எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2013

டிப்ஸ் 25 (2).

முதல் 25 டிப்ஸ்கள் இங்கே.

26. சாலட்கள் செய்யும்போது எலுமிச்சைஜூசும் மிளகுப் பொடியும் போட்டு செய்தால் சுவையாக இருக்கும்.

27. வடகம் போடும்போது வெறும் ப்ளாஸ்டிக்  பாலிதீன் ஷீட்களில் மட்டும் போடாமல் அவற்றின் மேல் தண்ணீரில் நனைத்துப் பிழிந்த  துணியை விரித்துப் பிழிந்தால் ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை ஏற்படாது.

28. எல்லா விசேஷ நாட்களிலும் பக்கத்தில் இருக்கும் ஏதாவது  முதியோர் இல்லத்துக்கோ அல்லது அநாதை ஆஸ்ரமத்துக்கோ முடிந்த பொருளுதவி செய்யலாம்.உடுத்திய பழைய துணிகள் ஓரளவு நல்ல நிலைமையில் இருந்தால் மட்டுமே தானம் கொடுங்கள்.


29. பாலாடை, எலுமிச்சை சாறு, கடலை மாவு இது மூன்றும் கலந்து முகத்தில் போட்டு அவ்வப்போது குளித்தால் ஃப்ரெஷாக இருக்கும். ஜூஸ் எடுத்தபின் இருக்கும் பழச்சக்கைகளுடன் சிறிது தேன், கடலை மாவு/முல்தானி மட்டி போட்டும் தேய்க்கலாம்.

30. பாடும் குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பாக இருந்தால் ஒன்றிரண்டு மிளகை மெல்லச் சொல்லலாம். அல்லது பாலில் மஞ்சள்பொடி, மிளகுப்பொடி, ஜீனி போட்டு காய்ச்சி வடிகட்டி கொடுக்கலாம்.

31. வெய்யிலில் செல்லும் போது சருமம் கருக்காமலிருக்க கலர் குடைகள் அல்லது வெள்ளை காட்டன் குடைகள் பயன்படுத்தலாம். கறுப்புக் குடைகள் வெய்யிலை அதிகம் கடத்தி உஷ்ணமாக்கும்.

32. வயதானவர்களுக்கு எண்ணெய்ப் பலகாரம், பேக்கரி ஐட்டம் சாப்பிட்டால்  செமிக்காமல் இருக்கும். அதற்கு வெந்நீர் குடித்தால் சரியாகிவிடும்.

33. இறால் மற்றும் உருளை, வாழை போன்ற வாயுப் பதார்த்தங்கள் செய்யும் போது கட்டாயம் பூண்டு சேர்க்கவும். இல்லாவிட்டால் வாய்வுப் பிடித்துக் கொண்டு அவஸ்தையாகிவிடும்.

34. பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு, உறவினர் வீடுகளுக்குச் செல்ல நடந்தே போகலாம். நல்ல எக்சர்சைஸும் ஆகும். தூர இருக்கும் இடங்களுக்கு மட்டும் வண்டியை உபயோகப்படுத்தலாம். பெட்ரோல் மிச்சம் ஆகும்.

35. சினிமா தியேட்டர்களில் பாப்கார்ன் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சிலசமயம் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாது. வீட்டிலிருந்தே பிஸ்கட்டுகள் அல்லது பாப்கார்னே பொரித்து எடுத்து செல்லலாம்.

36. கைக்குழந்தைகளுடன் பிரயாணம் செய்பவர்கள் கட்டாயம் தேவையான மருத்துகளை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். ஹார்ட் பேஷண்ட்ஸும் அப்படித்தான்.

37. இனிப்பு நீர் உள்ளவர்கள் கொய்யா, நாவல், சாத்துக்குடி, பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடலாம்.

38. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை முழு உடல் செக்கப் செய்து கொள்வது நல்லது.

39. செல்ஃபோன், டிவி, டிவிடி, ஐபாட், கம்ப்யூட்டர் போன்றவை மாறிக் கொண்டிருப்பதால் ஒரு பொருளை வாங்கினால் அது இனி உழைக்கவே உழைக்காது  என ஆகும்வரை ரிப்பேர் செய்து உபயோகியுங்கள். இல்லாவிட்டல் ஈ வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகள் பெருகிக் கொண்டே போவதற்கு நீங்களும் ஒரு காரணமாய் இருப்பீர்கள்.

