எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 மார்ச், 2014

தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-


தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-
*******************************************
கமலஹாசன் குமுதத்தில் எண்பத்தைந்தில் ”அவரோகணம்” என்று ஒரு கதை எழுதி இருந்தார். அதன் கதாபாத்திரம் தன்னைப் போலவே ஆரோகணம் அவரோகணம் செய்யக்கூடியதாக தன்னைப் போன்ற ஒரு ஆணை நேசிப்பதான கதை. வேட்டையாடு விளையாடுவில் அப்படிப்பட்ட இருவர் வில்லன் காரெக்டர்களாக இருக்க உன் காதலி என்று அமுதனிடம் இன்னொரு ஆணைப் பற்றிக் கூறி அடிப்பார்.

அதன் பின் ஸ்டெல்லா புரூஸ் கதை ஒன்று வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறுவன் பற்றியது. அதில் அவன் ஹிந்திப் படத்தில் நடிக்கும் ஆசையில் ஓடிப்போவதாக வரும். ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு அவன் ஓடிப் போவதும் உறவினர்கள் தேடியலைந்து கூட்டி வருவதுமாக இருக்கும் அக்கதையில் முடிவில் அவன் தன் தாத்தா கேட்டுக் கொண்டதற்காக ஓடிப் போய்விடுவான். அவன் தாத்தாவுக்கும் வேறொரு ஆணுக்குமான உறவை அவன் கண்ணுற்று விடுவதால் இம்முறை அவனது தாத்தாவே அவனுக்குப் பணம் தந்து போகச் சொல்லி இருப்பார்.


இதே கோவா படத்திலும் இரு ஆண்மகன்கள் காதலிப்பார்கள். அதில் ஒருவர் ”நான் அவனுக்காக சிக்ஸ் பாக் எல்லாம் மெயிண்டெயின் பண்ணுறேன். எதிலும் ஒரு ஒழுக்கம் இருக்கணும்டா. (!) நான் அவனை விட்டுட்டு வேறு யாரையாவது தேடுறனா.. ? என்பார்.

எழுத்தாளர் விக்ரம் சேத் பெண்களுடன் தான் பழகுவது குறித்துக் கவலைப்பட்ட அம்மாவிடம்,” நான் பெண்களுடன் இருப்பதுதானே உனக்குக் கவலை. நான் ஒரு ஆணுடன் இருப்பதில் நீ தடை ஏதும் சொல்ல முடியாதே” எனச் சொன்னதாக ஒரு பேட்டியில் படித்துள்ளேன். டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா ஒரு லெஸ்பியன் என்று ஒரு பத்ரிக்கையில் படித்துள்ளேன்.

கல்லூரிக் காலத்தில் பெண்கள் விடுதியில் படிக்கும்போது இதுபோல் ஒரு பால் விழைவினரைப் பற்றிக் கேள்வியுற நேர்ந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. காதல் என்பதே சொல்லக் கூடாத ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்பட்ட காலத்தில் ஒரு பாலின விழைவு ஏனோ அருவருப்பும் அச்சமும் ஊட்டியது.

காலம் மாற இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொருவரைப் பற்றியும் புரிந்து கொள்ளும் மனநிலையைப் பெற்றிருப்பதால் ஒவ்வொருவரின் அந்தரங்கங்களையும் விழைவுகளையும் மதிக்கவும் கடந்து செல்லவும் முடிகிறது.

