எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

துணை. - சொல்வனத்தில்.


துணை.:-


விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு . காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.

மெல்ல அசங்கியபடி  பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.

கீழ்வீட்டின்  நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். லோப்ல லேது என்று எத்தி கதவைச் சாத்திக்கொள்வார். எதற்கு வளர்ப்பு மிருகம். மனிதனுக்குள்ளே பல மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.  மற்றொரு மனிதனைப் பார்த்துக் கத்தினால் பதிலுக்கு குதறிவிடுவான், அதை நன்றியுள்ள நாய் செய்யாது என்பதாலா.


பாவம் அதன் வாயை வேறு அவ்வப்போது சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டிவிடுகிறார்கள். அது அவனைப்பார்த்தால் ஓடிவந்து குலவ வருகிறது . அவனுக்கும் ஃபாத்திமாவுக்கும் வளர்ப்புப்பிராணிகள் என்றால் அலர்ஜிபடி இறங்கிப்போகும்போது அது ஓடிவந்தால் அப்படியே மூச்சைப்பிடித்தது போல நின்று கொள்வார்கள் சாலமனும் ஃபாத்திமாவும்.


வீட்டுக்காரர் பையன் வந்துடர்னா மத் அங்கிள். குச் பீ நஹி கரேகாஎன்று சொல்லி காலிடுக்கில் அதன் சங்கிலியை மிதித்துப் பிடித்துக்கொள்வான்.

திரும்ப   கைப்பக்கம் வந்து அமர்ந்தது. தன் மேல் பிசுபிசுப்பாக இருப்பதால் வந்து அமர்கிறதா. கண்ணை லேசாகத் திறந்து கழுத்தை எக்கி புஜத்தைப் பார்த்தான். அம்மை ஊசி குத்தின தழும்பில் உட்கார்ந்து எழுந்து கொண்டிருந்தது கையை அசைத்தால் போவதும் பின் திரும்ப வந்து உட்காருவதுமாகத் தொடர்ந்தது அதன் விளையாட்டு.


போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் . மழைக்காலம் என்றாலும் கூட உள்ளே கசகசப்பாய் வியர்க்க ஆரம்பித்தது. இன்வர்டர் இன்னும் இணைக்கப்படாமல் இருந்தது.


லேசாக கண்அசரும்போது உதட்டில் வந்து அமர்ந்தது அந்தப் பொல்லாத . தூ தூ என்ற படி எழுந்து அமர்ந்தான் சாலமன். என்ன சனியன் இது ஞாயிறும் அதுவுமா தூங்க விடாம. கலைந்திருந்த தலையும் சிவந்திருந்த கண்ணும் முன்னே இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் வீங்கிய பிம்பமாய் நேத்து பீர் அதிகம் என்றன. எழுந்து பாத்ரூம் போய்விட்டுவந்து அமர்ந்து கொட்டாவி விட்டான். ஞாயித்துக்கிழமையும் அதுவுமா கரெண்டையும் விடாமக் கொல்லுறானுக நாயிங்க என்று சபித்தான்.

ஃபாத்திமா இருக்கும்வரை வீட்டில் எந்த உபத்திரமும் இருக்காது. வேலை முடிந்து சாயங்காலம் வந்ததும் கொசு மட்டையை எடுத்துக்கொண்டு வேட்டையாடி விடுவாள். அவளுக்குக் கரப்பான் பூச்சிக்குக்கூட பயமில்லை. முன்பு இருந்த வீட்டில் புத்தக செல்ஃபிலிருந்து எதிர்பாராமல் குதிக்கும் எலியைக் கண்டால் மட்டுமே கீச் என்று கத்துவாள். அப்போது வீரன் அவதாரம் எடுத்து அவளைக் காப்பது அவன் கடமை. பொறிவைத்துப் பிடித்து ரோட்டில் விடப்படும் எலி சரியாக ஒரு வாரம் கழித்துத் திரும்ப எப்படித்தான் செல்ஃபில் அமருமோ.அவள் முன்னே அவனை வீரனாக்க விரும்பியதுவோ என்னவோ.


