எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 ஜூலை, 2015

முகமூடிகளும் மனப்பூக்களும்.

321. கன்னியாகுமரியை நான் ஒரு ரயில் பயணத்தில் படித்தேன் . அவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. பெண்ணை முழுமையாக யாருமே உணர்ந்ததில்லை., அவள் மனதின் அடி ஆழத்தை உணரவே முடியாது எல்லாவிதத்திலும் என்ற இடம் பிடித்தது. ஆனால் ஆரம்பம் ஏனோ கொஞ்சம் பிடிக்கல. சைக்கலாஜிக்கலா ஒரு ஆண் அதுவும் காதலன் , (கணவன் இல்லை ) இப்படியும் தன் காதலி பத்தி அவளுக்கு ஒரு சிதைவைச் சிந்திக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஆனால் பல மனிதர்களின் இயல்பைப் பார்த்தா அது உண்மையான விஷயமாகவும் இருக்கலாம் என  இப்பத் தோணுது.

322.  இனி எதுவும் செய்து திருத்திவிடமுடியாது அம்முகத்தை.

தனக்கு மட்டுமே தெரிந்த கோணல், தனக்கு மட்டுமே தெரியாத அழுக்கு,பிறருக்குத் தெரியும் இனிப்பும் கசப்பும் பூசிக்கிடக்க பலவருடங்களாக தேய்த்துக் கழுவிக் கழுவிச் சுத்தம் செய்த அம்முகத்தில் சுருக்கங்கள் சேரத்துவங்கி இருக்கிறது வயோதிகத்தின் வலியாய்.

திருத்தமுடிந்த சிலவும் திருத்தமுடியாத பலவும் நிறைவேறாத கனவுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் அசைக்க நதியில் மிதக்கும் சருகாய் காயத்துவங்கி இருக்கிறது அவ்வுடல்.

மீட்டெடுக்க முடிந்த சொச்ச ஞாபகங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது அந்த மனம்.

வீட்டின் ஒரு பகுதி இளையோர் உலகமாயிருக்க
இன்னொரு பாகம் முதியோர் இல்லமாய் ஆகிக்கொண்டிருக்கிறது.

323. புதுக்கவிதைகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று பாராட்டுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள் :)
காலத்தின் கட்டாயம். :)

324. நடிகர்கள் பெருகிவிட்டார்கள் எல்லாத் துறையிலும்.



325. நாலு அஞ்சு ப்லாக் போஸ்ட் லிங்க் அதிகமா போட்டுட்டா போதும். கரடியக் கண்டுபிடி கடிகாரத்தைக் கண்டுபிடின்னு இந்த எஃப்பி பண்ற கரைச்சல்.. ஹாஹா :)


326. லீவுக்கு வந்திருக்கும் மகனிடம்.
---டேய் ரொம்ப உயரமாயிட்டே.
----வெளிநாட்டுல ( மனுஷங்க வளர்றதுக்கு) உணவுலகூட உரம் போடுறாங்களோ என்னவோம்மா.
-- !!!

327. வேதாளர் மட்டும்தான் போட்டுக்கணுமா. நாமளும் தேவைப்படும்போது முகமூடி போட்டுக்கலாம் ஏன்னா நாம நெம்ப நல்லவங்க :)


328. ஒரு ஆண் பெண்ணை முழுமையாய் உணர்வது ஒரு புறம் இருக்கட்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னையே முழுமையாய் உணர்ந்திருக்கிறாளா என்பது கூட சந்தேகம்தான்.

329. திடீர் திடீர்னு அங்கங்கே பத்திகிட்டு எரியுது.

ஃபயர் சர்வீஸைக் கூப்பிட வேண்டியதுதானே.

அட இதெல்லாம் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்லங்க.. 


330. இலைகளின் ( கீரைகள் ) மருத்துவ குணம் மாதிரி பூக்களின் மருத்துவ குணம் என்ன..

331. நாம ஃபேஸ்புக் யூஸர்ஸா. இல்ல எண்டர்டெயினர்ஸா

— looking for a full time job. 


332. அள்ளிக் கொட்டாதீர்கள் அன்பை. மூழ்கிக்கொண்டிப்பவர் தப்ப இயலா அளவு.கிள்ளிப் பார்த்தாலும் வலிப்பதில்லை.. ஆழப் பாய்ந்திருக்கிறது அன்பெனும் போதை விஷம். 

333. என்னங்.. ஏனுங் இப்டி .. ஹிஹிஹி. கோவைக்காரர்கள் கோவப்படாதீங்க. கணபதி சில்க்ஸ் பக்கத்துல ஒரு கடையில இத படம் புடிச்சேனுங்..
smile emoticon
smile emoticon


நல்ல வேளை ஷோபா இல்ல இப்ப.. smile emoticon

335.எங்காளை ஏன் விபீஷணருக்குப் பின்னாடி ஒளிச்சு வைச்சிருக்காங்க.
smile emoticon
— at Chettinad.


