வெள்ளி, 17 ஜனவரி, 2014

பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி :-

பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி :-

மைசூர் செல்லும் வழியில் தெற்கு பெங்களூருவில் ஆர் ஆர் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஞானாக்ஷி இராஜராஜேஸ்வரி ஆலயம். பெங்களூருவில் தரிசிக்கத் தவறக் கூடாத இடம் ராஜேஸ்வரி ஆலயம். பெங்களூரை இவள் அரசாட்சி செய்வதால்தான் செல்வச் செழிப்போடு இருக்கிறது நகரம்.


இதன் வழிகாட்டி போர்டே பிரம்மாண்டம்.வழியில் உள்ள நடைபாதைத் தடுப்புக்குக் கூட சூலத்தால் டிசைன் செய்யப்பட்ட கம்பிகள்.முதலில் மூன்று கட்டமாக உள்ள மிகப் பெரிய அழகிய ஆர்ச் ஒன்று  நம்மை வரவேற்கிறது. இது முன்னாள் பிரதமர் நரசிம்மராவால் திறந்து வைக்கப்பட்ட பெருமை உள்ளதாகும். ஸ்ரீ திருச்சி சுவாமிகளால் இது 1960 இல் கட்டப்பட்டுள்ளது. 
தற்போது அடுத்த கும்பாபிஷேகத்துக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 


தண் என்ற குளுமையில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டது இந்த ஆலயம்.  வெளிராஜ கோபுர வாசல் 108 அடி உயரம் உள்ளதாகும். ( கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது ).

படியில் சங்கு செதுக்கப்பட்டிருக்கிறது எங்கும் காணாத வித்யாசம்.  


நவக்கிரக மண்டபம்,   அர்த்த மண்டபம், கர்ப்பக் கிரஹம் அழகு. கர்ப்பக்கிரஹத்தின் மேல் கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. நவக்கிரங்கள் கொள்ளை அழகு. 

இது துவஜஸ்தம்பம்..  


உள்ளே ஸ்ரீ ஞானாக்ஷி ராஜ ராஜேஸ்வரி புன்னகை பொலிய கரும்போடு இனிப்பாய்க் காட்சி அளிக்கிறாள் 

சுற்றுமதில் கோட்டை. 


ஒரு நாளைக்கு  5 முறை ஆகம முறைப்படி பூஜை நடைபெறுகிறது. இங்கே ப்ரம்மோத்சவம் விசேஷம்.தங்கக் கருவறை.


அம்மனை எழுந்தருளப் பண்ணும் இடம். 


சிற்ப வேலைப்பாடுகள் நடைபெறுகின்றன. மனதுக்குள் பூட்டியது போல அம்மன் புகைப்படங்கள்.நல்ல வெய்யில் நேரத்தில் தண்ணென்று குளுமையுடன் இருந்த ஆலயத்துள் மதிய கால பூஜையைப் பார்த்துப் பரவசமாகினேன். எல்லா வேண்டுதல்களையும் ஆசீர்வதித்தபடி மென்முறுவலோடு அமர்ந்திருந்தாள் ராஜராஜேஸ்வரி.


6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான படங்கள் சகோதரி...

நன்றி...

Menaga sathia சொன்னது…

தரிசனத்திற்கு மிக்க நன்றிக்கா!!

சே. குமார் சொன்னது…

படங்களும் கோவில் குறித்தான தகவலும் அருமை அக்கா.

ஸ்கூல் பையன் சொன்னது…

படங்கள் பளிச்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி மேனகா

நன்றி குமார்

நன்றி ஸ்கூல் பையன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...