முதல் 25 டிப்ஸ்கள் இங்கே.
இரண்டாவது 25 டிப்ஸ்கள் இங்கே.
51. குக்கரில் சாதம் வைக்கும் போது வெளியில் தண்ணீரில் எலுமிச்சை தோல் அல்லது புளி போட்டு வைத்தால் குக்கர் கறுக்காது
52. ரசம் வைக்கும்போது வெற்றிலை, வல்லாரை, தூதுவளை, துளசி இவற்றில் ஏதாவது ஒன்றைத்தட்டிப் போட்டு ரசம் வைத்து அருந்தி்னால் ஜலதோஷம் குணமாகும்.
53. ஹிந்தி, கைவேலைப்பாடுகள், ஸ்லோகம் தெரிந்தவர்கள் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்கலாம். படிக்க சிரமப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்.
54. பேப்பர் கப்புகள், பாக்குமட்டை ப்ளேட்டுகள் வாழைமட்டை செருப்புகள் போன்றவை தயாரிக்க இலவச பயிற்சி வகுப்புகள் அந்த நிறுவனத்தாரே பயிற்சி கொடுக்கிறார்கள்.. சும்மா இருக்கும் நேரத்தில் கற்றுக் கொண்டால் நல்ல வருமானம் வரும் தொழில் இவை.
55. திரைச்சீலைகள், பெட்ஸ்பரெட்டுகள், தலையணை உறைகளை வெந்நீரும். சோடா உப்பும். சோப்பும் போட்டுத்துவைத்தால் நல்ல பளிச்சென்று மணமாக இருக்கும்.
56. பழைய பட்டுப்புடவைகளை மாடர்ன் சல்வாராக தைக்கலாம்.
57, மிச்சமான உணவுகளை அன்றேயும், 3 மாதத்திற்கு ஒர் முறை பழைய துணிகளையும் நமக்கு உழைக்கும் வேலைக்காரர்களுக்கு கொடுத்து விடவேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் அவர்களுக்கும் ஓரிரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் படித்தால் வருடம் ஒரு முறை புத்தகம் வாங்க பண உதவி செய்யலாம். தான தருமம் என எங்கேயும் போக வேண்டாம்.
58. வெளிநாடு செல்வோர் இங்கேயே உரிய மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்வது நலம், அங்கே மருத்துவச் செலவுகள் அதிகம். நமக்கு வேண்டிய மாத்திரைகள் கிடைக்காது,
59. கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் வினிகர் கலந்திருப்பதால் வீட்டிலேயே ஊறுகாய் செய்வது நல்லது. ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம் உண்ணக்கூடாது.
60. அஜினோமோட்டோவை எப்போதாவது சமையலில் சூப், ஃப்ரைட் ரைஸ் போன்றவற்றில் உபயோகப்படுத்தலாம். அடிக்கடி உபயோகப்படுத்தினால் கேடு. பாஸ்டா நூடில்ஸ் மைதா பரோட்டா போன்றவையும் எப்போதாவது சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
61. செண்ட் பாடி ஸ்ஃப்ரே போன்றவற்றை அளவோடு உபயோகப்படுத்த வேண்டும். இதனால் பலருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
62. குழந்தைகள், முதியவர்களின் நகங்களை அவ்வப்போது வெட்டி விடவேண்டும். இல்லாவிட்டால் கிருமிகள் உணவுண்ணும்போது உள்ளே சென்றுவிடும்.
63, ஃப்ரிஜ்ஜில் வைத்த பழைய உணவுகளை சூடுசெய்து சாப்பிடுவதை தவிருங்கள். அது ஐஸ் பெட்டிதான். ஊசப் பெட்டி அல்ல, இதனால் டைபாயிட் காய்ச்சல் உண்டாகும். முடிந்தவரை காய்கற்களை ஃப்ரெஷாக வாங்கி சமைத்து அன்றே சாப்பிட்டு விடுங்கள்.