தோள்பட்டையிலிலும் முழங்கையிலும் காலிலும் விரல்களிலும் இலக்கில்லாமல் பறந்து அமர்ந்து அமர்ந்து அந்த அவன் பொறுமையைச் சோதித்துக்கொண்டிருந்ததுப்ளக்கில் இருந்த கொசுத்திரவ  பாட்டில் காலியாகி பல மாதமாகியிருந்தது . இந்த பாட் வரும்முன்னே அதுதான். அதுக்கு முன்னே கொசு மேட். அதுக்கு முன்னே கொசுக்கடியோடும் மொய்த்ததோடும்தானே தூங்கி இருக்கோம் மணப்பாடுவில் என்று நினைத்துக்கொண்டான்.


சர்ச் இருந்த அந்த வீதியில்தான் இருந்தது அவனுடைய இளம்பருவ வீடும். கருவாடும் மீனும் இல்லாமல் சாப்பாடே இல்லை. மத்திக்காக சொத்தையே எழுதி வைப்பார் அவன் தாத்தா.மீன் பொளிச்சதும், வஞ்சிரம் வறுவலும் எல்லா வேளைக்கும் கிடைக்கும். ரோட்டு மணலில் கூட கலந்து மிகுந்து கிடக்கும் மீன் எலும்புகள் செருப்பில்லாமல் போனால் குத்தும். மேல் பக்கத்தை மட்டும் திறக்கக்கூடிய வாசலின் ஃப்ரென்ஞ் பாணி கதவைத் திறந்து வைத்தால் மழைக்காலங்களில் ஈக்கூட்டமும் கொசுக்கூட்டமும் படையெடுக்கும்.


 பட் டென்று  ஐந்தாவது தடவையாகத் தன் தொடையில் அடித்துக்கொள்ள தப்பிய கட்டிலுக்கு கீழே பறந்தது. என்ன இது குறி தப்பிக்கொண்டே இருக்கிறது. எங்கே அந்த கொசு பேட். எடுத்து இந்த ஈயை ஒரே அடி அடிக்கலாமா என்று எழுந்தான். அட சட். பாட்டரி தீர்ந்திருக்கிறது. கரெண்ட் இல்லை. கரண்ட் வந்ததும் சார்ஜரில் போட்டு அதன்பின் தான் வேட்டையாட முடியும். கரண்டு வந்தால் சார்ஜ் ஆகட்டும் என்று சார்ஜரில் போட்டு வைத்தான்.


மணி பன்னிரெண்டு ஆகி இருந்தது. எதற்காக வீட்டிற்குள் வந்து இது தொல்லை செய்கிறது. வெளியே எவ்வளவு அசுத்தங்கள் இல்லை. ஒரு வேளை குளிக்காமல் தன் மேல் நாற்றமெடுக்கிறதா . அக்குளைத் தூக்கி முகர்ந்து பார்த்துக்கொண்டான். முகம் கூடக் கழுவலை . எழுந்து முகத்தைக் கழுவினான்.


ஒரு வாரத்துக்கு முன்னே ஊருக்குச் சென்ற ஃபாத்திமா இன்று இரவு வண்டியில் திரும்புகிறாள். வீட்டை ஒரு முறை பார்த்தான். கட்டில் கண்டமேனிக்குக் கலைந்திருந்தது. அழுக்குத்துணிகள் வாஷிங்மெஷினுக்கு வெளியே பிதுங்கிக்கொண்டிருந்தன. சின்கில் நூடுல், ப்ரெட் ஆம்லெட் போட்ட பாத்திரங்களும் ஃப்ரிஜ்ஜில் மிஞ்சிய பதார்த்தங்களை சூடு செய்து சாப்பிட்டு அரையும் குறையுமாக மிச்சமாகப் போட்டப்பட்ட பாத்திரங்களும் நிரம்பி இருந்தன. கடையில் வாங்கித் தின்ற பொட்டலங்களும், பீர் பாட்டில்களும் இன்னொரு பையை நிரப்பின. அதிகாலையில் குப்பைப் பையை வெளியே வைக்காவிட்டால் கச்சடா எடுப்பவன் போய்விடுவான்.அப்புறம் வெளியே வாசலில் பூனை குதறும் என்பதால் ஃபாத்திமா வைக்கமாட்டாள்.


