தன்னைக் கெடுத்தவனை மணந்து வாழ்வது புதிய பாதை. தன்னைக் கொன்றவனுடன் வாழ்வது பிசாசு. மிஷ்கினின் இந்தப் படத்தைப் பார்த்ததும் பல்வேறுபட்ட உணர்வுகள் ஏற்பட்டன.சீனுக்கு சீன் இன்சுக்கு இன்ச் இது ஒரு நல்ல பிசாசுப் படம்.
நல்வழியில் நடந்தாலும் அடுத்தவருக்கு எந்தத் துன்பமும் தரக்கூடாது என்று எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் ,நமக்குத் தெரியாமலே நாம் மாபெரும் குற்றமும் செய்திருக்கக்கூடும் என்ற அச்சத்தைக் கிளப்பியது படம். ஒரு சின்ன காட்சிப் பிழைதான். அதற்கு மூலகாரணம் ஹீரோதான். ஆனால் அந்த இடத்திலும் அவர் காரில் ஒலிக்கும் செல்ஃபோனைக் காரை விட்டிறங்கித்தான் பேசுகிறார். அதற்குள்ளே ஒரு சின்ன ஸ்லிப். அதனால் ஒற்றைக் கால் ஸ்லிப்பருடன் இறக்கிறார் நாயகி ப்ரயாகா.நாயகன் நாகா காப்பாற்ற ஓடி வருகிறார். ஆட்டோவில் ஏற்றிப் பறக்கிறார்கள். வழியில் சிவப்பு பச்சை தகறாறு. கடைசியில் சிவப்புத்தான் மூலகாரணம் என்று தெரிய ஹீரோ தற்கொலைக்கு முயல தெய்வீகப் பிசாசு முடிவை நிர்ணயிக்கிறது.
படம் முழுக்க நல்ல மனிதர்கள் நல்ல மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமே. வல்லரசுநாட்டுக் கொடியில் உடை உடுத்திய ஒரு காமெடியரும் அவருடன் இரு கைத்தடிகளும் மட்டுமே கொஞ்சம் அந்நியம். பிசாசு ஓட்ட வருபவர்கள் பிசாசால் ஓடிப்போவது வித்யாசம்.
மகேசு அம்மாவும், சித்தார்த் அம்மாவும், மகேசும், சித்தார்த்தும், பவானியும் அவரது தந்தை ராதா ரவியும் , ஆட்டோ ட்ரைவரும், நாகாவின் இரு தோழர்களுமே படத்தின் மெயின் காரெக்டர்ஸ். இவர்களையும் இசையையும் வண்ணங்களையும் உணர்வுகளையும் வைத்தே பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மிஷ்கின்.
சித்தார்த்தும் பவானியும் நேசிக்கத்தக்கவர்கள் என்றால் ராதா ரவி சான்ஸே இல்லை. கொள்ளை கொள்கிறார். கூடவே நம்மையும் கதறவைக்கிறார். அவரோடு சேர்ந்து தவழ்ந்து கண்ணீர் விட்டபடி அடுப்படி அலமாரிகளையும் எலக்ட்ரிக் சிம்னியையும் துழாவுகிறோம் நாமும். ”என் தெய்வமே ..என் கூட வந்திரு.. எனக்குன்னு யாரிருக்கா.. ஏம்மா இங்கே இருக்கே .”என்று கதறும்போது தன்னையறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல வழிந்து கொண்டிருந்தது. மகளின் கைகள் தந்தையின் தலையை வருடுவது நம் தலையையே வருடிக்கொடுப்பது போலிருந்தது.
மிகச் சிறந்த நடிகர் என்று சொல்வதா மிகச் சிறந்த தந்தை என்று சொல்வதா. அவ்வளவு கச்சிதம். தன் வாழ்நாளுக்கான ஒரு படத்தில் ராதாரவி மாபெரும் முத்திரை பதித்துவிட்டார் என்றே சொல்லலாம். “ கடவுளே இவங்க ரெண்டு பேரையும் ஏன் சேர்ந்து வாழ விடாம பண்ணிட்டே “ என்று மேல் நோக்கிக் கூவும் போது நம் நாக்கும் மேலண்ணத்தோடு ஒட்டிக் கொள்கிறது. விழுங்க இயலா துயரத்தை அவர் மூலமே கடக்கிறோம்.
ப்ரயாகா சௌந்தர்ய தேவதை. இன்னும் கொஞ்சம் பார்த்திருக்க மாட்டோமா என்று நினைக்க வைக்கிறார். அப்பா என்று அவர் அலறியபடி உயிர்விடும்போது அமானுஷ்ய சப்தமெழும்பி நம்மை அதிர வைக்கிறது. தான் இறப்பதற்குத் தனக்குத் தெரியாமல் காரணமாகிவிட்ட நாகாவின் வீட்டில் குடிபுகுந்து களேபரப்படுத்துகிறார் ப்ரயாகா. மகேசுடன் விளையாடுவது, அவர் வரும் நேரமெல்லாம் விளக்குகள் மங்கி ஒளிர்வது, போலிசிடம் நாகா கேட்கும்போது ஒரு பாட்டி வெறித்து விழிப்பது, கீழ்வீட்டு அடாவடிக்கார கணவனைப் போட்டு சாத்துவது , திருட வரும் வல்லரசு நாட்டுக் கொடி வண்ண சட்டை அணிந்த் ஆளுக்கு கத்திக் குத்து, அம்மா வந்தவுடன் அமைதி, அதன் பின் அம்மாவைக் காப்பாற்றுவது, தந்தையின் சிகரெட் பெட்டியை எடுப்பது, ஐஸ் ஃபேக்டரியில் ஓடிவந்து நாகாவின் காலைப்பற்றுவது என்று ஒரே அல்லோல கல்லோலம்தான்.
