எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஜனவரி, 2015

கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.


121. தெரிந்தவர் தெரியாதவர்
பேதமற்று இதழ் மலர்கிறது.
பேருந்தின் முன்சீட்டில்
பூத்த குழந்தை. 
 
122. தெரியாமல் செய்துவிட்டதுதான்
தெரியாமல் பின் தொடர்ந்துவந்திருக்கிறது

தெரியாமலே கலங்கிக்கொண்டிருக்கிறேன்

தெரியவைக்காமல் போகாது

தெளிந்தெழவும் விடாது

துரத்திக்கொண்டிருக்கிறது. 

123. எத்தனையோ ராஜா ராணிகளைப் பார்த்த அந்த நிலவு
அந்த உப்பரிகையின் அருகில் அன்று
எங்களையும் பார்த்தது..



124. அன்பு நட்பு காதல் காமம் பாசம் குடும்பம் என்ற பாசாங்குகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஒவ்வொரு போர்வையும் கழன்று விழும்போது அதன் கீழிருக்கும் இன்னொரு போர்வை மறைத்துவிடுகிறது அவர்களின் ஆழ்ந்த சுயநலத்தை.

125. மழைபெய்து உருவாகும் குட்டி ஓடைகளைப் பெருநதி என்ற மிதப்பில் காகிதப் படகுகள் கடந்துபோகும்போது யதார்த்தக் கற்களில் முட்டிக் கவிழ்கின்றன. வெம்பூக்களைப் பூக்கத்துவங்கும் வெய்யிலின் முன் நிற்க முடியாமல் காய்ந்து காணாமல் போகின்றன அவ்வோடைகளும்.

126. சூழும் நட்பின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்துக் காற்றோடு கைகுலுக்கி மகிழ்கின்றன இலைகள்.

128. சிலரை சிலருக்கு எதிரானவர்களாக திசை திருப்புதல் சிலருக்கு எப்படியோ சாத்யமாகிறது. 

129. நாய் வளர்க்கிறேன்னு இந்தக் கீழ் வீட்டுக்காரங்க படுத்துற பாடு. லோப்ல லேதுன்னு வீட்டுக்கு உள்ளே நுழையிற அத எத்துறதும் வாயைக் கட்டிப் போடுறதும். வீட்ல யாருக்கு யார் மேல கோவம் வந்தாலும் அதப் பார்த்துக் கத்துறதும். முடில சாமி.

நாம் கீழ இறங்கி போனா அது ஓடிவந்து சுத்துது. திகில்ல நமக்கு மூச்சு கூட சரியா வரமாட்டேங்குது. டர்னா மத் ஆண்டி குச் பீ நஹி கரேகா ந்னு சொல்றாங்க. டேய் அது உங்களை ஒண்ணும் பண்ணாதுடா. எங்கள கசாப்பு ஆக்கிடாம பார்த்துக்குங்க. அவ்வ்வ்வ்.. அடுத்து யாரும் நாய் வளர்க்காத வீட்டுக்குக் குடி போகணும்.


130. தெலுகு வாடு கீழ் வீட்டம்மா தினமும் சிரிப்பாங்க பாருங்க எனக்கு ஜீன்ஸ் படத்துல ஐஸு வோட அம்மா சிரிக்கிற மாதிரி இருக்கும். சமயத்துல என் எஸ் கிருஷ்ணன் பாட்டு மாதிரி ஒரே சங்கீதச் சிரிப்பா இருக்கும். சில சமயங்கள்ல ஆவிப் படங்கள்ல வர்ற பெண்கள் சிரிக்கிற மாதிரியே இருக்கும். பட் டெய்லி பத்து தரமாவது சிரிப்பாங்க. பாஷை புரியாது எதுக்கு சிரிக்கிறாங்கன்னு. ஆனா சிரிப்பு சிலிர்ர்ர்ர்ர்ப்ப்பூஊஊஊ .

131. தெரிந்த ஒரு இடம் விளையாடிக் களைத்த பொம்மையைப் போல் நம் சுவட்டைச் சுமந்திருக்கிறது. ஒரு சில பருவங்களுக்கும் மேல் நாம் அவற்றை என்னுடையது என்று தூக்கிச் சுமக்கிறோம் யாருக்கும் கொடுக்காமல். அவை நமக்கு ஆதாரமா நாம் அவைக்கா என்பது அழுக்கடைந்தாலும் நம்முடனே சுற்றும் பொம்மைகள் போல சுவாரசியமானவை.  

132.பேச்சுல ஏதோ ஒண்ணை உருவி எடுத்து மிஸ்டேக்.
பேசாட்டி மண்டைக்கனம்.
ஓ மை கடவுளே.எனக்கு ஏன் பேசுற சக்தி கொடுத்தே.


#‎சொந்தக்காரங்க_எனக்கு_ரொம்பப்பேருங்க_
நான்_பெரிசா_மதிக்கிறது_உங்க_அன்பைத்தானுங்க‬

133. டாக்டர் :- 25 வயசுதான் ஆகுது. அதுக்குள்ள கண்ணு தெரியலையா.