சோஃபாவில் படித்துவிட்டுப் போட்ட பேப்பரும், புத்தகமும் ரிமோட்டும் கிடந்தது. ஒழுங்காக அடுக்கி வைப்பது அவளின் வேலை. அவள் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். ரோட்டின் இந்தப் பக்கம் ஒரு பீகாரி மம்மாவின் கடையும் அந்தப்பக்கம் ஒரு பெங்காலன் கடையும் இருந்தது. ரோட்டிலேயே காரட் எல்லாம் தூவி மடித்து மஞ்சள் கலரில் தோசை சுட்டுக் கொடுப்பார்கள்.


தலையை ஒதுக்கிக்கொண்டு நாயரின் கடைக்கு ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று போனான். பர்முடாசின் பாக்கெட் நுனியிலிருந்து எவ்விப் பறந்தது அந்த . கொசு கூட அதிகமில்லை. இந்த எப்படி வந்தது என்று நினைத்தபடி அறைந்து கதவைச் சாத்தினான். கதவின் இடுக்கில் நச்சு சாகட்டும் என்பதுபோல கோவத்துடன்.


டீ குடித்துவிட்டுவந்தபின் கலக்கிய வயிறோடு வேகமாய் டாய்லெட்டுக்குப் போனான். பக்கெட்டுக்கு அருகில் முழங்காலில் கப்பின் மேல் என்று மாற்றி மாற்றிப் பறந்து அவனை இம்சைப்படுத்திக்கொண்டிருந்தது . கப்பை எடுத்து வீசினான். பறந்து வெண்டிலேட்டரில் அமர்ந்தது. வேகமாகக் கால் கழுவிவிட்டு உள்ளே வந்தான்.


அவசரமாக பாத்ரூம் கதவைச் சாத்தினான். பறக்கும் நேரம் என்பது போல. இந்த அவசரத்தில் உள்ளே வந்திருக்க முடியாது என்பது அவனுக்கு நிம்மதியாயிருந்தது.


மதியம் இரண்டாகி இருந்தது. கரெண்டு வந்திருந்தது. வேகமாகப்போய் டிவியைப்போட்டுப் பக்கத்தில் லாப்டாப்பையும் ஆன் செய்தான். கடையில் வாங்கி வந்திருந்த ஹைதராபாதி பிரியாணிப்பொட்டலத்தைப் பிரித்து டீப்பாயில் வைத்து வெங்காயத் தயிர் , சிக்கன் குருமாவைத் திறந்தான். ர்ரூரூம்ம்ம்ம் என்றபடி கழுத்தருகே பறந்தது .


அட இன்னுமா இங்கே சுத்துது அது எப்பிடி உள்ளே வந்திச்சு என்றபடி லேசாகக் குளிரினாலும் ஃபானைப் போட்டான். ரிமோட்டில் சானல் செலக்ட் செய்வதற்குள் இரு தரமும் லாப்டாப்பில் ஃபேஸ்புக்கில் பத்தி ஒரு ஸ்டேடஸ் போடுவதற்குள் நான்கு முறையும் அவனை அலைக்கழித்தபடி மூக்கில் காதில் அமர்ந்து சுற்றிச் சதி செய்தது அந்த .



கைகளால் வீசியவாறு முதுகிலும் உடம்பின் பக்கவாட்டிலும் கை அசைத்தபடி விரட்டினான். ப்ரியாணியின் மேலும் குருமாவின் மேலும் மாறி மாறி அமர்ந்தது.


ஃபான் காற்றைக் கூடவைத்து நட்டநடுவில் சோஃபாவை இழுத்துப்போட்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பிப்பதற்குள் பிரியாணி ஆறி இருந்தது. காற்றில் உடம்பு மயிர்க்கூச்செறிவது போலிருந்தது. பரவாயில்லை ஈத்தொல்லைக்கு இது பரவாயில்லை என்பது போல தலையை மல்லாந்து சோஃபாவில் சாய்ந்து படுத்தான்.


தொலைக்காட்சியில் நகராட்சி கொசு வண்டிகள் அனுப்பப்படுவது குறித்தும் தண்ணீர் தேங்காமல் இருப்பதுகுறித்தும் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன. இங்கே எங்கே தண்ணீர் இருக்கு. வீட்டைச் சுற்றி காய்ந்த நிலம்தான். என்று எண்ணியபடி கை கழுவினான்.


