எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 ஜனவரி, 2015

TAK3N (->T4KEN ) CINEMA REVIEW. டேக்கன் 3. சினிமா எனது பார்வையில்.

என்ன ஆக்‌ஷன் மூவிஸ் எல்லாம் பார்ப்பீங்களான்னு கேக்குறீங்களா. முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைச்சா அதுவும் ஹைதராபாத்  ஃபோரம் மால்ல பார்க்குற சான்ஸ் கிடைச்சா விடுவீங்களா என்ன. ?

ஆக்சுவலா நான் லியம் நீஸனின் டேக்கன் 1, டேக்கன் 2 இரண்டும் பார்த்துட்டு ரசிகையா ஆகி இருந்தேன்.
அடுத்து டேக்கன் 3 வந்ததும் பையன் பாருங்கம்மான்னு இண்டர்நெட்ல புக் பண்ணி கொடுத்தான். என்ன சந்தோஷம்னா அடுத்து டேக்கன் 4 வருதாம். டேக்கன் 5 வரைக்கும் ப்ளான் பண்ணி இருக்காங்களாம்.

நம்மூரு கமல் மாதிரி எனக்கும் என்னவருக்கும் ரொம்பப் பிடிச்சவர் லியம் நீஸன் அந்த ஒரு மனுஷனோட நடிப்பு, & ஆக்‌ஷனுக்காகவே பார்ப்போம். தலைவர் பார்க்குற எல்லா ஆங்கிலப் படத்தையும் கூடவே போய் பார்த்திடுறது.

ஆங்கிலப் படங்களில் இப்போவெல்லாம் குடும்பப் பாசம்தான் மையக்கதை.லியம் நீஸன் ஒரு முன்னாள் சிஐ ஏ ஏஜெண்ட்.இவருக்குத் தொழில் முறை  எதிரிகள் அதிகம். டேக்கன் 1 ல (2008 ) மகா நதி கமல் மாதிரி  உலகளாவிய பாலியல் வியாபார கும்பலால் கடத்தப்பட்ட தன்னோட மகளைத் தேடிப் போய் கண்டுபிடிப்பார். ஒரு படகுல இருக்குற பணக்கார அரபு நாட்டு  வில்லனைக் கொன்னுட்டு மகளைக் காப்பாத்துவார். 

டேக்கன் 2 ல ( 2012 )  மனைவியும் மகளும் கடத்தப்பட மகளை முதல்ல விடுவிச்சு மனைவியோட கடைசியா பயங்கர சாகசம் எல்லாம் பண்ணி மகள் உதவியோட தப்பிச்சு வர கதை. இந்த வியாபாரத்தின் பின்னணியில் இருந்து செத்துப் போன ஒரு ஆளோட அப்பா அதுல வில்லன்.

ப்ரையன்  “நான் கொல்லப் போறதில்ல” என்னும்போது ”பகையை மிச்சம் வைக்காம தீர்த்துடு”ன்னு வில்லன் உபதேசிப்பார். ஆனா ”நான் ஓடி ஓடி ஓஞ்சு போயிட்டேன்” அப்பிடின்னு சொல்லிட்டு ”இதுக்குபதிலா உங்க குடும்பத்திலேருந்து பழி வாங்க யாராவது வருவாங்க. இது தொடரும் “ன்னு சொல்வார் ப்ரையன். கடைசியா வில்லன் இவரைக் கொல்ல முயற்சிக்க இவர் தற்காத்துக் கொள்ள அவரைக் கொன்னுடுவார்.

டேக்கன் 3 ல இவரை விட்டுப் பிரிஞ்ச மனைவி  லின்னி ( ஃபேம்கி ஜேன்சன் ) இன்னொருவருடன் ஸ்டூவர்ட் ஜான் ( டௌக்ரே ஸ்காட் )  என்பவர் கூட வாழ்கிறார். ஆனா அந்த வாழ்க்கையில் உயிர்ப்பில்லாமல் திரும்பத் தன் முன்னாள் கணவரைத் தேடி வந்து சந்திக்கிறார். அப்போ கமல் பாணியில் யதேச்சையா ஒரு முத்தம் கொடுத்துக்குறாங்க. ஆனாலும் முன்னாள் மனைவி என்பதாலும் அவளுக்குத் தற்போது இன்னொரு வாழ்க்கையும் துணையும் இருக்கு என்பதாலும் கண்ணியமாக விலகுகிறார் ப்ரையன் மில்ஸ். ( லியம் நீஸன் ).