ஒரு முறை மும்பை ஜஹாங்கீர் ஆர்ட் காலரியில் நடந்த ஒரு எக்ஸிபிஷனில்    A WOMEN CAN HAVE THE RIGHTS TO HAVE SEX WITH THE MAN WHOM SHE WANTS TO HAVE “  என்ற வாசங்களை ஓவியங்களில் 1990 களில் படிக்க நேர்ந்தது. அதுவே அப்போது மிகவும் அதிர்ச்சியூட்டும் வாக்கியமாக இருந்தது. இப்போது தற்பால் விழைவினர் தங்கள் கோரிக்கைகளுக்காக வெளியே வந்து போராடுவது கால மாற்றத்தால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஸ்ருஷ்டி என்ற வட்டம் பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை சமூகப் பார்வையோடு அணுகி அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்டதாகும். 2012 ஜூலையில் அலன் டூரிங் நினைவாக டூரிங் வானவில் திருவிழா மற்றும் ஆசியாவின் முதல் பால்புதுமையினர் விழா கொண்டாடியது. 

 ஆண்பெண்திருனர் தவிர்த்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பாலினங்களான பால் புதுமையருக்கு வழக்கு மொழி சொற்கள் உள்ளன இவை மற்றும் தமிழில் கோணல் கோட்பாடு , பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் மற்றும் ஜான் ஆகியோர்.

நங்கை, நம்பி, ஈரர், திருநர் என்றும் இன்னும் பல வகையான பாலினங்கள் உள்ளார்கள் எனக் கண்டறிந்துள்ளார்கள். சகோதரி, சினேகிதன், ஓரினம். நெட் ஆகியவை திருநங்கை, திருநம்பி, ஒருபால் சேர்க்கையினருக்கான அமைப்புக்களாகும். இவர்கள் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னரே ஈவ் செட்விக் (Eve Sedwick) என்பவரால் கோணல் கோட்பாடு (Queer theory) மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (...தி) LGBT படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் பாடமாக துவக்கப்பட்டது

தற்பால் விழைவினர் திருமணம் செய்ய, சேர்ந்து வாழ சுப்ரீம்கோர்ட் டிசம்பர் 11, 2013 இல் தடைசட்டம் 377 ஐத் திரும்ப செயல்படுத்தியவுடன் டெல்லி, பெங்களூரு , சென்னை போன்ற நகரங்களில் தற்பால் சேர்க்கையினர் (LGBT – LESBIAN, GAY, BISEXUAL, TRANSGENDER ) சேர்ந்து குரல் கொடுத்தனர். தங்கள் எதிர்ப்பைப் பொது இடங்களில் அட்டைகள் ஏந்தித் தெரிவித்தனர்.

சோஷியல் ஆக்டிவிஸ்ட் ஆரிஃப் இது எய்ட்ஸ் போன்றவற்றுக்கு அரசாங்கம் தரும் ஃபண்ட்ஸைக் கேள்விக் குறியாக்கும் எனவும், இது போல உள்ள LGBT யினருக்கு காதலிக்கவும், விரும்பவும் உள்ள உரிமைகளை மறுத்தது போலாகும் என்றும் கூறுகிறார்.

1997 இல் இது போல உள்ளவர்கள் இனம் காணப்பட்டவுடன் மருத்துவ உதவிகளும் , பள்ளிகள் மற்றும் யுனிவர்சிட்டிகளில் கல்வி உதவிகளும் மறுக்கப்பட்டதாகக் கூறுகிறார். இது அடிப்படை மனித உரிமைக்கு எதிராகும் என்கிறார். இச்சட்டம் தொடர்ந்து இருந்தால் அது செக்‌ஷுவல் ஹரேஸ்மெண்டுக்கு வழி வகுக்கும் என்றும் இது சம்பந்தமான மறைமுக நடவடிக்கைகளால் குற்றம் பெருகும் என வலியுறுத்துகிறார்.

