எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 டிசம்பர், 2017

ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..

கொஞ்சம் ஃபேஸ்புக் தமாஷா. கேள்விகள். அதுக்கு என்னோட சின்சியர் ( ! ) பதில்கள்.

1701. A movie quote I like is...

I’m back

1702. One word that describes me is...

Honey

1703. In my fridge, there's always...

Dates, cashews & almonds

1704. My favourite sport(s) to watch...

Billiards

1705. My favourite drink is...

None other than narasus filter coffee

1706. My favourite place to be is...

My houses

1707. The language I love the most is...

தமிழ்

1708. What's a scent you like?

Poison

வியாழன், 28 டிசம்பர், 2017

கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.

வீடுகள் கட்டுமானத்தில் செட்டிநாட்டுக் கட்டுமானத்தை மிஞ்ச முடியாது. இங்கே செட்டிநாடு என்றால் கானாடுகாத்தான் மட்டுமல்ல. அதைச் சுற்றியுள்ள 72 ஊர்களும்தான்.கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வீடுகளும் சில இருக்கலாம். எல்லாம் 901* தேக்குமரம் வைத்து இழைத்துக் கட்டப்பட்டவை. 


அவரவர் ஐயாக்கள் கொண்டுவித்துக் கொண்டு வந்த பர்மா தேக்கினால் கடையப்பட்டவை. ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட பத்தடி உயரம் வரை 902* செம்புறாங்கற்களால் அடித்தளம் அமைக்கப்பட்டு அதன் மேல் வீடு எழுப்பப்பட்டிருக்கும்.


அந்தக் காலத்திலேயே இரண்டு மாடி உள்ளவை. மேல் மாடிகளை சாமான் போடும் அறையாக உபயோகப்படுத்துவார்கள்.  கல்யாணத்துக்குச் சாமான் பரப்பும் கூடமும் கூட அந்த மேல்மாடி ஹாலாகத்தான் இருக்கும். 


சில வீடுகளில் புது மணத் தம்பதிகளின் முதலிரவுக்கும், அவர்களின் தினசரிப் பயன்பாட்டுக்கான படுக்கை அறை, சாமான் அறைகளும் அமைக்கப்பட்டிருக்கும். 


இது ராஜா வீடு. கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவிலிலிருந்து புகைப்படம் எடுத்தேன். எத்தனை கோணத்தில் பார்த்தாலும் யானை, மழை, வானவில், கடல் , குழந்தை போல பரவசமூட்டக்கூடியது இந்த வீடு.

அதன் பக்கவாட்டு வீடுகளும் இடம்பெற்றுள்ளன. எங்கூராக்கும். 

செவ்வாய், 26 டிசம்பர், 2017

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு காணொளி.



காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எங்கள் நூல் வெளியீடு.

ஏ குருவி..

ஏ குருவி
சிட்டுக் குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு. :)
எங்க வலைத்தளத்துல வந்து கூடு கட்டு :)

சிட்டுகுருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே.
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே.

இப்பிடி பாட்டைக் கேக்கும்போதெல்லாம் மட்டுமில்ல ஜன்னல்வழி கீச் கீச்சுனு குரல் கேக்கும்போதும் ( கீசு கீசென்று ஆனைச்சாத்தான் -- செம்போத்து பறவை ) சத்தமிடும்போதும் குருவி ஞாபகம் வரும்.

இது இந்தியக் குருவிதாங்க . கடத்தல் குருவி இல்ல :)

குருவி பத்தி கொஞ்சம் சிறுகுறிப்பு :-

  பாஸரிஃபார்ம்ஸ் குடும்ப வகையைச் சேர்ந்தவை. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை இனம். மரத்தில்சுள்ளிகளால்  கூடு கட்டி முட்டையிடும். வைக்கோல் போன்றவை   கொண்டு கூட்டை மென்மையாக வைத்திருக்கும்.  சின்னஞ்சிறு பூச்சிகள், புழுக்கள், தானியங்கள் ஆகியவை இவற்றின் உணவு. இட்டாலியன் ஸ்பாரோ, ஸ்பானிஷ் ஸ்பாரோ, சோமாலி ஸ்பாரோ, டெட் சீ ஸ்பாரோ , கென்யா ஸ்பாரோ, டெசர்ட் ஸ்பாரோ, ராக் ஸ்பாரோ, அரேபியன் கோல்டன் ஸ்பாரோ இதன் வகைகள்.

