எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 ஜனவரி, 2015

குங்குமம் தோழியில் மலருக்குப் பிடித்த பெண் பதிவர்கள்.



நட்புகளில் இவர் நன்று ,இவர் சரியில்லை என்ற பேதம் பார்ப்பதில்லை நான்...எல்லோரிடமும் ஏதோ ஒரு தனித்துவம் உண்டு என்பதை அவர்களின் பதிவுகளின் மூலம் அறிந்து ,படித்து , ரசித்து வருகிறேன் நாள்தோறும்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்று சொல்லும் வகையில் பலதரப்பட்ட நட்புக்களும் அவர்களின் எண்ணங்களும் இங்கே வெகு அழகாக வெளிப்படுகிறது.அவர்களில் என்னை அதிகம் ஈர்த்த சில பதிவர்களைக் குறித்து இங்கே சொல்ல விரும்புகிறேன்.

தேனம்மை லெட்சுமணன்
*************************************
- ஒரு சக பிளாக்கர் ஆக இவர் 2009 தில் எனக்கு அறிமுகம் ஆனவர்.(அவருக்கு அப்போ என்னைத் தெரியாது) ..அப்போது அவர் பதிவுகள் சில வாசித்தது உண்டு...பின்பு முகப்புத்தகம் வந்து சில மாதங்களில் எனது நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.அவர் பதிவுகளில் கட்டுரைகளும் , கவிதைகளும் தொடர்ந்து வெளிவந்து என்னை அவர் ரசிகையாக மாற்றியது உண்மை.நல்ல கலாரசிகரும் கூட.. சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த அவர் வரிகள் ''அழகு முதுமை வரை தொடர்கிறது. அறிவு மரணம் வரை தொடர்கிறது. அன்பு அதற்குப் பின்னும் தொடர்கிறது.''

இவருக்கு நான் வைத்த பெயர்-கவியம்மை


உமா கணேஷ்
**********************
- ஒரே ஊர், ஒரே கல்லூரியில் படிப்பு .... எனக்கு இரண்டுவருட ஜூனியர் ..அப்போ எனக்கு அறிமுகம் கிடையாது ..ஆனால் முகப்புத்தகம் எங்களை அன்பால் இணைத்தது. நல்ல தோழி. நல்ல பதிவர்..கவிதைகள், கட்டுரைகள் என பயணித்து வரும் படபட பட்டாசு ....

இவருக்கு நான் வைத்த பெயர் -பட்டாசுச்செல்வி

கீர்த்திகா தரன்
***********************
- கடந்த ஒரு வருடமாகத் தான் இவர் எனக்கு அறிமுகம்..சக நட்புக்களின் பக்கங்களில் இவர் போடும் கமெண்ட்டுகள் வாயிலாக இவர் மனம் படித்து ,பிடித்து எனது நட்பு வட்டத்துள் கொண்டு வந்தேன்..நிறைய சமூக அக்கறை இருக்கும் இவர் பதிவுகளில்..நிறைய தளங்களைத் தொட்டு எழுதக் கூடியவர். எழுத்து நடையும் அருமை.

-இவருக்கு நான் வைத்த பெயர்-மல்ட்டிகலர் மங்கம்மா

நித்யா கந்தசாமி
**************************
- நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதும் ஆற்றல் பெற்ற அருமையான தோழி..நிறைய பதிவுகள் என்னைப் பெரிதும் ஈர்த்தது என்றால் மிகையாகாது.சமீபத்தில் உறவுகளுடன் அவரின் பிணைப்பு பற்றி எழுதிய பதிவு வெகு ஜோர். சற்று மனம் சுணங்கும் நேரம் இவர் பதிவுகளைக் காண நேரிட்டால் உடனே என்னை மறந்து ,ரசித்து, சிரித்து , பதிலுக்கு நையாண்டி பதில் போடுவது என் வழமை. இவரின் பரம விசிறி நான் என்பதே உண்மை.

இவருக்கு நான் வைத்த பெயர் கலகலாவல்லி

தமிழ் அரசி
*******************
- ஆம் ..பெயருக்கு ஏற்றார் போல் இவர் தமிழுக்கு அரசி தான். நல்லதோர் எழுத்தாற்றல் இவரிடம் உண்டு. கவிதாயினி..அழகிய வரிகளில் , வார்த்தை ஜாலங்கள் காட்டி காதலை அழகாய்க் கொணர்பவள் .தினமும் இவள் காதல் கவிதைகள் கண்டு ரசித்துக் களிப்பவள் நான்.சில நாட்கள் காணவில்லை என்றால் எங்கே தமிழ் என மனதுக்குள் கேள்வி எழுப்ப வைப்பவள். வெகு சமீபம் வந்தும் நேரில் காண முடியாமல் போனதில் பெரும் வருத்தம் உண்டு அதைவிட வருத்தம் அவளின் அதிரூபனை இன்னும் எனக்குக் காட்டாமல் இருப்பது.