64, சோஷியல் வெப்சைட்டுக்களில் பிள்ளைகள் உலவும்போது ( ஃபேஸ்புக், ட்விட்டர்) நல்ல நண்பர்களா என அவ்வப்போது பார்க்க வேண்டும்.
65. வாரம் ஒரு முறையாவது குடும்ப அங்கத்தினர்கள் கொஞ்சநேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கவேண்டும். தினமும் ஒரு முறையாவது சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.
66. தையல் மிஷினை உபயோகப்படுத்தாத போது அவ்வப்போது ஆயில் போட்டு சுத்தி வைக்க வேண்டும்.
67. வண்டிகளில் வெளியே செல்லும்போது தேவையான லைசன்ஸ், ஆர்சி புக்கை ஒரு கண்ணாடி் பேப்பரில் போட்டு எடுத்து சென்றால் மழை பெய்தாலும் ஈரமாகாது.
68. ஊர் மாறும் போது வீடு மாறும்போது எல்லாப் பொருட்களையும் அடைத்து செல்லாமல். நமக்கு தேவையில்லாத பொருட்களை வேலை செய்பவருக்கு தேவைப்படுமா என கேட்டு ஃப்ரீயாக கொடுத்து செல்லலாம்.
69. மழைக்காலங்களில் குடைகளையும், பனிக்காலங்களில் உல்லன் தொப்பி, ஸ்வெட்டர்களையும் ஹாலில் ஒரு செல்ஃபில் இடம் ஒதுக்கி வைத்தால் கிளம்பும் அவசரத்தில் தேடும் வேலை இருக்காது.
70. குழந்தைகளுடன் வண்டியில் செல்லும் பெற்றோர் நன்கு கவனமுடன் அணைத்துச் செல்ல வேண்டும். வெளியே சென்றால் கைபிடித்து கூட்டிச் செல்ல வேண்டும்.
71. காய்கறிகளை வெங்காயத்துடன் குக்கரில் அவித்தபின் அரை ஸ்பூன் எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து உப்பு சேர்த்து வதக்கினால் எண்ணெய் குறைவாகவும் சுவையாகவும் இருக்கும்.
72. மிச்சமான பாடி ஸ்ப்ரேக்களை கப்போர்டுகளில் துணிகளில் போர்வைகளில் அடித்து வைத்தால் வாசனையாக இருக்கும்.
73. மிச்சமான ஹேண்ட் வாஷ், பேபி சோப், ஷாம்பூக்களை தண்ணீரில் கரைத்து வாஷிங் மெஷினில் பெட்ஸ்ப்ரெட், தலையணை உறை துவைக்கும்போது உபயோகிக்கலாம்.
74. தயிர்ப்பச்சடிகள் செய்யும்போது தயிரை ஒரு துணியில் கட்டித் தொங்கவிட்டு பின் தண்ணீரில்லாமல் சாலட் செய்தால் சுவையாக இருக்கும். பைனாப்பிள், வறுத்த சீரகம், காராபூந்தி ஆகியவற்றிலும் தனித்தனியாக தயிர்ப்பச்சடி செய்யலாம்.
75. ஊர் விட்டு ஊர் மாறும் போது முக்கியமான டாக்குமெண்ட்களை ஹாண்ட் லக்கேஜாக வைத்துக் கொண்டால் நலம். அதிலும் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக் கொண்டால் நல்லது. (பொதுவாக எந்த போஸ்டையும் கூரியரில் அனுப்பும் முன் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டால் பாதுகாப்பானது.

எத்தனை எத்தனை பயனுள்ள தகவல்கள்... நன்றிகள்...
பதிலளிநீக்குடிப்ஸ் அனைத்துமே உபயோகமானவை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள குறிப்புக்கள்.
பதிலளிநீக்குநன்றி.
குறித்து வைத்துகொள்ளவேண்டிய குறிப்புகள்.நன்றிபகிர்தலுக்கு
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி கோவை2தில்லி
நன்றி கோமதி அரசு
நன்றி ஸாதிகா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!