மிக அரிதாகிவரும் இப்பறவையினங்கள் செல்ஃபோன் டவர்ஸ் இருப்பதாலும் சிக்னல் வேவ்லென்த் பாதிப்பதாலும் அருகி வருவதாக சொல்கிறார்கள். இயற்கையின் சுழற்சியைப் ( ECOLOGY CYCLES )  பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் இப்பறவையினங்களைக் காப்பது நமது கடமையாகும்.
இரட்டைவால்குருவி,கரிச்சான்குருவி, வலியன், சிட்டுக்குருவி, மைனா, தேன் சிட்டு,  இப்பிடி பேர் தெரியுமே தவிர இதுதான் அதுன்னு தெரியாது. எனவே படங்கள் மட்டுமே அணிவகுப்பு.
இவிட புறாவும் உண்டு. :) ஜோடிப்புறா, வெண்புறா. :)

சனி, 23 டிசம்பர், 2017

ரம் பம் பம் ஆரம்பம்..

ஒரு தோழியின் இல்லத்தில் கிறிஸ்மஸுக்கு முன்னான ஒரு இரவில் கிறிஸ்மஸ் கேரல்ஸ்  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழி சென்ற நான் ஓரிரு நிமிடங்கள் புகுந்து க்ளிக்கியது.  அதிலும் இவர்கள் இரட்டையர்கள், டபிள் தமாக்கா. ரொம்ப சூப்பராக டான்ஸ் ஆடி மகிழ்வித்தார்கள். பார்வையற்றோர் பள்ளியிலிருந்து வந்து பின்னணி பாடும் சிறுமிகள் கலந்து கொண்டார்கள். 

கிறிஸ்மஸ் மரம், பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் விட சாண்டா க்ளாஸைப் பார்த்தாலே கிறிஸ்மஸுக்கான மணி மனதில் ஒலிக்கத் துவங்கிவிடும்.

கொயர் கேர்ள்ஸ் என்றிருக்கும் என் தோழிகள் பாடுவதை ரசித்துக் கேட்பேன்.

‘தந்தானைத் துதிப்போமே.. “

“ஆற்றலாலும் அல்ல.. சக்தியாலும் அல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே “ ஆகிய ஓரிரு பாடல்கள் தெரியும். ஆனால் கிறிஸ்மஸ் பாடல்கள் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

மதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பழனியப்பா அரங்கத்திலும் செமினார் ஹாலிலும் நடைபெற்ற இந்திய மலேஷிய கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எடுத்த சில புகைப்படங்களும் நிகழ்வின் பதிவும்

முத்து நிலவன் சார், தென்றல் சாய் ஆகியோர் பேசியதும் , முதல் நாள் கலை நிகழ்ச்சிகளும் மறுநாள் நிகழ்ச்சி நிறைவு விழாவும் பின்னர் பகிர்கிறேன்.
பழனியப்பா அரங்கில் முதல் நாள் நிகழ்வுக்கு பத்து மணிக்கு இருக்கவேண்டுமே என ஒன்பதே முக்காலுக்கே ஓடினால் ஒருவரைக்கூடக் காணவில்லை. நிடா எழிலரசி தனது கணவருடன் வந்திருந்தார்.

பின்னர்தான் தெரிந்தது மலேஷியக் கவிஞர்கள் மற்றும் நம் கவிதாயினிகள் அனைவரும் விழா சிறப்பு விருந்தினரோடு வள்ளல் அழகப்பர் மியூசியத்தின் புதிய பகுதியின் திறப்புவிழாவுக்குச் சென்றிருந்த விபரம்.
மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு விருந்தினரும் அவர்களும் வரும் முன்பு நாம் விரைந்து சென்று வசதியான சீட்டைப் பிடித்துக் கொண்டோம். ( இங்கேதானே வந்தாகணும் என்று :)

திங்கள், 18 டிசம்பர், 2017

தேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.