இவருக்கு நான் வைத்த பெயர் கவியரசி

கமலி பன்னீர்செல்வம்
************************************
- இவரின் வரைவுகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.எதார்த்தங்களை எதார்த்தமாய் , அதே நேரம் ஆணித்தரமாய்ச் சொல்லும் புரட்சிகரமான தோழி.நல்லதோர் எழுத்து நடை இவரிடம் உண்டு.அதுவே அவர்பால் என்னை ஈர்த்தது.

இவருக்கு நான் வைத்த பெயர் எதார்த்த வல்லி

சுமிதா ரமேஷ்
**********************
இவரின் பதிவுகள் வாசிக்க ஆரம்பித்தவுடன் அவரின் ரசிகையானேன். அவ்வப்போது வெளி வரும் இவரின் கவிதைகளும் மிக நன்று..சமீபத்தில் படித்து ரசித்தது மசால் வடை பற்றிய ஒரு புதுக்கவிதை. ''மனங்கவரும் மசால் வடையே ! மயக்கும் மாலைப்பொழுது உன் வசமே!..'' வாய்விட்டுச் சிரிக்க வைத்த வரிகள் , நிறைய ரசிக்கவும் வைத்தது.

இவருக்கு நான் வைத்த பெயர் குட்டி கவியரசி

காயத்ரி வைத்தியநாதன்
***********************************
- நீண்ட நாள் தோழி..நிறைய சமூக அக்கறை உள்ளவர் ..அவரின் பதிவுகளிலும் அது வெளிப்படும் .கவித்துவமாயும் எழுதும் ஆற்றல் பெற்றவர்.இவர் என் தோழி என்பதில் நிறைய மகிழ்ச்சி உண்டு எனக்குள்.சமீபத்தில் இவர் ப்ளாக்கில் ''இயற்கைக்கு எதிராகும் பக்தி..!!! '' என்ற பதிவில் பக்தி பற்றி இவர் எழுதி அதை சுற்றுச்சூழலோடு இணைத்து அதனால் விழையும் பாதிப்புகளை உணர்தியவிதம் மிகவும் அருமையாக இருந்தது.

இவருக்கு நான் வைத்த பெயர் பக்திச் செல்வி

நிர்மலா ஸ்ரீதரன்
***********************
...வெகு எதார்த்தமான பதிவுகளால் அவரை ரசிக்க வைத்த தோழி..முகப்புத்தகம் திறந்தாலே நான்கு அல்லது ஐந்து வரிகளில் கச்சிதமாய்ச் சொல்ல வந்ததை அழகாய்ச் சொல்லி இருக்கும் இவரின் கருத்துக்கள் தான் முதலில் கண்ணில் படும். பேசிப் பழகியது இல்லை..ஆனால் மிகவும் பிடித்த தோழிக்கு நான் மனதுள் வைத்த பெயர் ''நச் நிர்மலா.''

சுந்தரி விஸ்வநாதன்
*******************************
- அதிகம் அறிமுகம் இல்லாத அதே நேரத்தில் தினமும் எனக்கு காலை வணக்கம் சொல்லும் சக தோழி இவர். திருக்குறள் வடிவில் இவர் போடும் (பெரும்பாலும் ) இரண்டு வரி , சின்ன சின்ன பதிவுகள் வெகு அழகு.

இவருக்கு நான் வைத்த பெயர் லேடி வள்ளுவி..

இப்படியாகத்தான் ரசனையுடன் வாசிப்புடனும் கழிகிறது என் ஃபேஸ்புக் வாழ்க்கை. இதில் என்னை அனுதினமும் தங்களது பதிவுகளால பாராட்டி சீராட்டி வளர்க்கும் அனைத்து தோழிகளுக்கும் அன்பும் அணைப்பும் வாழ்த்தும்

-மலர்விழி ரமேஷ்


-----   Thenammai Lakshmanan மலரு வழக்கம்போல கலக்கலா எழுதிட்டீங்க. ஆனா மேலே ஒரு காப்ஷன் கொடுப்பீங்கள்ல அது மிஸ்ஸிங்.. அதுவும் எனக்குப் பிடிக்கும். அதுக்காவே படிப்பேன். எங்க முகத்தை எல்லாம் உங்க இன்சொல்லால மலர வச்சதுக்கு நன்றி நன்றி நன்றி மலரே. நன்றி குங்குமம் தோழி. ! ( என் பேர் முதல்ல உங்க ஞாபகத்துல வந்ததுக்கும் எனக்கு முதன் முதலா கவியம்மைன்னு பட்டம் கொடுத்ததுக்கும் ஆயிரம் முத்தங்கள் மலர். :)

வாழ்த்துகள் மலர்க்கரம் பட்ட தோழியர் அனைவருக்கும். :)


6 கருத்துகள்:

  1. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் அக்கா...
    கலக்கலான பட்டப்பெயருடன்... சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி நிகண்டு

    நன்றி குமார் சகோ

    நன்றி தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. அசத்தலான புனைப்பெயருடன் அருமையான கலக்கல்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...