வழக்கமாக மிஷ்கின் படங்களில் வருவது போல ஹீரோ ஒரு பக்கம் தலைமுடி வழிய ஒரு பக்க தலையை சாய்த்தபடி வருகிறார். ஒல்லியான கெச்சலான கடகடவென ஓடும் ஸ்டைலை உடைய ஹீரோக்கள். வளப்பமான ஹீரோயின், ஆனால் மஞ்சள் ட்ரெஸ் டான்ஸ் மிஸ்ஸிங். ஒருவேளை பிசாசுகள் ஒப்புக்கொள்ளவில்லையோ என்னவோ :)
அடியாள்கள் வருகிறார்கள். ஆனால் பிசாசுதான் கத்திக்குத்துகிறது. போலீசார் இருக்கிறார்கள். சப்வேயில் குட்டிப் பெண் பாடும் தத்துவப் பாடல் தமிழச்சி எழுதி இருக்கிறார். அருமை.
த்ரில்லைக் கூட்ட வழக்கமான இருட்டுக் காட்சிகளும் அந்த ஐஸ் ஃபேக்டரி காட்சிகளும், ஆட்டோ புரளும் காட்சிகளும் உதவி இருக்கின்றன. அன்புப் புன்னகையில் ப்ரயாகாவும். பாசப் பிணைப்பில் ராதாரவியும் முத்திரை பதித்திருக்கிறார்கள். பிசாசைப் பார்த்ததும் நாகாவின் முகபாவனைகளும், அவர் குளிக்கும்போது சுவரில் கைகளை அழுத்தப் பதித்துக்கொள்வதும், சோக வயலின் வாசிப்பதும், அம்மாவிடம் உரையாடுவது, பிசாசிடம் கோபித்துக் கொள்வது , பவானியின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்பது என பல இடங்களில் நடிப்பு அற்புதம் என்று சொல்லத் தோன்றுகிறது.
மிகச் சிறந்த ஒலி, ஒளிப்பதிவு, இசை. வசனம் படத்தின் பெரிய பலம். ராதா ரவி எதிர்பாராத சர்ப்ரைஸ். சித்திரம் வரைஞ்சது போல ஷாட்டுக்கு ஷாட் ஆப்பிள் ஓவியம், மணி ப்ளாண்ட், செருப்பும் கோமாளியும், பச்சை சிவப்பு சிக்னல், பச்சை சிவப்பு கார், பச்சை குடம் சிவப்பு உடை, உருண்டோடும் பச்சை ஆப்பிள்களோடு ஒற்றை சிவப்பு ஆப்பிள், என வண்ணங்கள் மூலமே மிஷ்கின் கதையைப் பற்றிய சமிக்ஞை தருகிறார். மிஷ்கினின் தொப்பியில் இது இன்னுமொரு சிறகு. மனிதர் சாதித்துக்கொண்டே செல்கிறார். உலகத் தரத்தில் படம் கொடுத்து தமிழ் சினிமாப் பிரியர்களையும் ரசனைகளின் உயரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் என்பதைப் பார்த்ததும் குழந்தைகளும் பார்க்கும்படியான நல்ல படங்களைக் கொடுத்து மறைந்த ராமநாராயணன் நினைவுக்கு வந்தார்.
இந்தப் படத்தைப் பற்றி எழுதிவிட்டு பிசாசுக்கான படங்களைத் தேட கூகுள் இமேஜஸ் போனேன். பொதுவா அந்தஅந்தப் படத்துக்கு அவங்களே அமைச்ச பக்கங்கள்தான் திறக்கும். இதில் இமேஜஸ் என்று பொதுவாக வந்தது. திறந்து பார்த்தால் குபீரென சிரித்துவிட்டேன். பிசாசு என்று யார் எல்லாம் பேசி, எழுதி இருக்கின்றார்களோ அவர்கள் படம் எல்லாம் இருக்கு. இந்தியாவின் கீழ்ப்புறமுள்ள நாட்டுத் தலைவர் மட்டுமல்ல, தமிழகத் தலைவர்கள் படமும் இருக்கு. என்ன மாதிரி கலெக்ஷன்ல கூகுள் இதையெல்லாம் சேர்த்துச்சுன்னு நினைச்சுக்கிட்டே இரண்டு படம் எடுத்தேன். அப்போதான் தோணுச்சு,அடுத்து யாரும் பிசாசுன்னு கூகுள் டைப் பண்ணா ஒரு வேளை இது என் ப்லாக் படத்தையும் கூட காட்டும்னு. ஹாஹாஹா.
பெண்கள் எல்லாமே தெய்வீகப் பிசாசுதான். தைரியமா பிசாசுன்னு டைட்டில் வைச்சு அருமையான படம் எடுத்து வெளியிட்ட நண்பர் மிஷ்கினுக்கும் , நடிகர்களுக்கும் குழுவுக்கும் வாழ்த்துகள்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.
2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.

நல்ல விமர்சனம் அக்கா...
பதிலளிநீக்குநானும் பார்த்திட்டேன் ..சூப்பர்ப் மூவி ..உங்க ரிவ்யூ fantastic அக்கா
பதிலளிநீக்குரசனையான விமர்சனம் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி குமார் சகோ
பதிலளிநீக்குநன்றிடா ஏஞ்சல்
நன்றி தனபாலன்சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!