சரசர சாரக்காத்து வீசும்போது சாரைப் பார்த்துப் பேசும்போது இந்தப் பாடல் முழுவதுமே ஒருமாதிரி இயல்பும் ரிதமும் மனதைக் கவரும்.  ஹீரோயினுக்கென்று எந்த விசேஷ அலங்காரமும் இல்லாததுபோல சுற்றி இருக்கும் இயற்கைக் காட்சியும் யதார்த்தமாக இருக்கும்.


கடல் படத்தில் இரு பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதில் இது ரொம்ப பிடிக்கும். அடியே அடியே என்ன என்ன செய்யப்போறே. என்று கேட்பது அழகு.  கார்த்திக் மகனும் ராதா மகளும் வித்யாசமான அழகுள்ள ஜோடி. காட்டுத்தனமான அழகுன்னும் சொல்லலாம்.

ஞாபகங்களுக்கு மரணமில்லை.

1681. மீன்பிடிக்கும் கதைதான் அது.. ஏனோ ஒரு வேட்டையை மனதில் கிளர்த்துகிறது.  பவா சொல்லும்போது ஒரு விதமான உலகத்தையும் சா கந்தசாமி சொல்லும்போது இன்னொருவிதமான உலகத்தையும் படைப்பது அற்புதம்.

பவாவின் கதையில் நாமும் சிறு ஜிலேபியாய் ஹார்லிக்ஸ் பாட்டிலில் மீனடக்கிச் செல்லும் சிறுவனாகவும் பவுல் வாத்தியாராகவும் ஆகிறோம். கந்தசாமியின் கதையில் தாத்தனிடமிருந்து தப்பும் பெருவிராலாகிறோம்.

1682. புகைப்படத்தில் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
கடந்துகொண்டிருக்கிறேன்
சிதிலமடைந்த அந்த கோட்டைச்சுவரை

1683. தனிமை பயப்படுத்தவில்லை. கூட்டம்தான் பயப்படுத்துகிறது.

1684. prolonged usage of nonstick cookware leads to diabetics.. then what abt tupperwares..

சனி, 16 டிசம்பர், 2017

மழபுலவஞ்சியும் உழபுலவஞ்சியும்:-

மழபுலவஞ்சியும் உழபுலவஞ்சியும்:-

வெட்சித்திணை :-

இது குறிஞ்சித்திணக்குப் புறமாகும்.

நூற்பா:-

“வெட்சிதானே குறிஞ்சியது புறனே “

திணைவிளக்கம் :-

“ஆ தந்து ஓம்பல் மேவற்றாகும்”.

குறிஞ்சியின் ஒழுக்கம் களவொழுக்கம். வெட்சியின் நோக்கம் நிரை கவர்தல். தொல்காப்பியர் கருத்துப்படி நிரை கவர்தலும், நிரை மீட்டலும் வெட்சிதான். வெட்சியும் களவொழுக்கத்துக்குரியது.

குறிஞ்சியின் காதலர் களவொழுக்கத்திற்கு குறியிடம் மலை. அதுவே வெட்சி வீரருக்கும் பொருந்தும். ”மலை சார்ந்த இடத்தில்” இருந்து ஆநிரையை ஓட்டிச் செல்வர்.

சும்மா ஒரு வெளம்பரந்தான்..

விளம்பரங்கள் ஒரு காலகட்டத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றன. ஃபேஷன் ட்ரெண்டிங் மாறுவதை அறிவிக்கின்றன. உடை, அலங்காரம், அவை எடுக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் ப்ளாக் & வொயிட் படங்கள் அவை நிச்சயம் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.