அப்போ அப்போ ப்ரையனும் மகள் கிம்மும் ( மாகி க்ரேஸ் ) சந்திச்சு உரையாடும் இடம் அழகு. மகளுக்காக ஒரு ஆளுயர டெடி பியர் வாங்கி போவார் பிறந்த நாளுக்கு பரிசளிக்க. மகளும் அவளது ஆண் நண்பனும் கூட அதைப் பார்த்துப் புன்னகைப்பார்கள். HOW AWESOME என்று.

தன் மனைவியிடம் சொல்வார் நம்ம மகள் பெரிய பொண்ணாயிட்டா இல்ல. டெடி பியர் வச்சு விளையாடுற வயசு எல்லாம் கடந்துட்டா. என்று. அப்போது மனைவியும் ஆமோதிப்பாய் புன்னகைப்பார். திருமண உறவில் இருந்து பிரிந்துவிட்ட இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக மகள் இருப்பது லின்னியின் கணவன் ஸ்டூவர்டுக்குப் பிடிப்பதில்லை. அவன் வந்து ப்ரையனிடம் தங்கள் திருமண வாழ்க்கைக்குள் தலையிட வேண்டாம் என்றும் தன் மனைவியைச் சந்திக்க வேண்டாம்  எச்சரித்துப் போகிறான்.

 மகள் கிம்,   ஜிம்மி என்ற  ( ஜான் வெஸ்டன் ) ஆண் நண்பரோட சேர்ந்து வாழ்றா. அப்போ கர்ப்பமாயிடுறா. அத தன் தந்தைகிட்ட சொல்ல யோசித்தபடி ஒரு ரெஸ்டாரெண்டில் இருவரும் பேசும் இடத்தில், பக்கத்து டேபிள்ல ஒரு சேட்டைக்காரக் குழந்தையைப் பார்த்துட்டு ப்ரையன் அந்தக் குட்டிப் பையனால எப்பவும் தொல்லைதான் நேரும் பார்த்துக்கோ என்று சொல்வார். உடனே தான் குழந்தை பெத்துக்கப் போறேன்  என்று சொன்னால் தப்பா நினைப்பாரோ என்று பெட் அனிமல் வளர்க்க ஆசைப்படுவதா சொல்வாள். படிக்கிற காலத்துல நீ அந்த பெட் அனிமலுக்கு ( நாய் ) ஃபீட் பண்ணுவியா இல்ல வெளிய டாய்லெட்டுக்கு அழைச்சிட்டுப் போவியா. அது கூட விளையாடுவியா. இதெல்லாம் செய்ய முடியாது படிக்கிற காலத்துல படிக்கணும் என்பார்.

ஒரு நாள் மனைவி சந்திக்க வருவதாக மெசேஜ் செய்து பேகிள்ஸ் ( BAGELS) ( நம்மூரு டோநட் மாதிரி ஒரு சமாச்சாரம் ) வாங்கி வைச்ச சொல்றா. அவசரமா அவர் வாங்கிட்டு வந்து பார்த்தா வீட்டுல படுக்கை அறைல மனைவி லின்னி இறந்து கிடக்கிறாங்க. அப்போ மனைவியைப் பார்த்து அவர் உருகுவது மனசை உலுக்கும்.