2001 இல் லக்னோவில் ப்ளானட் ரோமியோ ( PLANET ROMEO)  என்ற நெட்வொர்க்கிங் சைட் மூலம் போலீசார் இது போன்றவர்களுடன் சாட் செய்து 4 பேரை வலைவிரித்துப் பிடித்தாகக் கூறுகிறார். இதனால் 2001 மற்றும் 2005 நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது இவர்கள் கவுன்சிலிங்க் மேலும் மருத்துவ உதவிகள் அளித்து வருபவர்களுக்கு (COMMUNITY BASED DATA) போலியான பெயரும் முகவரியும் அளிக்க வேண்டி இருப்பதாகக் கூறி உள்ளார். இவர்களின் சேவை வேண்டி 2009 வாகில் கவுன்சிலிங்குக்கு வந்தவர்கள் 40 , 50 என்ற எண்ணிக்கையில் தற்போது வருவதாகக் குறிப்பிட்டார்,

பிரிட்டனின் பெண்கள் மற்றும் சம உரிமைக்கான அமைச்சர் மரியா மில்லர், 2014 மார்ச் 29 இல் இருந்து ஹோமோசெக்சுவல் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படப் போவதாகக் கூறி இருக்கிறார். 2014 முடிவிற்குள் அப்படியான திருமணங்களுக்கு லீகல் ரைட்ஸ் கொண்டு வரப்போவதாகவும் கூறி இருக்கிறார்.

நியூயார்க்கில் டைம் மாகஸீன் ரோமின் புனித போப் ஃப்ரான்சிஸை PERSON OF THE YEAR” என்று அறிவித்திருக்கிறது. போன் ஃப்ரான்ஸிஸுக்கு 76 வயதாகிறது. செப்டம்பரில் அவர் கருக்கலைப்பு, கருத்தடை, ஹோமோசெக்‌ஷுவாலிட்டி ஆகியவற்றில் கருணை காட்டுவதாகக் கூறி இருக்கிறார். ஜூலையில் ஒரு உரையில் கடவுள் தேடுதல்/நம்பிக்கை உள்ள நல்ல உள்ளம் படைத்த ஒருவன்/ஒருத்தி ஒரு பால் விழைவினராக இருந்தால் அவர்களை ஜட்ஜ் செய்யத் தனக்கு அதிகாரமில்லை என்கிறார்.

1986 இல் BOWERS VS HARDWICK கேஸில் 5 க்கு 4 என்ற விகிதத்தில் இருந்த மெஜாரிட்டி ஆதரவு 2003 இல் LAWRENCE VS TEXAS  கேஸில்  6 க்கு 3 என்ற விகிதத்தில் உயர்ந்திருப்பதால் யூஎஸ் கோர்ட் பதினாறு வருடங்களில் தற்பால் விளைவை ( HOMOSEXUAL SODOMY) இயற்கைக்குப் புறம்பானது என்றும் பெயரிடத் தகுதியற்ற குற்றம் என்றும் கூறியதை மாற்றி இன்றைய காலகட்டத்துக்குப் பொருந்தாது என்று தீர்ப்பளித்து அங்கீகரித்துள்ளது.

LOVE IS A HUMAN RIGHT, IPC 377 QUIT INDIA, SHE IS BLIND AND SHE MADE MY LIFE BLIND, LOVE KNOWS NO GENDER, WENT TO BED IN 2013 WOKE UP IN 1860, MY LIFE MY CHOICE MY PARTNER WITH CONSENT SO ? , GAY O.K. ,DON’T CRIMININALISE LOVE, பெங்களூருவில்  எல்ஜிபிடி (LGBT) உரிமைக்காக குரல் கொடுத்த மக்களோடு நடிகர் க்ரீஷ் கர்னாடும் பங்கேற்று பதாகை தாங்கி இருந்தார். சுப்ரீம் கோர்ட் திரும்பக் கொண்டுவந்த தடை ஏமாற்றமளிக்கிறது என்றும் தனி மனித உரிமைகளில் அது குற்றமாகப் பார்ப்பதாகவும், கே உரிமைகளை மறு பரீசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் குரல்கள் செக்‌ஷுவல் மைனாரிட்டி மக்களிடம் இருந்து எழுகின்றன.

