எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 ஜூலை, 2012

இரட்டைக் குடிசைகள்

பக்கத்துப் பக்கத்தில்
இழைநெய்து கொண்டிருந்தன
இரட்டைச் சிலந்திகள்.
ஒன்றின் வீட்டை
ஒன்று ரசித்தபடி.

பூச்சிகள் தின்று
சலிக்கும் வேளை
இரண்டும் கால் பாவி
ஒன்றின் மையத்தில்
இன்னொன்றும் கூடி.


தூசிப்பூச்சி படிந்து
கிழியத்துவங்கும் நேரம்
ஒட்டடைக் கம்புகள்
சுருட்டிச் செல்லும் வீட்டோடு
தரையில் குதித்து

இரட்டைக் கோணங்களோ
மூன்று கோணங்களோ தேடி ஓடும்
இரட்டைக் கோபுரமாய்
இடிந்து வீழ்ந்தாலும்
இன்னொரு இழைக் குடிசை போட..

 டிஸ்கி:- இந்தக்கவிதை ஜூன் 1, 2012, அதீதத்தில் வெளியானது.

4 கருத்துகள்:

  1. இழைக்குடிசையானாலும் தன் குடிசை இல்லையோ.. அருமையான கவிதை தேனக்கா..

    பதிலளிநீக்கு
  2. ஒட்டடைக் குச்சி எட்டுங்கால் ஓடிச் சிதறும் எட்டுக்கால். நம் வீட்டின் அழகைக் குலைப்பதாய் நாமும், தன் அழகிய வீட்டைக் கலைப்பதாய் அதுவும் போடும் போட்டியில் எப்போதும் விஞ்சுவது ஒட்டடை அடித்து ஓயும் கைகளும் ஒட்டிக்கொண்டு வரும் சில ஒட்டடைப் பின்னல்களும்.

    அழகான கவிதைக்குப் பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாந்தி

    நன்றி கீதமஞ்சரி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...