அதுக்கு அவர் காரணமில்லை என்றாலும் உடனடியா போலீஸ் வந்து கைது செய்யுது. யாரோ ஃபோன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிடுறாங்க. பக்கத்து வீட்டுல இருக்கவங்களும் இவர் தன்னைக் கொல்ல வர்றதா ஒரு பெண் குரல் கேட்டதா சொல்றாங்க. சந்தேகத்தின் அடிப்படையில் இவரை போலீஸ் கைது செய்ய முயல சாகசமா சண்டை போட்டுத் தப்பிக்கிறாரு.ஒரே ஓட்டம் ஓட்டம் ஓட்டம் துரத்தல்தான். நாய் துரத்துது. துப்பாக்கியால தாறுமாறா சுடுறாங்க. போலீஸ் கார்ல சேஸ் பண்ணி கார்னர் பண்றாங்க. நிறைய இடங்களில் மேப்பிங் செய்து கண்டு பிடிக்கிறாங்க ( போலீஸ் கார்ல இன்னொரு இடத்துல தப்பிக்கும்போது )

எந்தக் கட்டத்திலும் முடிந்தவரை துப்பாக்கி இருந்தாலும் சுடுவதில்லை. தப்பிச்சு ஒரு காருக்குக் கீழே போய் நகரத்தோட மிகப் பெரும்   ட்ரைனேஜ் குழாய் வழியா தப்பிக்கிறாரு. அவருக்குன்னு ஒரு மறைவான பாதுகாப்பான இடம் இருக்கு. அங்கே லாப்டாப் எல்லாம் வைச்சிருக்காரு. சாம்  (லெலாண்ட் ஒர்ஸர் ) என்ற ஒரு அருமையான நண்பனோட உதவியோட குற்றவாளியைக் கண்டு பிடிக்கிறாரு.

 ப்ரையன் தன்னோட முன்னாள் மனைவியின் இறுதிச்சடங்கில் கலந்துக்க விரும்புறாரு. ஒரு பட்டன் காமிரா மூலமா ( நண்பன் சாமை அனுப்பி ) இறுதிச் சடங்கைப் பார்க்குறாரு. அப்புறம் மகளிடம் தன்னம்பிக்கைப் பாடம் சொல்லி தைரியமா இருக்கும்படி அவளது கல்லூரிக்கே சென்று போதிப்பதும் த்ரில் த்ரில். அங்கே போலீஸ் மகளோட உடையில் மைக்ரோ ஃபோனை வைத்திருப்பது தெரிந்தவுடன் அதை ஜாம் செய்து பேசுவதும். அவர்கள் வருவதற்குள் அந்த ஒற்றை வாயில் கதவு  மட்டுமே உள்ள லேடீஸ் டாய்லெட்டிலிருந்து காணாமல் போவது படு த்ரில். போலீஸிடம் தன்னோட அப்பா குற்றவாளி இல்லை என்று கிம் திரும்ப திரும்ப அழுத்தம் திருத்தமாக சொல்லும் இடத்தில் அவர் நடிப்பு அபாரம்.

மகள் கிம் அம்மா  லின்னி இறந்த படுக்கையில் படுத்து மௌனமாய் அழுவதும் அவங்களோட ஸ்கார்ஃபை எடுத்து வருடிக்கொண்டிருப்பதும் கண் கலங்க வைத்தது.அவங்க தன் அம்மாவோட இன்னொரு கணவரான ஸ்டூவர்டை வெறுக்குறாங்க. அவரோட வாழ்ந்த கடந்த இரண்டு வருடங்களில் தான் தன்னோட அம்மாவோட கண்களில் சோகத்தையும் வருத்தத்தையுமே பார்த்ததாகவும் அதுக்கு எல்லாம் அவர்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டுறாங்க. ஆனா அவரோ தான் தன்னோட மனைவியை ரொம்ப நேசிச்சதா சொல்லி அழுகுறாரு.

ப்ரையன் தன் முன்னாள் மனைவியோட  காரில் இருந்து ஜிபிஎஸ் கருவியை எடுத்து  கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்தா அது ஒரு ஹைவேஸ் மோட்டல் ஷாப் மாதிரி ஒரு இடத்தைக் காண்பிக்குது. தன் முன்னாள் மனைவி இறக்கக் காரணமா யார் இருக்கலாம் என்று தேடிச் செல்லும்போது அவங்களைக் காரில் கடத்தியவனின் கையில் நட்சத்திரக் குறியிட்ட டாட்டூஸ் இருப்பதை சர்வைலன்ஸ் சர்க்யூட் காமிராவினால் எடுக்கப்பட்ட வீடியோ  க்ளோஸப்பில் பார்க்கிறார் . ஒருவாறாக யூகிச்சு அது யாரா இருக்கலாம்னு ஸ்டூவர்ட்கிட்ட கேட்கும்போது அவன் ஓலக் மேலென்கோவ்  ( சாம் ஸ்ப்ரூயல் ) நு ஒரு  ரஷ்ய ஆயுத வியாபாரிகிட்ட தான் பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால தன் மனைவியை அவன் கொன்னுட்டதா சொல்றான்.

