எங்கள் குடும்ப நண்பரின் குழந்தை ஸாதிகே.. மிக அருமையான டான்சர். சும்மா தூள் பரக்கும் நடனங்கள். படிப்பில் மட்டுமல்ல. பல்கலைகளிலும் வித்தகி. நன்கு ஓவியம் வரைவாள். தன் ரூமில் ஒவ்வொரு பொருளையும் அழகாக அடுக்கி வைத்திருப்பாள். நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கூட. உடைக்கேற்ற வளையல், தோடு, மணிமாலை எல்லாம் அணிந்து கொள்வாள். நடனம் என்றால் அவ்வளவு இஷ்டம். திருவனந்தபுரம் பள்ளிகளில் நடனப் போட்டி என்றால் இவருக்குத்தான் முதல் பரிசு.
இந்தப் பெயர் என் தோழி ஸாதிகாவின் பெயர் ( இஸ்லாமியப் பெயர்) போலிருக்கிறதே என விசாரித்தேன். அப்போது அவர் மகாலெக்ஷ்மி காயத்ரியில் வரும். “ சர்வ மங்கள மாங்கல்யே.. சிவே சர்வார்த்த ஸாதகே, சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்த்துதே” என்ற வரிகளைச் சொல்லி இதில் வரும் ஸாதிகேதான் இவள் என்றார்..!
ஸாதிகேவுக்கு அழகான பெரிய கண்கள். புன்னகைக்கும் போதே கொள்ளை போய் விடுவோம். அவளுக்கு குருவாயூரில் சோறுண்ணல் நிகழ்ச்சி 6 மாதத்தில் நிகழந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கேரளத்தவர் குழந்தைகளுக்கு முதன் முதல் குருவாயூர் கோயிலில்தான் சோறு ஊட்டுகிறார்கள். இதற்கு சத்யா என்று பெயர். யாராவது சாப்பிடும் நேரத்தில் வீட்டுக்கு வந்தால் சாப்பிடச் சொல்வோம். இதையே மலையாளிகள், அவனுக்கு எங்க போனாலும் சத்யா ( உணவு கிடைக்கும் கொடுப்பினை) உண்டு என்பார்கள்.
குருவாயூர் கோயிலில் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடை பொருளை வேண்டுதலாக வழங்கும் வழக்கம் இருக்கிறது. இளநீர், வெல்லம், வாழைப்பழம் என எந்தப் பொருளை வேண்டிக் கொள்கின்றார்களோ அந்தப் பொருளை வேண்டிக் கொண்டவரின் எடைக்கு எடை வழங்குகிறார்கள். இங்கே ஸாதிகேவின் எடைக்கு எடை வாழைப்பழம்.
அதே போல் முதன் முதலில் அக்ஷரப்பியாசமும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. நெல் பரப்பப்பட்ட தட்டில் ஒரு புறம் அட்சதையும் அரிசியும் இருக்க நெல்லின் மேல் கோயிலின் சாந்தி குழந்தையின் கையைப் பிடித்து நெல்லில் ஓம் என எழுதி கல்வியைத் துவக்கும் அக்ஷரப்பியாசம் நடைபெறுகிறது. இப்படிக் கல்வியைத் தெய்வ சன்னதியில் துவங்கியதால் ஸாதிகே அவள் தந்தை பெருமைப்படுவது போல “ ஸாதிகே ஸ்கூலில் எல்லாத்திலேயும் ஃபர்ஸ்ட், படிப்பிலேயும் சரி, டான்சிலேயும் சரி.பெஸ்ட் டான்சர் அண்ட் ஸ்டூடண்ட் “ ஆக இருக்கிறாளோ என்னவோ. இன்னும் பல பெருமைகள் பெற்று ஸாதிகே வாழ்க வளமுடன். :)

என்னடாப்பா..தலைப்பில் நம்ம பெயர் அடி படுகிறதே என்று பார்த்தேன்...:)ஸாதிகே துரு துருவென்று அழகாக இருக்கிறது.படங்களும் பகிர்வும் அருமையாக உள்ளது தேனு.
பதிலளிநீக்குஇந்த சோறுண்ணலும் ஏடு தொடங்குதலும் எங்க கன்யாரி மாவட்டத்திலும் உண்டு.
பதிலளிநீக்குஸாதிகே எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்.
நன்றி ஸாதிகே.. ஹாஹா ஸாதிகா
பதிலளிநீக்குநன்றி சாரல் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இதிலேயும் ஒரு சந்தோசம் இருக்கு:
பதிலளிநீக்குஉங்களுக்கு plus 1 vote-போட்டுட்டேன்!