லாப்டாப்பையும் டிவியையும் அணைத்துவிட்டு இரண்டுநாள் முன்பு புக்ஃபேரில் வாங்கியிருந்த மிகப்பெரும் மொழிபெயர்ப்புப் புத்தகம் ஒன்றை விரித்தான். சாயங்காலம் ஃபாத்திமாவை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைக்கச் செல்ல இன்னும் இரண்டு மணி நேரம் பாக்கி இருந்தது.


பற்றிய நினைப்பில்லாமல் ஃபானைக் குறைத்து புத்தகத்தைப் பிடித்தான். உண்டமயக்கம் அசத்தினாலும் புத்தகம் சுவாரசியமாய் இருந்தது. புத்தகத்தின் எழுத்துக்களின் மேல் வந்து அமர்ந்தது . படிக்க விடாமல் மேலும் கீழும் அலைந்து அசங்கி புத்தகத்தின் பக்கங்களிலும்  விரல்களிலும் தொற்றிய அது அதி தீவிரமாக விரட்டும்போது சோஃபாவின் கீழே சென்று கெண்டைக்கால்களிலும் கணுக்காலிலும் மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்தது.


கோபமும் ஆத்திரமும் பொங்க கொசு  அடிக்கும் மட்டையை  ப்ளக்கிலிருந்து வேகமாகப் பிடுங்கி செக் செய்து கைகளில் வைத்துக்கொண்டான். ஈயைக் காணவில்லை. டீப்பாயை நகர்த்தி புத்தகம் சோபா, டிவி எல்லா இடங்களிலும் பார்த்தான். திறந்திருந்த லாப்டாப்பை மூடினான். எங்கும் காணவில்லை. எப்படி மாயமாய் மறைந்தது.


டீப்பாயில் கொசு அடிக்கும் மட்டையை வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்தான் விட்ட பக்கத்தில் அடையாளம் பார்த்துப் பிரித்த போது விரல்களின் மேல் அந்த . மயிர்க்கூச்செறிந்தது அவனுக்கு. இன்று இதை வேட்டையாடாவிட்டால் தொடர்ந்துவந்து உயிரைக் குடிக்கும் என்ற  பீதியடைந்தவன் போல் அதன் செய்கைகளை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தான்


புத்தகம் கையிலிருக்க படிப்பது போன்ற பாவனையுடன் அதன் பறத்தலையும் அமர்தலையும் பார்த்து லேசாக விரட்டிக்கொண்டிருந்தான். அவன் படிக்கிறான் அதை பொருட்படுத்தவில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்த விழைபவன் போல புத்தகத்தைப் பார்ப்பது போல அதைப் பார்ப்பதும் அதைப் பார்ப்பது அதற்குத் தெரிந்துவிடக்கூடது என்ற எண்ணத்தோடும் அதன் செய்கைகளை நோக்கத்தொடங்கினான்.


விளையாட்டில் வெறுப்படைந்தது போல அவனுடைய புத்தகத்துக்கும் டீப்பாய்க்கும் இடையில் இருந்த இடைவெளியில் சென்று வலது பாதத்தின் பக்கம் அமர்ந்தது . இதுதான் தருணம் இதுதான் என்று வெஞ்சினம் கொட்டியபடி அந்த  500 பக்க பைண்டிங் புக்கை தடால் என்று கையிலிருந்து வலது கால் பக்கம் விழுவது போல் விட்டான். காலில் அதன் கெட்டி அட்டைமோதி சில நொடி வலித்தது.


இந்த வெயிட்டுக்கு அது இந்நேரம் சட்னியாகி இருக்க வேண்டும். அந்தப் புத்தகத்தை  எடுத்தால் திரும்ப பறந்து வந்து விடுமோவென்ற பயம் அவன் கண்களில் ஓடியது.


செல்ஃபோன் சைலண்ட் மோடில் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தால் ஃபாத்திமா. மெஹபூப் நகர் வந்திடுச்சு என்று பக்கத்து ஊரின் பெயரைச் சொன்னாள். இதோ ஸ்டேஷன்கிட்ட வந்துகிட்டு இருக்கேன். என்ற படி காலைத் தடவிக் கொண்டான். ஏதோஒரு டீ ஷர்ட்டையும் பாண்டையும் அணிந்து தலையைக் கோதியவாறு கதவைப் பூட்டி பைக்கை எடுத்தான்.