ஆனால் சுரேஷ் கவுசல் என்ற ஆஸ்ட்ராலஜர் இதை அனுமதிப்பதன் மூலம் அவுட்போஸ்ட்களில் பணிபுரியும் மிலிட்டரி ஜவான்கள் இதே போல உறவு கொள்ளக் கூடும் என்கிறார். கடந்த முறை செக்‌ஷன் 377 அமல்படுத்தப்பட்டபோது கர்நாடகாவின் ஹசனில் 21 வயதான ஒரு என்ஜினியரிங் ஸ்டூடண்ட் 6 பேர்களால் இயற்கைக்கு மாறான உறவு (SEXUAL SODOMY ) கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். இதனால் தனக்கு ஹெச் ஐ வி தொற்று ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.

செக்‌ஷன் 377 வெறும் ஹோமோசெக்‌ஷுவாலிட்டிக்காக மட்டும் போடப்பட்ட தடை அல்லவென்றும், குழந்தை செக்ஸ், செக்‌ஷுவல் குற்றங்கள், ( PAEDOPHILLA, SEXUAL OFFENCES, NECROPHILIA) இயற்கைக்குப் புறம்பான எல்லாவித செக்‌ஷுவல் நடவடிக்கைகளுக்கும் எதிரானது என்றும் சீனியர் கவுன்செல் சிவி நாகேஷ் கூறுகிறார். குழந்தை வன்புணர்வுத் தடுப்புச் சட்டம் 2012 இல் தனியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. அது போல ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாகச் சட்டமியற்றப்படவேண்டும் என்றும் கூறுகிறார். ஹெச் ஐ வியை/எய்ட்ஸைத் தடுப்பதற்காகவும் போடப்பட்டதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இது போக செலிப்பிரிட்டி GAYS என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் CHRIS COLFER, JODIE FOSTER, AMILIE MAURESMO, ISMAIL MERCHANT, DOLCE AND GABBBANA, ELTON JOHN, GIORGEO ARMANI, CYNTHIA NIXON, VIKRAM SETH, GEORGE MICHEAL, ELLEN, DEGENERES, ROHIT BAL, NEIL PATRICK HARRIS, RICKY MARTIN, ஆகியோரை ஒரு பால் விழைவினர் எனக் குறிப்பிட்டுள்ளது.

PROUD TO BE A GAY  என்று உயர்பதவியில் உள்ள பல ஆண்கள் மற்றும் பெண்கள் பேட்டியளித்துள்ளனர். THE QUEER CHRONICLE EDITOR KEITH, MR. GAY INDIA 2013 NOLAN LEWIS ம் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் தற்பால் விழைவு உள்ள காம சூத்ராவையோ, கஜூரோஹா சிற்பங்களையோ அழிக்க முடியுமாவென்றும் ரேப்பிஸ்டுகள், குழந்தைகளை வன்புணர்பவர்கள் சுதந்திரமாக உலவும் தேசத்தில் கே யாக இருப்பதால் ஜெயில் கம்பிகளின் பின்னே இருக்க வேண்டுமாவென்றும் கேட்கிறார்கள்.

பிருந்தா காரத், கரண் ஜோகர், ராகுல் போஸ், சஷி தரூர் ஆகியோர் தற்பால் விழைவினருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு பாலினத்தவருக்கும் ஒரு உரிமை இருக்கிறது .பாலின அகதிகளாக நொந்து போயிருக்கும் மக்களுக்குத் தேவையான உரிமைகள் கேட்டுப் போராடுகிறார்கள். சமுதாயத்தின் கட்டமைப்பில் உள்ள மற்றவர்களுக்கு இடையூறு நேராவண்ணம் இவர்களுக்கான சட்டமும் உரிமையும் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.


5 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. அருமையான கட்டுரை அக்கா .இங்கே அனைவரையும் மதிக்க கற்று கொடுக்கறாங்க .நமக்கு பிடிக்கலை என்பதற்காக அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட கூடாது ..அது அவரவர் விருப்பம் அவர்களும் நம்மைபோன்ற சற்று மாறுபட்ட எண்ணமுடைய மனிதர்களே

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...