நடுவில் இரண்டு ரஷ்யன்கள் இவரோட காரை உருட்டி விட்டு விபத்துக்குள்ளாக்குறாங்க. ஆனா பயங்கரமான பாதுகாப்பு ஏற்பாட்டுல தங்கி இருக்க மெலேன்கோவைத் தேடிப் போய் தாக்குறார். சாகுற சமயத்துலயும் அவரை பார்த்து ஹூ ஆர் யூ ஓல்ட் மேன். அப்பிடின்னு கேக்குறான் மேலென் கோவ். அதுக்கு அவர் இறந்தவ என்னோட முன்னாள் மனைவி அப்பிடிங்கிறார். கடைசில ஏன் இந்தக் கொலை நடந்துச்சுன்னு உண்மையைக் கண்டுபிடிக்கிறார்.

மனைவியா நடிக்கிற லின்னி ( ஃபேம்கி ஜேன்சன் ) செம அழகு. சும்மா சிக்குன்னு இருக்கார். அது போல மகள் கிம் ( மேகி க்ரேஸ் ) உணர்ச்சியும் பாசமும் ததும்பும் முகம். எல்லாரையும் விட அந்தப் போலீஸ்காரரா நடிச்சிருக்கும் ஃப்ரான்க் டாட்ஸ்லர் ( ஃபாரஸ்ட் வைட்டேக்கர் ) நல்ல நடிப்பு. பேகிள்ஸ் சூடா இருப்பதை வைச்சும் ஒரு நுண்ணுணர்வு காரணமாகவும் அவர் ப்ரையன் கொலையாளி  இல்லைன்னு கண்டுபிடிக்கிறார். முடிவிலயும் அதையே சொல்றார். அவர் சொல்லும் ஒரு வசனம் “ இந்தாளு ஒரு கோஸ்டாதான் ( GHOST )  இருக்கணும். “ எங்க இருந்தான்னு ஒரு ஹிஸ்டரி கூட கண்டுபிடிக்க முடியலையே  சொல்வார்.

’’I WILL SEEK YOU. I WILL FIND YOU AND I WILL KILL YOU. ’’ இதத்தான் சொல்றாரு படத்துல அப்போ அப்போ. ஆனா நல்ல மனுஷன் என்பதால் க்ளைமாக்ஸ்ல கொல்லாம விடுறாரு. இதுல வில்லனே சொல்றான் அவங்க எல்லாம் வந்துட்டாங்க. அதுனால நீ என்னைக் கொல்ல மாட்டேன்னு. ”அடுத்து அந்தக் குற்றவாளி வழக்கோட இண்டு இடுக்கு ஓட்டைகளின் வழியா தப்பிச்சு வந்துடுவான் . இருந்தாலும் தான் அவனை விடப்போவதில்லை”ன்னு சூளுரைக்கிறார்.இதுதான் டேக்கன் 4 வரப்போகுதோன்னு க்ளூ கொடுத்துச்சு. :)

கட்டக் கடைசியா கிம் அவரோட பாய்ஃப்ரெண்ட் ஜிம்மி, தந்தை ப்ரையனோட ஒரு பாலத்துல அமர்ந்திருக்காங்க. அப்போ அப்பா கிட்ட தான் கர்ப்பமாகி இருக்கும் விஷயத்தை சொல்றார் கிம். தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தா தன்னோட அம்மா பேரை வைக்கப் போவதா சொல்றாங்க. அப்போ ப்ரையன் அவளுக்கும் ( மனைவி )  இது ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லிப் புன்னகைப்பார். ( நாங்க தமிழங்க  எல்லாம் பரம்பரை பரம்பரையா ஆயா அப்பத்தா பேரைத்தான் வைக்கிறோம் அப்பு என்று நினைத்துக்கொண்டேன் :)