ராமருக்குப் பக்கத்துல வைக்கணும்னு அப்பிடி பின்னாடி பிரதிஷ்டை பண்ணிட்டாங்க போலிருக்கு.
ஆனா ஆஞ்சநேயரை முன்னாடி வைச்சுட்டாங்க.
ஒரு வேளை இளவல் என்பதால் சம அந்தஸ்து போல. ஆனா ஒளிச்சு வச்ச மாதிரி இருக்கு.. smile emoticon

336. நீயெல்லாம் எப்பிடி மாமியா வீட்ல குப்பை கொட்டப் போறே...
.
.
.எப்பிடி அந்த ஆஃபீசுல குப்பை கொட்டுறே..
.
.
.
இப்பிடித்தான் கேப்பாங்க அப்ப..
.
.
.
ஆனா நாம இப்ப ஃபேஸ்புக்குல குப்பை கொட்டுறோம்.

மிஞ்சிப்போன குப்பையை எல்லாம் வாட்ஸப்புல கொட்டுறோம்..
smile emoticon

-- வாட்ஸப் அட்ராசிட்டீஸ் பப்ளிகுட்டீஸ் ..தாங்கமிடில சாமி.. 

337. காஃபின்னா டபரா டம்ளர், டீன்னா கப் & சாஸர், சூப்னா சில்வர் கப், கூல் ட்ரிங்க்ஸ்& ஐஸ்க்ரீம்னா க்ளாஸ் இதுதான் பெஸ்ட்.
,
,
,
,,
,
,
,

,
,ஆனா இப்ப எல்லாமே யூஸ் & த்ரோ ப்ளாஸ்டிக் கப் இல்லாட்டி மெழுகு போட்ட பேப்பர் கப்.
,
,
,
அப்ப ஏன் கான்சர், குடல் நோய், தொண்டை அழற்சி, கட்டிகள் எல்லாம் வராது.
,
,
பழசுக்கே மாறுவோம். ஏன்னா பழசு நல்லது..

338.வீட்டுல இவ்ளோ சாமானா சேருது. இவ்ளோ குப்பையா சேருது பாவம்னு பரிதாபப்பட்டுக் கேக்கும் எஜமானரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்..

.
.
.
.
.
.
.
..

.
..ஒரு வேளை நான் வீட்டுவேலை செய்யும் பெண்ணைக் கொடுமைப்படுத்துற மாதிரி இருக்கோ..என்னவோ..
smile emoticon

---- அது ஏன் எசமான் நான் வேலை செய்யும்போதெல்லாம் இது உங்க கண்ணுல படல..
smile emoticon
smile emoticon

339.வல்லமனம் வெறும்பொய்கள்
வாட்டுவது இக்காலம்.
வஞ்சனைகள் சூழாது
வாழ்ந்திருப்பது எக்காலம்.
வந்தவினை தாக்காமல்
வழி செல்வது எக்காலம்
நல்லமனம் நலியாமல்
நாமிருப்பது எக்காலம்.

340. வாழ்வின் முக்கியமான தருணங்கள் பூக்களால் சிறப்பெய்துகின்றன.. வருடந்தோறும் வரும் பிறந்தநாளைத் தங்கள் மன(ண)ம் நிறை வாழ்த்துகளால் சிறப்படையச்செய்த என் நட்பூக்களுக்கு மனம் நெகிழ்ந்த  நன்றிகள். வாழ்க வளமுடன். :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

9 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு. அனைத்தையும் இரசித்துப் படித்தேன்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. கணினியின் அகலம் முழுவதும் ஆக்ரமிக்கும் பதிவின் எழுத்துக்கள் படிக்கச்சிரமமாய் இருக்கிறது. ஏதாவது செய்யுங்களேன் பதிவர் ஒற்றுமை ஓங்குக,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எதுவும் இல்லையே ஐயா... http://honeylaksh.blogspot.in/2015/07/blog-post_29.html?m=1 இப்படி வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்களேன்... நன்றி...

      நீக்கு
  4. நன்றி எழில்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி டிடி சகோ

    திருத்தி விட்டேன் பாலா சார். அகலத்தை டெம்ப்ளேட் வடிவமைப்பான் மூலம் மாற்றி உள்ளேன். இதை முன்பொருசமயம் எனக்கு தொலைபேசி மூலம் கற்றுத்தந்த ராமலெக்ஷ்மிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. என் டேஷ் போர்டில்காணும் பதிவைச் சொடுக்கினால் இன்னும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.ஆனால் டிடி சொன்னபடி யுஆர் எல் ஐ மாற்றினால் கணினிக்குள் பதிவு அடங்குகிறது. இதே பிரச்சனை வலைச்சரம் எழுதும் சாமானியனின் வலைத் தளப் பதிவுகளிலும் வருகிறதுபடிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. ஒரு நிரந்தர தீர்வு இருக்கிறதா.? பதிவர் ஒற்றுமை ஓங்குக,

    பதிலளிநீக்கு
  7. எனக்கு ஒரே போல் தெரிகிறது. இன்னும் என்ன செய்வதென்று தெரில பாலா சார். :(

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...