எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 மார்ச், 2012

ஒட்டுக் கேட்கும் யந்திரம்.

ஒட்டுக் கேட்கும் யந்திரம்..
*************************************

பூச்சிகள் வண்டுகள் அளவில்
ஒலிவாங்கிக் கடத்தும் யந்திரங்கள்
குவிந்து கிடந்த கடை வழியே
கடக்க வேண்டி வந்தது.

எதிர்முறைக்காரர் வீட்டு அலமாரி.,
மேலதிகாரியின் மேசையடி.,
கட்சிக்குள்ளே கோஷ்டியானவனின்
சின்ன வீட்டின் பரண்.,

கையூட்டு வாங்குபவர்களை
சந்திக்கச் செல்பவரின் கைப்பை.,
இவற்றில் பதுக்கி உண்மையை
ஒட்டுக்கேட்கலாம் சத்தமில்லாமல்.

தொலைபேசி உரையாடல்
கண்காணிக்கப்படும் கோபுரங்களின்
கூர்ச் சாணையை விட
சாணிச் செருப்புக்களைப்
படிகளில் தேய்ப்பதாய் இருக்கிறது
உண்மைக் கடத்திகளின் பணி.

யதேச்சையாய்ச் சிக்கும்
வார்த்தைக் கடத்திகளைச்
சோதிக்கும் போது
ஏதும் கொள்ளளவு இல்லை
அதில் என்றாலும்
யார் வைத்திருப்பார்களோவென்று
யாரைப் பார்த்தாலும்
சந்தேகத்துடன் சிக்காகிறது.,
எங்கும் பேச பயந்து.

எதிர்பாராமல் அப்பியோரும்
அப்பப்பட்டவரும் சந்திக்கும் நேரம்
யதார்த்தமாய்ப் புன்னகைப்பது
இலகுவாய் வருவதில்லை..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே நான்காம் வார உயிரோசையில் வெளியானது.

7 கருத்துகள்:

  1. ஒட்டு கேட்கும் இயந்திரம்
    நல்ல கவிதை தோழி

    பதிலளிநீக்கு
  2. எதிர்பாராமல் அப்பியோரும்
    அப்பப்பட்டவரும் சந்திக்கும் நேரம்
    யதார்த்தமாய்ப் புன்னகைப்பது
    இலகுவாய் வருவதில்லை..

    எப்படி வரும் யதார்த்தம்????

    அப்பு அப்பு என்று அப்பத்தானே தோன்றும் !!!

    பதிலளிநீக்கு
  3. //தொலைபேசி உரையாடல்
    கண்காணிக்கப்படும் கோபுரங்களின்
    கூர்ச் சாணையை விட
    சாணிச் செருப்புக்களைப்
    படிகளில் தேய்ப்பதாய் இருக்கிறது
    உண்மைக் கடத்திகளின் பணி//

    அருமையான உவமை, மேடம்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கடவுளே... ஓட்டுக் கேட்கும் யந்திரம்னு தலைப்பை தப்பாப் படிச்சுட்டு ஓட்டு கேக்ககூட யந்திரம் தயாரிச்சுட்டாங்களான்னு நினைச்சுட்டு படிச்சு, அசடு வழிஞ்சேன். ஒட்டுக் கேட்பது... கடைசியில் நீங்கள் முடித்திருக்கும் வரிகள் யதார்த்தம்! அருமை!

    பதிலளிநீக்கு
  5. யதார்த்தமாய்ப் புன்னகைப்பது
    இலகுவாய் வருவதில்லை..
    அருமை...

    பதிலளிநீக்கு
  6. நன்றி செய்தாலி

    நன்றி ராஜி

    நன்றி கோபால் சார்

    நன்றி கணேஷ்

    நன்றி இளங்கோ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...