முதல் இரண்டு டேக்கன் படத்தையும் விட இந்தப் படத்தில் அப்பா மகள் பாசம் அழகோவியம். மெல்லிய இழையாயிருந்தது இப்போது அழகான பாலமாய் ஆகியிருக்கும். ஒவ்வொரு படத்தின் கதையையும் எவ்வளவுதான் படித்தாலும் அதை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கும் விஷயத்துக்காகவே பார்க்கலாம்.

இந்தப் படத்தின் டயலாக்ஸ் ஒவ்வொரு இடத்திலும் நச்சென்று இருக்கும். எடுத்தவுடனே முதல் டயலாக்கே “ HONEY " என்றுதான் ஆரம்பிக்கும். (என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது ) . லுக் பெஸனின் டயலாக். டைரக்‌ஷன் ஒலிவியர் மெகடன்.

அது என்னவோ தெரில இந்த மாதிரிப் படத்தைப் பார்க்கும்போது எல்லாம் நம்ம கமல்தான் ஞாபகத்துக்கு வர்றார். ரொம்ப பர்ஃபெக்ட் லியம் நீஸன். 62 வயதிலும் சண்டைக் காட்சிகளில் அடிச்சு நொறுக்குறார். கண் முன்னே சில செகண்ட்களில் நடக்கும் சண்டையும் அவரது ஓட்டமும் அசாதாரணம். சாகசம் செய்யவும் ஸ்டண்ட் செய்யவும் வயது ஒரு தடையில்லைன்னு நிரூபிச்சு இருக்கார். 20 CENTURY FOX  தயாரிப்பு & டிஸ்ட்ரிப்யூஷன். . ஆனா உலகளாவிய அளவுல க்ரிடிக்ஸ் இந்தப் படத்துக்கு  ரேட்டிங் கம்மியாதான் கொடுத்துருக்காங்க. இதுல நடிக்க லியமுக்கு 20 மில்லியன் டாலர் சம்பளம். படத்தோட மொத்த பட்ஜெட் 48 மில்லியன் டாலர். ஆனா முதல் வாரத்துலேயே 113 மில்லியன் கலெக்‌ஷன் கல்லா கட்டிருச்சு. க்ரிட்டிக்ஸ் தீர்ப்பையும் தாண்டி பொதுமக்களோட தீர்ப்பு ஜெயிச்சிருச்சு. !!!

TAK3N . IT ENDS HERE னு போட்டிருக்காங்க.  BUT EXPECTING  TO  SEE T4KEN & TAKVN  :) 

இந்த ட்ரெயிலரைப் பாருங்க அசந்து போவீங்க. !



டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.



 




3 கருத்துகள்:

  1. Taken 3 படத்தைப் பற்றிய துடிப்பான விமர்சனம். பாராட்டுக்கள். பொதுவாக இதுபோன்ற அதிரடி ஹாலிவுட் படங்களை நம்மூர் பெண்கள் அவ்வளவாக விரும்பமாட்டார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை என்று நிரூபித்ததற்கு நன்றி.

    ஒரு தந்தை தன் பெண்ணை மீட்டெடுக்கும் கதையாக இருப்பதால் மகாநதி நினைவுக்கு வருவது இயல்பானதே. மற்றபடி Taken படம் மகாநதி படத்தின் காப்பி என்று சொல்வதெல்லாம் நகைச்சுவை. (உங்களைச் சொல்லவில்லை. சில கமலஹாசன் ரசிகர்கள் இப்படித்தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையே குறிப்பிட்டேன்.)மகாநதி படமே லாக் அப் மேலும் சில ஆங்கிலப் படங்களின் சாயல் கொண்டது. பெண்களை வைத்து தோல் வியாபாரம் செய்யும் கரு ஆங்கில சினிமாக்களில் ஒன்றும் புதிதல்ல.

    விறுவிறுப்பான விமர்சனம் படத்தைப் போலவே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...