அத்யாவசியமான விஷயம் எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். , இப்பிடி ஒரு போஸ்ட் போட. படம் கிட்டிச்சு, நீங்களும் கிட்டிட்டீங்க. அப்புறம் கதைக்க என்ன பஞ்சம். :)

நமக்கு சுஜாதா, இந்திரா காந்தி அம்மா, இவங்க போல நடிகை சரிதான்னாலும் ஒரு காலத்துல உயிர். இப்பவும் சரிதாவைப் பிடிக்கும். ஜூலி கணபதி போன்ற படத்தில் நெகட்டிவ் காரெக்டரில் பார்த்த போது கொஞ்சம் கெதக் என்றிருந்தாலும் சரிதாவை ரொம்ப பிடிக்கும். ஏனெனில் மௌனகீதங்கள் வந்தபோது நான் டென்த் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்கு வந்தபோது எங்கள் மாமா மூக்குக் குத்திக் கொள்ளும் எல்லாருக்கும் மூக்குத்தி கொடுப்பதாகக் கூற ஒரு ஆர்வக்கோளாறில் நானும் என் பெரியம்மா பெண்களும் மூக்கைக் குத்திக் கொண்டு வலியால் கண்ணெல்லாம் கலங்கி ( நரம்பில் இறங்கிவிட்டது ஆணி ) ஒரு வழியாக பள்ளிக்குச் சென்றோம்.

அங்கே எங்கள் ஆசிரியை கேட்டார், என்னடி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.

இல்லீங்க மிஸ்.

அப்புறம் ஏண்டி மூக்குக் குத்திக்கிட்டு இருக்கே

பெரிய பெண் ஆனா மூக்குக் குத்திக்கணும்னு சொன்னாங்க என்று கொஞ்சம் மழுப்பித் தப்பித்தபோது வந்த படம் மௌனகீதம். அதில் சரிதா மூக்குத்தி மின்ன மின்ன கோபம் ஜொலிக்க நடிப்பார். ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதே ஹேர் ஸ்டைலை வேறு பல்வேறு ஆண்டுகளாக ஃபாலோ பண்ணினேன். :)

எங்களுக்குத் தமிழ் வகுப்பு எடுத்த “ அறம்வாழி” மாஸ்டரின் ஐந்து வயதுப் பேரன் என்னைப் பார்த்தால் மூக்குத்திப் பூ மேலே காத்து உக்கார்ந்து பேசுதையா என்று பாடுவான். நாம சரிதாவோ என்ற நினைப்பில் மூக்குத்தி பிடித்துப் போனது உண்மை.

அப்புறம் நூல் வேலி, அவள் அப்படித்தான், நெற்றிக்கண், தண்ணீர் தண்ணீர், ஊமை விழிகள், பொண்ணு ஊருக்குப் புதுசு, தங்கைக்கோர் கீதம், வேதம் புதிது, கீழ்வானம் சிவக்கும்  ஆகிய படங்கள் கொஞ்சம் குழப்பத்தோடு பிடித்தன. காரணம் அன்றைய ஹீரோயின்ஸ் வெறும் மெழுகு பொம்மைகளாக வந்தபோது வெவ்வேறு காரெக்டர்களில் உணர்வு பூர்வமாய் நடித்து மனதைக் கவர்ந்தவர் சரிதா.

நல்லா பார்த்தீங்கன்னா தெரியும் அந்தக் காலத்துல நட்ட நடு நெத்தில பொட்டு வைச்சுக்குவாங்க. சரிதாவின் கண்ணும் நாக்கை மடித்து அவர் செய்யும் குறும்பும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ”ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் “ என்ற பாட்டை என்றைக்குக் கேட்டாலும் நான் ஃப்ளாட்தான். அவ்ளோ ரசிகை அவருக்கு நான்.
சரி விளம்பரத்தை விட்டுட்டு வேறெங்கோ போயிட்டேன். ( சரிதா ரசிகை மன்றம் :)

பூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.

ஒருகாலத்துக க்ரீட்டீங்க் கார்டு இல்லாம கொண்டாட்டமே இல்லை. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாத்துக்கும் க்ரீட்ங்க் போஸ்ட்கார்ட் ஒண்ணாவது கட்டாயம் வந்துடும். முக்காவாசி பொங்கல் பானை , தீபம், நடிகர் , நடிகையர் போக முக்கியமா சுவாமி படங்கள் போக பூக்களும் பறவைகளும் கூட க்ரீட்டிங்ஸ் ல இடம் பெற்று இருக்கும்.