40. ஃபேன், ஏசி, போன்றவற்றை அவ்வப்போது ஆஃப் செய்துவிட்டு தேவையானபோது மட்டுமே உபயோகிக்க வேண்டும். தேவையில்லாத இடங்களில் லைட்டை அணைக்க வேண்டும். கரண்ட் பில்லும் மிச்சம்.  ஃப்ரிட்ஜ் , ஏசி போன்றவை அதிகமாக உபயோகப்படுத்தப்படும்போது அவை ஓசோன் லேயரில் ஓட்டை ஏற்படுத்துகின்றன.

41. வயிற்றைக் காய்ப்போட்டு காலை உணவுக்கு பதிலாக ஜூஸ் அருந்துவதும், இரவு பஃபேக்களில் அதிகப்படி உண்பதும் தவறு. காலை உணவை எப்போதும் ஸ்கிப் செய்யக்கூடாது. அதுபோல் பார்ட்டிகளிலும் பாஸ்டா, ஐஸ்க்ரீம், கேக், கீர் வகைகளுக்குப் பதிலாக சாலட்கள் ப்ரோட்டீன்கள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

42. ஸ்லிம் ஆகிறேன் என அரிசியை முற்றிலும் தவிர்க்கக்கூடாது, நம் தென்னிந்திய உணவில் ( சாம்பார், பொரியல், ரசம், பாயாசம், தயிர் )   டயட்டில் இருக்க வேண்டிய எல்லா சத்துக்களும் இருக்கின்றன.

44. வெள்ளையாக ஆகவேண்டும் என கண்ட க்ரீம்களையும் உபயோகப்படுத்த வேண்டாம். பாலில் கசகசாவை அரைத்து தடவி அவ்வப்போது குளித்தாலே நல்ல கலர் கொடுக்கும்.

45. வேப்ப இலை போட்டு காய்ச்சிய தண்ணீரில் தலை அலசினால் பேன்கள் அழியும். வடித்த கஞ்சியில் சீயக்காய் போட்டு தேய்த்தால் பொடுகு தொல்லை குறையும்.

46, கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை, செம்பருத்தி  இலைகளை அரைத்து வடையாக தட்டி நிழலில் காயவைத்து எண்ணெயில் போட்டு 4 நாட்கள் வெய்யிலில் வைத்து உபயோகப்படுத்தினால் முடி செழித்து வளரும்.

47. ரயில் பயணங்களில் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை பாட்டிலில் போட்டு கொண்டு செல்லவும். எலித்தொல்லை அதிகமாய் இருக்கிறது.

48. நவராத்திரி, பர்த்டே போன்ற விஷேஷங்களில் பையில் கிஃப்டுக்கு பதிலாக புத்தகங்களை போட்டுத்தரலாம். சின்னக் குழந்தைகளிடையே படிக்கும் பழக்கத்தை இது ஊக்குவிக்கும். குழந்தைகளுக்கு கதை சொல்லும் டிவிடிக்கள் விற்கின்றன. இவற்றை பரிசளிக்கலாம்.

49. செல்ஃபோனில் அதிக நேரம் பேசினால் காது நரம்புகளை பாதித்து கேட்பதில் குறைபாடு ஏற்படும். எனவே தேவைக்கு மட்டுமே பேசவேண்டும்.

50. குழந்தைகள் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தினால் அதில் சைல்ட்லாக் என்று ஒன்று  இருக்கும். அதை பயன்படுத்தி லாக் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத எல்லா வெப்சைட்டுகளும் குழந்தை பார்க்க நேரிடும். அல்லது எல்லா கேமையும் விளையாடி வைரஸ்களை இறக்கிவிடுவார்கள். சிஸ்டம் கெட்டுப் போய் விடும்.

டிஸ்கி:- இதில் சில டிப்ஸ்கள் இவள் புதியவளில் வெளியாகி உள்ளன.


7 கருத்துகள்:

  1. பாராட்டுகள். அனைத்துமே உபயோகமானவை.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தேனம்மை - அருமையான ஆலொசனைகள் - கடைப்பிடிக்கலாம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே பயனுள்ள குறிப்புகள்பா தேனம்மை.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு. தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டுவிட்டேன். த.ம.1

    பதிலளிநீக்கு
  4. We had bought, while in USA, a brand product ZESTY mCcORMIC which consists of Lemon, Pepper and Salt in powder form.

    It tastes so nice, that we mix it with plain rice and have it. so good u know.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நன்றி கோவை2தில்லி

    நன்றி சீனா சார்

    நன்றி மஞ்சு

    நன்றி சுப்பு சார் ஓஹ்ஹ் ஈஸி லெமன் ரைஸா :)

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...