மழபுலவஞ்சியும்
உழபுலவஞ்சியும்:-
வெட்சித்திணை
:-
இது குறிஞ்சித்திணக்குப்
புறமாகும்.
நூற்பா:-
“வெட்சிதானே குறிஞ்சியது
புறனே “
திணைவிளக்கம்
:-
“ஆ தந்து ஓம்பல்
மேவற்றாகும்”.
குறிஞ்சியின் ஒழுக்கம்
களவொழுக்கம். வெட்சியின் நோக்கம் நிரை கவர்தல். தொல்காப்பியர் கருத்துப்படி நிரை கவர்தலும்,
நிரை மீட்டலும் வெட்சிதான். வெட்சியும் களவொழுக்கத்துக்குரியது.
குறிஞ்சியின் காதலர்
களவொழுக்கத்திற்கு குறியிடம் மலை. அதுவே வெட்சி வீரருக்கும் பொருந்தும். ”மலை சார்ந்த
இடத்தில்” இருந்து ஆநிரையை ஓட்டிச் செல்வர்.