சனி, 3 மார்ச், 2012

ஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்து...


குங்குமம் குழுமத்திலிருந்து இந்த மாதம் புதிதாய் வந்திருப்பவள் குங்குமம் தோழி. இன்னும் சில தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் புதிதாய் வந்த இந்தத் தோழி இன்னும் ஹெல்த்தியாய் . இன்னும் அழகாய் கண்ணைக் கவரும் வண்ணத்தோடு.

அங்காடி தெரு அஞ்சலி அழகிய சிறந்த நடிகை அவரின் அட்டைப் படத்தோடு அவர் போன்றே அட்டகாசமான அழகோடு வந்திருக்கிறாள் குங்குமம் தோழி. அஞ்சலிக்குப் பிடித்த டாப் 5 பெண்களில் அவரின் அம்மாவும் வந்திருப்பது அழகு.. வாஞ்சை.


என் மனைவி என நடிகர் விஜய் மனைவி சங்கீதா பற்றி உருகுவதும், கவிஞர் வெண்ணிலாவின் என் ஜன்னல் என்ற 'சினிமா, இணையம் , புத்தகம், இடம்' பற்றிய ரசனைகளும். வி ஐ பிக்களின் கிச்சன் பக்கத்தில் செஸ் விஸ்வநாதன் ஆனந்தின் மனைவி அருணாவின் கைப்பக்குவமும், நமக்கெல்லாம் மிகப் பிடித்த எழுத்தாளர் ரமணி சந்திரன் பற்றியும், ரேவதி சங்கரனின் 24 மணி நேரமும் அருமை.

என்ன எடை அழகே, சித்த மருத்துவ உணவுகளும், 30 ஆரோக்கிய சமையல் குறிப்புகள் கொண்ட சின்ன புத்தகமும், அழகு, மேக்கப் பற்றிய பக்கங்களும், லேட்டஸ்ட் நகைகளும், செக் பண்ணுங்க ஹெல்த்தியா இருங்க., ஆர்த்தோ தெரஃபியும் மிகவும் பயனுள்ளவை.

இந்த மாதம் இனிய மாதம் என நோன்பு, விரதம், முக்கிய நாட்கள் , ராசி பலன்கள் வழக்கத்தை விட வித்யாசம்.

வித்யாசமாக கயிற்றில் ஊஞ்சலாடும் சர்க்கஸ் பெண்கள் பற்றியும், கப்பலில் பணியாற்றும் பெண் பற்றியும், தமிழகத்தின் முதல் பைக் பெண் பற்றியும், வில்லேஜ் விஞ்ஞானி பெண் பற்றியும், விடிலிகோவால் பாதிக்கப்பட்டும் தன்னம்பிக்கையுடன் லாப் நடத்தி வரும் சோனியாவும், தன்னம்பிக்கையின் உச்சங்கள்.

பாலீதீன் பை கலெக்ட் செய்து அதற்கு பதிலாய் சணல் பை பேப்பர் பை கொடுக்கும் காமாக்‌ஷி, சணல் பை தயாரிக்க சொல்லிக் கொடுக்கும் உமா ராஜ் ,
பெண் மனம் பற்றிய நிகழ்வும் கேள்வியும், சோம வள்ளியப்பன் அவர்களின் ஆன்லைன் வர்த்தகத்தில் தங்கம் வாங்குவது பற்றிய விளக்கக் கட்டுரையும், சோலார் இன்வர்ட்டர், மற்றும் வழிகாட்டும் ஒளி, ஃபேஸ்புக் பக்கங்கள் அனைத்தும் அருமை.

ஆண் தத்துவ மேதை பற்றித்தானே படித்திருக்கிறோம்.. இதில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் தத்துவ மேதை அறிவரசி ஹைபேஷா பற்றி கூறப்பட்டுள்ளது அருமை.

முக்கியமா ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் என் அன்புத்தங்கை வாணி மல்லிகையின் கவிதை ஒன்று இனித்துக் கிடந்தது.

“உன் பார்வையின் ஸ்பரிசத்தில்
தினம் மலர்பவள்
உன் விரல்களின் ஸ்பரிசத்தில்
ஏன் வியர்க்கிறேன்..?”

செம அழகான கவிதை .. பிடியுங்கள் வாணிக்கு ஒரு பூங்கொத்து, குங்குமம் தோழிக்கு ஒரு பூங்கொத்து ..!!!


7 கருத்துகள் :

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

தோழி இதழுக்கு வாழ்த்துக்கள்!
விரைவில் உங்களது படைப்புகளும் இடம் பெறவும் வாழ்த்துக்கள்!

கணேஷ் சொன்னது…

உங்களுடன் சேர்ந்து நானும் வழங்குகிறேன் ஒரு பூங்கொத்தை. நல்லாதோர் பத்திரிக்கையை அறிமுகம் செய்த உங்களுக்கும் பூங்கொத்து தருகிறேன்க்கா...

அம்பலத்தார் சொன்னது…

புது வரவு நன்றாக இருக்கும் போல தெரிகிறதே. தகவலிற்கும் விமர்சனத்திற்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதிரி


நீங்கள் எப்படித்தான் நேரத்தை ஒதுக்குகிரின்களோ

கருணாகரன்
சென்னை

துரைடேனியல் சொன்னது…

அழகான அறிமுகம். புதிய தோழி தமிழக பெண்களுக்குப் பிடித்தமானவளா? கொஞ்சம் பொறுக்கலாம். ஆனால் நீங்கள் சொன்ன விதத்துக்காக அதை ஒரு முறை படிக்கலாம் என்று எண்ணுகிறேன். பார்க்கலாம். கவிதை அருமை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி நம்பிக்கைப் பாண்டியன்

நன்றி கணேஷ்

நன்றி அம்பலத்தார்

நன்றி கருணா

நன்றி துரை

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...