மழை வருவது போலிருந்தது.. காச்சேகுடா ஸ்டேஷன். அங்கே ப்ளாட்ஃபார்ம் அருகில் ஆயிரக்கணக்கான பூச்சிகளும் கொசுக்களும் ஈக்களும் பறந்து கொண்டிருந்தன


சிக்னலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே ஸ்டேஷனுக்குள் ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்டாக வந்தது. காத்திருக்கும் நேரத்தில் ஒரு கப் காஃபி வாங்கிக் குடித்தான் சாலமன். அதன் மேல் ஒரு வந்து அமர்ந்தது. விரட்டி விட்டு ஒரு பத்ரிக்கை வாங்கினான். அதன்மேல் அந்த தொடர்ந்தது. ஒரு வேளை இது வீட்டில் இருந்து தன்னோடு பயணப்பட்டு வந்த ஈயோ என்ற சந்தேகம் வந்தது அவனுக்கு. அந்த அடிபட்டும் இன்னுமா சாகல..


வீட்டுக்கு உடனே சென்று அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ட்ரெயின் வந்துவிட்டது. வழக்கம்போல் சொந்தக்காரர்கள் பற்றிய குறிப்புகளோடும் விவரணைகளோடும் ஃபாத்திமா காதோரம் கொஞ்சியபடி வந்தாள். இருவரின் சம்பாஷணைக்கு இடையேயும் அவனுக்கு அந்த மனக்கண்ணில் தோன்றியபடி இருந்தது. அட சட். இவள் ஏன் சமய சந்தர்ப்பம் தெரியாமல் அந்த ஈயைப் போலக் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டு வருகிறாள். கோபத்தில் காதுகள் விடைத்தது அவனுக்கு. வேண்டாம் நாளைக்குக் கோச்சுக்கலாம். பதினைஞ்சு நாள் ஆச்சு. இல்லாட்டி ராத்திரி கெட்டுடும்.


வீட்டை அடைந்த உடனேயே வண்டியை பார்க் செய்துவிட்டு மேலேறி கதவைத் திறந்தான். “ ஒரு வாரம் பெண்டாட்டி ஊருக்குப் போனா இப்படியா கோலாகலமா இருக்கும் வீடு.இதுனாலதான்  கொசு எல்லாம் வருது. நான் இல்லாட்டா உங்களுக்கு சரிப்படாதுஎன்று செல்லமாய் தாவாங்கட்டையைப் பிடித்துக்கொஞ்சியபடி கொண்டை போட்டுக்கொண்டு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.


வேகமாகச் சென்று அந்தப் புத்தகத்தை எடுத்தான். அதன் கீழ் ஒரு நசுங்கிக்கிடந்தது அட்டைப்படத்தின் ஓவியமாய். நிம்மதியாய் இருந்தாலும் மனம் என்னவோ போலானது சாலமனுக்கு. ஃபானை நிறுத்திவிட்டுக் கூட்டும் மனைவிக்காக கால்களை சோபாவின் மேல் வைத்து அமர்ந்துகொண்டான். மனைவி கொண்டுவந்திருந்த லக்கேஜுகளில் இருந்த சிறிய பலாப்பழத்தின் மேல் ஒரு சுற்றத்தொடங்கி இருந்தது

டிஸ்கி :- இந்தச் சிறுகதை 15 - 2 - 2015 சொல்வனத்தில் வெளியானது.


5 கருத்துகள்:

  1. உடலைப் படுத்திய உயிர் எழுத்து ' ஈ'

    பதிலளிநீக்கு
  2. சூப்பர்! ஈ படமும் நினைவுக்கு வந்தது! மிக அருமையான நடை...ஒரு ஈ யை வைத்து ஈ ஓட்டியே எல்லோருமே ஏதேனும் ஒரு தருணத்தில் அனுபவித்திருக்கும் ஒரு சாதாரண நிகழ்வை இவ்வளவு அருமையான ஒரு கதையாக்கியதற்குப் பாராட்டுகள் சகோதரி! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை அக்கா...
    ரொம்ப நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நன்றி நாகேந்திர பாரதி

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    நன்றி குமார் தம்பி :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...