பேஷண்ட். :- பொறந்தவுடனேயே செல்ஃபோன்ல கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சேன். சினிமா, வீடியோ, பாட்டு, ஃபேஸ்புக், வாட்ஸ்ஸப் பார்த்து வளர்ந்தேன்.

டாக்டர் :- இதுக்கப்புறமும் செல்ஃபோனை கையில வச்சிருக்கீங்களே ஏன்.

பேஷண்ட் :- யாராவது ப்ரெய்லீல ஏதும் கண்டுபிடிச்சு அனுப்புவாங்கன்னுதான்.

டாக்டர் :- ?!


134. நண்பர் 1. :- உங்க வீட்ல வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டீங்க.

நண்பர் 2. :- எங்க வீட்ல வேலைக்கு ஆளே இல்லைங்க.

நண்பர் 1:- அப்போ பெருக்க வந்து துடைப்பத்த கம்ப்யூட்டர் டேபிள்ட போட்டுட்டு அழுக்கு சேலையோட உக்கார்ந்து ஃபேஸ்புக் பார்க்கிறது யாரு.

நண்பர் 2 :- உஷ்.. மெல்லப்பேசுங்க அது என் வொய்ஃப்..

நண்பர் 1. :- ?!

135. கடல் ஒரு ஆழமான விலங்கைப் போலப் பதுங்கி இருக்கிறது.. கரையிலிருந்து பார்க்கும்போது விசிறியடிக்கும் அலைச்சிரிப்பு அதன் கோரைப்பற்களாகவும் எப்போதோ உருக்கொள்கிறது. மலைப்பாம்பைப் போல உருண்டு கிடைத்த இரைகளை விழுங்கியபின் ஜீரணிக்க ஏலாமல் அசையாமல் கிடக்கிறது.


அதன் கடிவாயிலிருந்து கப்பல்கள் தப்பித்துவிட எப்போதோ இரையாகும் பறவைக்குஞ்சுகள் போல விமானங்கள் அதன் மேல் பறந்து செல்கின்றன. எப்போது பசியெடுத்து விழுங்கும் எனத் தெரியாத நீலத் திமிங்கிலம் போல் வால் அலையைச் சுருட்டியபடி காத்திருக்கிறது அந்தக் கடல்.

136. இறக்கைகள் உண்டு..
பறக்க முடியவில்லை..
உன் அன்பெனும் சிறையில் நான்.

137.15 சாதனையாளர்களுடன் ஒரு பெண் சாதனையாளராக என்னையும் கௌரவித்து விருதும், விருந்தும் அளித்த ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும்., திரு தாமோதர் சந்துரு அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

138.புன்னகை உன் இதழில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல சிறகடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க பறந்து என் இதழ்களிலும் வந்தமர்ந்தது.

139. நித்தமும் எதையோ தேடி அலைகிறது பட்டாம்பூச்சி.. நினைத்தது கிடைத்து விட்டாலும் இறக்கையை முடக்குவதில்லை.

140. 1. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி.
2. மந்திரப்பூனை - வைக்கம் முகம்மது பஷீர்.
3. ஆத்ம சோதனை - மார்க்க அரேலியர் ( இராஜாஜி)
4. குற்றமும் தண்டனையும் - ஃபியோதர் தஸ்தாவ்யெஸ்கி( சுசீலாம்மா)
5. சிவகாமியின் சபதம் - கல்கி
6.ஏழை படும் பாடு - விக்டர் ஹியூகோ
7. முக்கஜ்ஜீய கனஸுகளு - சிவராம காரந்த்
8. மோகமுள் - தி ஜானகிராமன்
9. ஒரு குட்டித்தீவின் வரைபடம் - தோப்பில் முகம்மது மீரான்.
10. மொட்டு விரியும் சத்தம் - பி. லங்கேஷ் ( கா நல்லதம்பி )

-- இவை எல்லாம் நான் படித்ததில் மிகப்பிடித்தது. புதுமைப்பித்தன், ந பிச்சமூர்த்தி, கு ப ராஜகோபாலன், ஜெயகாந்தன், சுஜாதா, வண்ணதாசன், வண்ணநிலவன், வாஸந்தி, சி. சு. செல்லப்பா, லெக்ஷ்மி, பாலகுமாரன், எம் எஸ் உதயமூர்த்தி இவர்களின் அனைத்து படைப்புகளும் பிடிக்கும். இன்னும் அநேகர் இருக்கிறார்கள். கோமகள், புனிதன். இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். நாம் படித்த நூல்களைப் பகிர்வதால் மற்றவர்கள் அறிய முடியும் என்பதாலும் நம் நண்பர்கள் மூலம் இன்னும் பல நூல்களை நாமும் அறிந்து கொள்ள முடியும் என்பதாலும் இங்கே பகிர்கிறேன்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.



5 கருத்துகள்:

  1. பேஸ்புக்கிலிருந்து இங்கேயா... அதான்! படிச்ச மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே அருமையாய் இருக்கு தேனக்கா.

    பதிலளிநீக்கு
  3. ஆம் ஸ்ரீராம் இடுகை மோகம் :)

    நன்றிடா அம்மு

    நன்றி தனபால் சகோ :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...