எனக்குள்ளும்
ஒரு
நாற்றங்கால்
தலையசைக்கும்
களையெடுக்க
அவசரிக்கும்
நிலம்விரும்பி
நீருறிஞ்சி
வேர்க்கையால்
நன்றி கூறி
உரம்
வளர்க்கும்.
கர்மயோகியாய்க்
குண்டலியை
நெற்றியில்
நிறுத்தித்
தலைவணங்கிக்
கிடக்கும்
நெற்பயிர்.
அனுபவத்தின்
முடிவுரையாய்
வெளுத்து
மஞ்சள்
தட்டி
அருள்
சேர்த்து
அள்ளித்தரப்
பரபரக்கும்
நாற்றங்கால்
எனக்குள்ளும்.
**************************
மழையின் சரக்கம்பிகளாய்
சொட்டுச்
சொட்டாய்
உதிர்ந்து
வீழும்.
அதன்பின்
தெரியும்
ஆகாய
வெளுப்பாய் முதுமை.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
அருமையான கவிதைகள் அக்கா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
சிந்தனைக்குறிய அருமையான வரிகள் சகோ..
பதிலளிநீக்குதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
அன்புடையீர், வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/02/blog-post.html
அருமை...
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குதொடருங்கள்
மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html
அருமையான கவிதை.
பதிலளிநீக்குநன்றி குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நன்றி கலையரசி வலைச்சரப் பகிர்வுக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி கலையரசி :)
நன்றி தனபாலன் சகோ
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி வெங்கட் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!