வியாழன், 5 செப்டம்பர், 2013

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடன் நூல் மொழிபெயர்ப்புக்காக எங்கள் தமிழன்னை எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு கனடா  இலக்கியத் தோட்ட விருதும்,பாஷா பூஷண்  விருதும்,  ஜீ.யூ. போப் விருதும் கிடைத்திருக்கிறது.

எங்கள் அம்மா எஸ் ஆர் எம்  பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராய  (ஜீ. யூ. போப்) விருதுபெற்றமைக்காக  இந்த ஆசிரியர் தினத்தில்  வாழ்த்துச் சொல்லி மகிழ்கிறேன்.


பாஷா பூஷண் விருதும் ஆகஸ்ட் மாதம்  கடலூரில் வழங்கப்பட்டிருக்கிறது. 

திசையெட்டும் விருது குவிகிறது. ப்யோதர் தஸ்தவ்யெஸ்கியின் அசடன் தமிழ் வழி வந்து என் ஆசிரியருக்குப் பெருமை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறான்.

தமிழ்மகன் அவர்கள் ” மொழிபெயர்ப்பு என்பது சமூகச் செயல்பாடு” என்ற தலைப்பில் அம்மாவிடம் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது விகடனில் வெளிவந்திருக்கிறது.  மிகச் சிறப்பான பேட்டி அது.

ஒரு ஆசிரியையாக , சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக மூன்று பரிமாணங்களிலும் அவர்கள் மகுடம் சூடியிருக்கிறார்கள்.

 அம்மாவின் விருதுகள், அது பற்றிய  பகிர்வுகள் ஆகியவற்றை அம்மாவின் இந்த இணையத்தில் படிக்கலாம்.

http://www.masusila.com/

தமிழ் மகன் அவர்களின் பேட்டியை அவருடைய இந்த இணையத்தில் படிக்கலாம்.

http://www.tamilmagan.in/

இந்த ஆசிரியர் தினத்தில் என் ஆசிரியருக்கு வாழ்த்துச் சொல்வதோடு, தமிழ்மகனுக்கும் , விகடனுக்கும், விருது அளித்தவர்களுக்கும் வாழ்த்தைச் சொல்லிக் கொள்கிறேன்.

டிஸ்கி:- அசடன் புத்தகத்தில் நான் அனுப்பிய  ”குற்றமும் தண்டனையும்  ” புத்தகத்துக்கான விமர்சனக் கடிதத்தையும் அம்மா பிரசுரம் செய்து கௌரவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் அவர்களால் நான் பெருமையுறுகிறேன். எனது கிரியா ஊக்கி அவர்கள்தான்.நான் வலைப்பதிவராய் இருப்பதற்கும் பல பத்ரிக்கைகளில் எழுதி , கல்லூரிகளில் பேசச் செல்வதற்கும் இன்றைய எனது தன்னம்பிக்கைக்கும் காரணம் அந்தப் பாவை விளக்குத்தான். என்னைப் போலப் பல தீபங்களை ஒளியூட்டிய அவர்கள்  இன்னும் பல்லாண்டு பல விருதுகள் பெற்று வாழ்க வளமுடன், நலமுடன் ..!

4 கருத்துகள் :

கோமதி அரசு சொன்னது…

திசையெட்டும் விருது குவிகிறது. ப்யோதர் தஸ்தவ்யெஸ்கியின் அசடன் தமிழ் வழி வந்து என் ஆசிரியருக்குப் பெருமை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறான்.//
எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள். சேவை தொடர வாழ்த்துக்கள்.

//என்னைப் போலப் பல தீபங்களை ஒளியூட்டிய அவர்கள் இன்னும் பல்லாண்டு பல விருதுகள் பெற்று வாழ்க வளமுடன், நலமுடன் ..!//

திருமதி.சுசீலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
ஆசிரியர் தினத்தில் நல் ஆசிரியரின் பெருமை கூறும் மாணவியின் பதிவு அருமை, இதைவிட வேறு விருது ஆசிரியருக்கு என்ன வேண்டும்!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோமதி அரசு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

குரு சிஷ்யை பதிவு அருமை ---சரஸ்வதிராசேந்திரன்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...