என் பிறந்தநாளின் போது கல்லூரி பருவத்தில் தோழியர் கொடுத்த க்ரீட்டிங் கார்டுகளும் இன்னபிற கார்டுகளும் பூக்களாக அணிவகுத்து வருகின்றன.
A ROSE IS A ROSE IS A ROSE :)
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது.

புதன், 6 டிசம்பர், 2017

நலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.

காரைக்குடியிலுள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி எனும் அரசுப் பள்ளியை
"" தனியார் பள்ளிகளைத் திரும்பிப் பாா்க்க வைக்கிறது"" என ஒரு இதழ் அண்மையில் பாராட்டியுள்ளது. எல்லா அரசுப் பள்ளிகளும் இப்படி இருந்தால், தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் பெருகியிருக்காதே!
வ.சுப.மாணிக்கனாரின் தாய்மொழிக் கல்விக் கொள்கை வெற்றி பெற்றிருக்குமே!
ஆகவே வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழாவை அந்தப் பள்ளியில் கொண்டாட விழைகிறோம்.
08.12.2017 வெள்ளி (மாலை 5.30 மணி) ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
தமிழ் நெஞ்சினரே வருக! வருக!

அழகப்பருக்காகத் தவம் செய்த சொல்
நல்ல சொல் வேண்டுமென கவிஞர்கள் தான் தவிப்பார்கள், தவமிருப்பார்கள்.
ஒரு தமிழ்ச் சொல் தவமிருக்குமா? ஒரு நல்ல தமிழ்ச் சொல் தவமிருப்பதாக ஒரு கவிஞர் கற்பனை செய்கிறார். அந்த புரட்சிக் கவிஞர் வேறு யாருமல்ல நமது வ. சுப. மாணிக்கனார் தான்.
தவமிருப்பது எந்தச் சொல் தெரிமா?
வள்ளல் என்ற சொல் தவமிருக்கிறதாம், எதற்கா? அந்தச் சொல்லை ஏற்கத் தகுதியாவன் பிறக்க வேண்டுமாம். அந்த தவத்தின் பயனாகப் பிறந்தவர் தானாம் வள்ளல் அழகப்பர்.
ஆனால் வள்ளல் எனும் சொல் யாரை நினைந்து தவம் செய்கிறது என்பதை வ.சுப.மா. சொல்லவில்லை. நான் சொல்லாமல் இருக்க முடியாது. வள்ளல் எனும் சொல் வ. சுப. மாணிக்கனாரை நினைந்து தான் தவமிருந்தது.
அந்தக் கொடை இமயத்தின் புகழ் கொடியை ஏந்திய தமிழ் இமயமல்லவா வ.சுப.மா.? அதனால் தான் நலந்தா எடுக்கும் வ.சுப.மா. நூற்றாண்டு விழா காரைக்குடி கண்ட இரு இமயங்களையும் கொண்டாடும் இரட்டை விழாவாக பரிணமிக்கிறது.
தமிழ் நெஞ்சினீரே வருக வருக
இனி, வள்ளல் பால் வ.சுப.மா கொண்ட தீராக் காதலை சுட்டும் அந்த வெண்பா (கொடை விளக்கு நூலில் 31 ஆம் வெண்பாவாக இடம் பெற்றுள்ளது)
வள்ளற் றமிழ்சொல் வணங்கித்
தவஞ்செய்து //கொள்ளப் பிறந்த கொடையழகன் உள்ள //
உடைமை அனைத்தும் ஒழித்தான் ஒழியார்//
மடமை தொலைக்கும் மகன்//

நெஞ்சில் வாழும் ச.மெய்யப்பனார் !!

வெள்ளி, 1 டிசம்பர், 2017

பராக்கிரமம்மிக்க பாளையக்காரர் பூலித்தேவன்.

பராக்கிரமம்மிக்க பாளையக்காரர் பூலித்தேவன்.


ஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA POETS MEET.

இந்திய ஆசிய கவிஞர்கள் சந்திப்பில் 31 தமிழ்க் கவிஞர்கள் கலந்து கொண்டோம்.

இது பற்றி முபீன் சாதிகா கூறியிருப்பதை அப்படியே பகிர்கிறேன்.

////காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்திய-ஆசியான் எழுத்தாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. இதில் கலைஞன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.நந்தன் மாசிலாமணி அவர்களின் முயற்சியால் 38 கவிஞர்களுக்கு 38 நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இந்த நூல்களைத் தொகுக்கவும் கவிஞர்களை நேர்காணல் செய்யவும் எனக்கு வாய்ப்பளித்த திரு.நந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஒத்துழைப்பு நல்கிய 38 கவிஞர்களுக்கும் என் நன்றிகள். இதற்காக 3500 பக்க கவிதைகளைப் படித்து, 1000 பக்க நேர்காணல்களை வாசித்து 300 பக்கங்கள் எழுதி 38 நூல்களுக்கும் மெய்ப்பு பார்த்து தொடர் வேலையாகச் செய்யவேண்டியிருந்தது. நூல்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் படைப்பாளர்களுக்கு எனத் தனியாக ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று கருதி அவர்களில் ஓரளவு அதிகம் அறியப்படாதவர்களும் இருக்கவேண்டும் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வைத்து அங்கீகாரம் தர எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. எல்லோருடைய நூல் வந்தாலும் சிலரால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. வரப் போகவும் தங்கவும் கலைஞன் பதிப்பகமே ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மலேஷிய பல்கலைக்கழகமும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்றன. காரைக்குடியில் 27, 28 தேதிகளில் காலை 10.30லிருந்து மாலை 5.30 வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். இடம்:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.////

///காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள், செவ்வாய் கிழமைகளில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் 38 கவிஞர்களின் நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் 31 கவிஞர்கள்தான் பங்கேற்றார்கள். பல சூழ்நிலைகள் காரணமாக மிச்சமிருந்த கவிஞர்கள் பங்கேற்கவில்லை. விழாவுக்கு முந்தைய நாளும் விழா நாளும் தங்குவது உணவு உட்பட பல அடிப்படை அம்சங்களில் பெரும் குறைகள் இருந்தன. நிறைவு நாளில் குறைகள் களையப்பட்டன.

கவிஞர்கள் பேச, கவிதை படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மலாயின் கவிஞர்களும் கவிதைப் படித்தார்கள். அவற்றை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்தார்கள். அவற்றை நான் வாசித்தேன். என் குரல் பலருக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. நிறைவு விழாவில் ராஜேந்திரன் ஐஏஎஸ்ஸும் நிர்மலா ஐஏஎஸ்ஸும் வந்திருந்தார்கள். எங்களுக்கு பெரும் ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுத்தார்கள். பெண் கவிஞர்கள் அனைவரும் பெண்ணியத்தின் ஒரே அம்சத்தைத் திரும்பத் திரும்பப் பேசியதாக மலேஷிய பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் கூறினார். தமயந்தி, மதுமிதா, பிரேமா ரேவதி, சக்தி ஜோதி போன்றவர்களின் உரைகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தன.

பல குறைகள் சில நிறைகள். நூல்கள் வெளிவந்தது மகிழ்ச்சி. சக்தி ஜோதியின் முயற்சிகளால்தான் எல்லோருக்கும் தங்கும் இடவசதி உணவு உட்பட விருந்தோம்பலும் கிடைத்தன. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆண் எழுத்தாளர்களை இடையில் பேசவிட்டது உற்சாகத்தைக் குன்றச் செய்தது.

பெண் கவிஞர்களுக்கு என்று தனிப்பட்ட கூட்டம் நடத்தி நூல்களை வெளியிட்டு மையப்படுத்தியதற்கு கலைஞன் பதிப்பக உரிமையாளர் நந்தனுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். ஊக்கமளித்து ஆதரித்த எல்லா பெண் கவிஞர்களுக்கும் மற்றும் பிற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.////

சொல்ல வார்த்தையில்லை. இன்னுமொருமுறை புதிதாய்ப் பிறந்தோம். உங்களால் சிறப்புற்றோம். அன்பும்  மகிழ்ச்சியும் முபீன்.
தோழிகள்.
வெளியிடப்பட்ட எனது நூல்.
Related Posts Plugin for WordPress, Blogger...